உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.28 கோடி லஞ்சம் பெற்ற வழக்கு: மாஜி அ.தி.மு.க., அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு!

ரூ.28 கோடி லஞ்சம் பெற்ற வழக்கு: மாஜி அ.தி.மு.க., அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு!

சென்னை: ரூ.28 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில், ஒரத்தநாடு எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கத்திற்கு சொந்தமான வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளராகவும், ஒரத்தநாடு எம்.எல்.ஏ.வாகவும் உள்ளார். அவர் அமைச்சராக இருந்த போது, ரூ.28 கோடி லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அவரின் 2 மகன்கள், உள்பட 11 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hnmj2jf0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், இன்று(அக்.,23) தஞ்சாவூர், ஒரத்தநாடு அருகே உள்ள உறந்தைராயன்குடிகாடு பகுதியில் வைத்திலிங்கத்திற்கு சொந்தமான வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 11 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் எம்.எல்.ஏ.,க்கள் குடியிருப்பில் உள்ள வைத்திலிங்கம் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். எம்.எல்.ஏ., விடுதியில் வைத்திலிங்கம் இல்லாததால், அவரது உதவியாளர் இடம், வீட்டின் சாவியை பெற்றுக்கொண்டு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.வைத்திலிங்கம் வீட்டில் சோதனை நடைபெற்ற அதே தருணத்தில் அவரது மகனின் தி.நகர் வீட்டிலும் அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கினர். பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற சோதனைகளின் போது முறைகேடு தொடர்பான, ஆவணங்கள் கைப்பற்றப்பட்டனவா? என்பது குறித்து அதிகாரிகள் தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. அறப்போர் இயக்கத்தின் புகாரின் பேரில், தான், அ.தி.மு.க., மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பூட்டை உடைத்து சோதனை

ஒரத்தநாடு அருகே பேய்கரும்பன்கோட்டையில் வைத்திலிங்கத்தின் மைத்துனர் பன்னீர்செல்வம் வீடு உள்ளது. இங்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு சென்ற போது வீடு பூட்டிக்கிடந்தது. இதனையடுத்து உறவினர்கள் முன்னிலையில் கடப்பாறையால் அதனை உடைத்து உள்ளே சென்று சோதனையில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

என்றும் இந்தியன்
அக் 23, 2024 16:21

வைத்தி இதெல்லாம் வேண்டுமா உனக்கு திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசு ஆட்சிக்கு வந்ததுமே நீ இந்த கட்சியில் மாறிப்போயிருந்தால் உன் மீது ஒரு லஞ்ச வழக்கு என்று வந்திருக்கவே வந்திருக்காது


Ramesh Sargam
அக் 23, 2024 13:21

அப்ப மற்ற மாஜிக்களெல்லாம் நேர்மையாக சம்பாதித்தவர்களா..? எல்லோரையும் சோதனை பண்ணுங்கப்பா...


P.Sekaran
அக் 23, 2024 11:44

மனது கஷ்டமாக உள்ளது அந்த காலத்தில் கஷ்டத்திற்காக பத்து ரூபாய் தபால் துறையில் எடுத்துவிட்டார் என்று வேலையை விட்டு நீக்கி விட்டார்கள். அந்த சட்டம் இப்பொழுது இருக்கிறதா என்று தெரியவில்லை. பெரிய திருடனுக்கு சட்டம் வளைந்து கொடுக்கிறது . இதுதான் இந்திய அரசின் சட்டம்


Ganesun Iyer
அக் 23, 2024 10:47

கேஸு கிடைத்தா?


Mohamed Younus
அக் 23, 2024 10:25

பி .ஜே .பி வளர்த்து விடுகிற கள்ளப்பிள்ளைகள் எல்லாம் இப்படி தான் வளருது . இப்ப என்ன ..அஜித் பவார் மாதிரி பி .ஜே .பி கூட்டணியில் சேர்ந்தால் வாஷிங் மெஷினில் போட்டு சுத்தம் ஆக்கி விடுவோம் .


Shekar
அக் 23, 2024 11:31

அட, நம்ம அணில் அமைச்சர் மேல நம் விடியலாரே எவ்வளவு சேற்றை வரி இரைத்து, இப்போ அவரே, அணிலாரை திராவிட வாசிங் மெசின்ல போட்டு வெளுத்து சொக்க தங்கமா தன் இதயத்தில் வச்சிருக்காரு அதை விட வேற உதாரணம் எதுக்கு.


karutthu kandhasamy
அக் 24, 2024 15:57

ஆமாம் அப்படிதான் என நினைத்து சரத்குமார் கட்சியை பி ஜே பி உடன் இணைத்தார் இப்போது காணாமல் போய்ட்டார் .விஜய தரணி காங்கிரஸ் லிருந்து பி ஜே பி க்கு தாவினார் அவரும் காணாமல் போய்ட்டார் பி ஜே பி வர வர சரியில்லை அமித்ஷா தி மு க வை தன பக்கம் இழுத்து அண்ணா திமுகவை உடைத்த மாதிரி தி மு க வை உடைக்க முயற்சிக்கிறார் எது நடக்கணுமோ அது நன்றாகவே நடக்கும்


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
அக் 23, 2024 10:02

இப்படிப்பட்ட ரைடுகள் அனைத்துமே கண்துடைப்புக்காகத்தான் என்பதை அனைவரும் அறிவார்கள். முதல் மனிதன் தப்பு செய்த போதே கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால் இப்படி திரும்ப திரும்ப தப்புகள் நடக்குமா? தப்பிவிடலாம் என்பதால்தான் அனைவரும் தப்பை திரும்ப திரும்ப செய்கிறார்கள். நீதிமன்றங்களும் இதில் விதி விலக்கல்ல. இன்றைக்கு அரசியல்வாதிகள், காவல்துறை, நீதிமன்றங்கள் என்று அனைவரும் கூடி திட்டமிட்டு கொள்ளையடிக்கிறார்கள். பிடிக்கப்பட்டுவிட்டால் ஒருவரை ஒருவர் காப்பாற்றுகிறார்கள். சட்டம் நீதி என்பதெல்லாம் பொதுமக்களுக்குத் தான். பாவம் பொதுமக்கள்.


J.Isaac
அக் 23, 2024 16:42

பிஜேபியில் இணைந்தால் புனிதர்.


karutthu kandhasamy
அக் 24, 2024 16:02

100% correct


sundarsvpr
அக் 23, 2024 09:32

லஞ்சம் வாங்குபவன் குற்றவாளிகள் என்றாலும் இதற்கு உறுதுணையாய் இருந்த நபர்களை பற்றி ஊடகங்களில் வருவதில்லை. தெரிந்தும் கண்டும் காணாமல் இருப்பது. அமைச்சர்களை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு அமைச்சர் ஊழல் செய்தால் தலைமை அமைச்சருக்கு மற்றும் அமைச்சர் கட்டுப்பாட்டிலுள்ள அரசு ஊழியர்கள் குறிப்பாய் அடிப்படை ஊழியருக்கு தெரியாமல் இருக்காது. இவர்களும் ரகசியமாய் கண்காணிக்கப்படவேண்டும்.


Smba
அக் 23, 2024 09:24

ஒன்றும் ஆகாது


Thiagarajan Subramanian
அக் 23, 2024 09:03

சரி .என்னென்ன பிடித்தார்கள், கைப்பற்றினார்கள், நடவடிக்கை என்ன என்பதே தெரிவதில்லை .உடனுக்குடன் நடவடிக்கை எடுக்காவிடில் கோர்ட் வாய்தா என்று ஒரு 30 வருடங்கள் போய்விடும் ,எல்லா ரெய்டுமே இப்படித்தான் நம் இந்திய திருநாட்டில். வருத்தப்பட வேண்டியதும் வெட்கப்பட வேண்டியதும்தான்


Indian
அக் 23, 2024 09:00

கம்யூனிஸ்டுகள் தவிர அனைத்து அரசியல்வாதிகளும் சொத்துச் சேர்த்துள்ளனர். இந்தியா முழுவதும் இது தான் நிலைமை .....


Velayutham rajeswaran
அக் 23, 2024 09:29

பினராயி விஜயன் மகள் கதை தெரியாதா