உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.2,500 லஞ்சம்: சிறப்பு எஸ்.ஐ., உள்ளிட்ட போலீசார் மூவர் சிக்கினர்!

ரூ.2,500 லஞ்சம்: சிறப்பு எஸ்.ஐ., உள்ளிட்ட போலீசார் மூவர் சிக்கினர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராமநாதபுரம்: மது பாட்டில் வைத்து இருந்ததற்கு, வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க ரூ.2,500 லஞ்சம் வாங்கிய போலீசார் மூவர், லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கினர்.ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் சிறப்பு சார்பு ஆய்வாளராக கனகசபாபதி, காவலர்களாக முத்து கருப்பையா, மாரி ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.இவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்த ஒருவரிடம், இரண்டு மது பாட்டில் பறிமுதல் செய்ததுடன், இதற்காக வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க ரூ.2,500 லஞ்சம் வாங்கி உள்ளனர்.அப்போது, போலீசாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்கள் மூவரையும் கையும் களவுமாக பிடித்தனர். பிடிபட்ட போலீசாரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

ரூ.2.56 லட்சம் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து லஞ்சம் வசூலிப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார், அந்த அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.2,56,000 பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, போகலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசுவிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

அப்பாவி
ஏப் 30, 2025 07:22

போஸ்டர் அடிச்சு திருடர்கள் ஜாக்கிரதைன்னு ஊர்முழுக்க ஒட்டணும்.


c.mohanraj raj
ஏப் 30, 2025 07:15

தமிழ்நாடு முழுக்க அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் சரக்கு ஆறாக ஓடுகிறது இதில் பாட்டில் வைத்திருந்தது என்ன தவறு ? அவர் விற்பனையை அதிகரிக்க தானே உதவி இருக்கிறார்


Kanns
ஏப் 29, 2025 23:02

WideSpreadi Corruptions & Powers are Major Crimes But 2500 Stolen& Unfits


Padmasridharan
ஏப் 29, 2025 21:14

மது_மாது இவர்களுடன் வந்தால் இப்படித்தானே நடத்துகின்றனர் தமிழ்நாட்டு காவலர்கள் அவர்களை மிரட்டி அதிகார பிச்சை எடுப்பது. இவர்களால் அரசுக்கு அவலப்பெயர், தங்கள் குடும்பங்களுக்கும் கர்மா பலனை சேர்க்கின்றனர்.


தாமரை மலர்கிறது
ஏப் 29, 2025 20:34

கோட்டாவில் முளைத்த திராவிட மருக்கொழுந்து.


S SRINIVASAN
ஏப் 29, 2025 20:33

இதுதான் திராவிட மாடல் காவல்துறை 2.0 வெர்சன் லோடிங்...லோடிங்...லோடிங்...


M S RAGHUNATHAN
ஏப் 29, 2025 20:19

இவர்கள் இட ஒதுக்கீடு மூலம் பயன் பெற்று வேலைக்கு வந்தார்களா அல்லது அரசியல் வாதிகளுக்கு லஞ்சம் கொடுத்து வேலைக்கு சேர்ந்தார்களா என்று சொல்லவும். லஞ்சம் கொடுத்து சேர்ந்தார்களா என்பதை கண்டு பிடிப்பது கஷ்டம். ஆனால் இட ஒதுக்கீட்டின் மூலம் வந்தவர்களா என்று சொல்வது சுலபம்.


naranam
ஏப் 29, 2025 19:28

மிகச் சிறப்பு!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை