உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொத்தடிமை தொழிலில் மீட்கப்பட்டோரின் வாரிசுகள் கல்விக்கு ரூ.27 லட்சம் ஒதுக்கீடு

கொத்தடிமை தொழிலில் மீட்கப்பட்டோரின் வாரிசுகள் கல்விக்கு ரூ.27 லட்சம் ஒதுக்கீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கொத்தடிமை தொழில் முறையில் இருந்து மீட்கப்பட்ட, இருளர் சமூக மாணவர்களின் உயர் கல்விக்கு, அரசு தரப்பில் 27 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழக அரசின் பழங்கு டியினர் நலத்துறை சார்பில், கொத்தடிமை தொழில் முறையில் இருந்து மீட்கப்படும், பழங்குடியினரின் குழந்தைகள், மறுவாழ்வு மற்றும் உயர்கல்விக்கு, அரசு சார்பில் உதவிகள் வழங்கப்படுகின்றன.இருளர் குடும்பம் சமீபத்தில், திருவள்ளூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மீட்கப் பட்ட, இருளர் குடும்பத்தை சேர்ந்த, மூன்று மாணவர் களின் உயர்கல்வி செலவிற்காக, 27 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, பழங்குடியினர் நலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கொத்தடிமைகள் இல்லாத மாநிலமாக, தமிழகத்தை உருவாக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.கொத்தடிமையாக இருந்து மீட்கப்படுவோரில், பழங்குடியினர் இருந்தால், அவர்களின் கல்வி மற்றும் பாதுகாப்பிற்கு, துறை சார்பில் கூடுதல் முக்கியத்தும் அளிக்கப் படுகிறது.சமீபத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மாவட்டங்களில், செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை செய்த, இருளர் சமூகத்தை சேர்ந்த, மூன்று குடும்பத்தினர், தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் மீட்கப்பட்டனர்.சிறப்பு பயிற்சி அக்குடும்பத்தை சேர்ந்த மூன்று சிறுவர்கள் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, வேலை செய்தது தெரிய வந்தது.அவர்களுக்கு, அடிப்படை கணினி பயிற்சி மற்றும் காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின், அகில இந்திய நுழைவுத் தேர்விற்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது.இதில் தேர்ச்சி பெற்ற, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மாணவி பிரியா, சர்தார் வல்லபபாய் படேல் சர்வதேச ஜவுளி தொழில்நுட்ப நிறுவனத்தில், இளங்கலை ஆடை வடிவமைப்பு பிரிவில் சேர்ந்துள்ளார்.மாணவி வளர்மதி, மாணவர் முத்தமிழ் ஆகியோர், எப்.டி.டி.ஐ., எனும் காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில், இளங்கலை டிசைன் பாடப் பிரிவில் சேர்ந்துள்ளனர். இவர்கள் கல்வி கட்டணம் செலுத்த, 27 லட்சம் ரூபாயை, பழங்குடியினர் நலத்துறை ஒதுக்கி உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

N.Purushothaman
செப் 18, 2025 12:41

திருட்டு திராவிடனுங்க தானே நவீன கொத்தடிமைங்க ...அவனுங்க எத்தினி பேருன்னு பட்டியல் கொடுங்க ...


தத்வமசி
செப் 18, 2025 10:59

பெரியாறு எதையோ செய்தாரு, திராவிடியன் ஸ்டாக் எல்லாம் அவ்வளவு தானா? அறுபது வருடங்களுக்கும் மேலாக திராவிடம் ஆண்டும், இன்னுமா கொத்தடிமைத் தனத்தை ஒழிக்க முடியவில்லை ?


raja
செப் 18, 2025 06:21

மொதல்ல உயிரை பணயம் வைத்து நோயாளிகளுக்கு சேவை செய்யும் நற்சுகளுக்கு சம்பளத்தை கொடுங்கடா...ஒதுக்குறானுவிலாம்...


சிட்டுக்குருவி
செப் 18, 2025 06:00

நீங்களும் சுமார் 60 வருடங்களாக சமூகநீதியை ஏற்படுத்துகிண்றீர்கள்.ஆனால் நீதித்தான் நிற்கமருக்கின்றது .இருளர் இருளறாகவேதான் இருக்கின்றனர் .பாட்டாளிகள்பாட்டாளிகளாகவேதான் இருக்கின்றனர் .பட்டியல் இனத்தவர் பட்டியயலினத்தவராகவேதான் இருக்கின்றனர் .உங்கள் சமூக நீதிக்கு ஒரு தெளிவுரை எழுதினால் மக்களுக்கு புரிதல் ஏற்படும் .ஒருவேளை நீங்கள் சாராயம் விற்பதே சமூக நீதிக்காகத்தானா என்பதையும் தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும் .ஏன் என்றால் குடித்தவனுக்கு எல்லாம் சமம் .ஏதும் வித்தியாசம் தெரியாது .


நரேந்திர பாரதி
செப் 18, 2025 05:18

கொத்தடிமை தொழிலில் மீட்கப்பட்டோரின் வாரிசுகள் கல்விக்கு ரூ.27 லட்சம் ஒதுக்கீடு... ம்ம்ம்..இந்த திட்டம் தமிழகத்தின் விடியா மாடல் தீயமூக கொத்தடிமைகளுக்கும் பொருந்துமா?


Kasimani Baskaran
செப் 18, 2025 03:52

கள்ளச்சாராயம் குடித்து செத்த ஒவ்வொருவருக்கும் மாடல் அரசு 15 லட்சம் கொடுத்தது. மொத்தமாக இருளர் சமூகத்து மீட்கப்பட்ட கொத்தடிமைகள் வாரிசுகள் படிக்க வெறும் 27 லட்சம். சிறப்பான சமூக நீதி. இதையும் கமிஷனில் சாப்பிடாமல் இருக்கவேண்டும்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை