உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கு; சிறப்பு எஸ்.ஐ., தலைமறைவு

ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கு; சிறப்பு எஸ்.ஐ., தலைமறைவு

சென்னை: வருமான வரித் துறை அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து, 20 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த வழக்கில் தேடப்பட்டு வரும், சென்னை சைதாப்பேட்டை காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ., சன்னி லாய்டு தலைமறைவாகி விட்டார். கடந்தாண்டு, டிச., 16ம் தேதி இரவு, திருப்பத்துார் மாவட்டத்தை சேர்ந்தவரை காரில் கடத்தி, 20 லட்சம் ரூபாய் பறித்த வழக்கில், திருவல்லிக்கேணி காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ., ராஜாசிங், 48 மற்றும் அவரது கூட்டாளிகளான, வருமான வரித் துறை கண்காணிப்பாளர் பிரபு, 31; ஆய்வாளர் தாமோதரன், 41, ஊழியர் பிரதீப், 42, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட, சென்னை, சைதாப்பேட்டை காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ., சன்னி லாய்டு மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.போலீசார் தன்னை நெருங்கி விட்டதை அறிந்த சன்னி லாய்டு தலைமறைவாகி விட்டார். அவரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

போலீசார் கூறியதாவது:

கடந்த 2019ல், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தலைமை காவலராக சன்னி லாய்டு பணிபுரிந்தார். அப்போது, தலைமை காவலர் அசோக்குமார், சிறப்பு எஸ்.ஐ., ராஜசேகரன் ஆகியோருடன் சென்று, திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் சோதனை நடத்தினர். அங்கு தங்கியிருந்த கடத்தல் கும்பலிடம் ஏராளமான மடிக்கணினிகளை பறிமுதல் செய்தனர்.அவர்களை கைது செய்யாமல் இருக்க, சன்னி லாய்டு உள்ளிட்டோருக்கு பல லட்சம் ரூபாய் கைமாறி உள்ளது. இதனால், அப்போதே மூவரும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.ராஜாசிங், சன்னி லாய்டு, வருமான வரி அதிகாரிகள் கூட்டணி, ஹவாலா கும்பலிடம் வழிப்பறி செய்வதையே தொழிலாக செய்து வந்துள்ளது.வழிப்பறி செய்த பணத்தில், ஜாம்பஜார் பகுதியில் உடற்பயிற்சி கூடமும், ஈ.சி.ஆர்., பகுதியில் ரிசார்ட் ஒன்றும், சன்னி லாய்டு வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

visu
ஜன 09, 2025 15:58

அரசு ஊழியர் சிறை என்றால் உடனே பதவி நீங்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால் எப்படி பதவி உயர்வு அளிக்கிறார்கள் தெரியாவில்ல்லை குற்றங்கள் குறையாமல் இருக்க இந்த பாராட்டுதான் காரணம் .இவர் 2019 இல் விடுதியில் திருடியது குற்றம் அதெற்க்கே பதவி நீக்கம் அல்லவே செய்திருக்க வேண்டும் அந்த 100 ரூபாய் பிக் பாக்கெட் அடித்தால் சிறை லட்சக்கணக்கில் கொள்ளை அடித்தால் பதவி உயர்வா ?


Kanns
ஜன 09, 2025 12:10

To have Deterrant Effect, Try FastTrack- maxm 01-03month these AntiPeople SntiSociety PowerMisusing Investigators& Police Criminals for Public Hanging&Video at Same Place of Crime


சுந்தரம் விஸ்வநாதன்
ஜன 09, 2025 11:45

ஏனுங்க இவரு தலையை மறைச்சுக்கிட்டது அந்த கன்னியா குமரி மாவட்டத்துல தானே அங்க தானே நம்ம பாட்டிலுக்கு பத்து ரூபா புகழ் அணில் காரரோட தம்பியும் தன்னோட தலையை இரண்டுவருஷமா மறைச்சுக்கிட்டு யாவாரம் பண்ணிக்கிட்டு இருக்காராம்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜன 09, 2025 11:22

தமிழக ஒன்றிய காவல் துறைக்கு ஒரே ஒரு பொறுப்பு அமைச்சர் இருப்பது போல ஒன்றிய காவல் துறையில் ஒரே ஒரு சன்னி லாய்டுதான் இருக்கிறாரா கோப்பால் ?


சுந்தரம் விஸ்வநாதன்
ஜன 09, 2025 11:16

நானும் கிறிஸ்டியன்தான், நான் கிறிஸ்டியன் கிறிஸ்டியன் கிறிஸ்டியன் என்று கழக முக்கிய புள்ளி அடிக்கடி கூறுவதையும், கிறிஸ்டியன் ஆன இந்த கழக காவலருக்கு ஆட்சி மாற்றத்துக்குப்பின்னர் இடை நீக்கம் ரத்து செய்யப்பட்டு பதவி உயர்வும் கொடுக்கப்பட்டதையும் இணைத்துப் பார்க்கத் தோன்றுகிறதே


sivakumar Thappali Krishnamoorthy
ஜன 09, 2025 11:02

தமிழக காவல் துறையை மத்திய அரசின் கீழ் கொண்டுவாருங்கள் . கவர்னர் காவல் துறையை கண்காணிக்க வேண்டும்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜன 09, 2025 10:31

நிச்சயமாக இவர் உடன் பிறப்பு கூட்டத்தை சேர்ந்தவராகத்தான் இருக்க வேண்டும். 2019ல் இவரை இடை நீக்கம் செய்திருக்கிறார்களாம். 2021 ல் ஆட்சி மாற்றம் வந்த பின், இடைநீக்கமும் ரத்து செய்யப்பட்டு பதவி உயர்வும் பெற்று இருக்கிறார். இப்போது இருக்கும் கழக காவல் துறை நிச்சயமாக இவர் மீது எந்த மேல் நடவடிக்கையும் எடுக்காது. இவருக்கு அடுத்தடுத்து பதவி உயர்வுகள் கொடுக்கப்பட்டு ஒரு நாள் இவர் காவல் துறை தலைவராக ஆகிவிடுவார்


Kannan Chandran
ஜன 09, 2025 10:20

போலிஸ் துறையின் ஞானசேகரன் இவன்.. இதே குற்றத்துக்காக 2019-ல் டிஸ்மிஸ் செய்யப்பட்ட இவனுக்கு ஆட்சி மாறியவுடன் உதவி ஆய்வாளராக பதவி உயர்வு கொடுத்தது விடியல் என்பதை...


N.Purushothaman
ஜன 09, 2025 10:06

இவனை எல்லாம் ஏன் இன்னமும் டிஸ்மிஸ் செய்யாமல் வைத்துள்ளார்கள் ?


Yes your honor
ஜன 09, 2025 10:06

பாராட்டுக்கள், தமிழக போலீசார் பலபேர் ஒரு பர்சனல் கோலோடுதான் பணிசெய்கின்றனர். தான் ஒரு திராவிட மாடல் போலிஸ் என்பதை இந்த சன்னி லாய்டு நிறுபித்துவிட்டார். கட்டிங்க் சரியாக சென்றுவிட்டது போல் உள்ளது, அதனால் தானோ என்னவோ இவர் மட்டும் அப்ஸ்காண்ட்டில் உள்ளார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை