மேலும் செய்திகள்
இ - பாஸ் திட்டம் தோல்வி; ஊட்டியில் தீரவில்லை நெரிசல்
14 minutes ago
பழனிசாமியை வரவேற்று த.வெ.க., சார்பில் பேனர்
25 minutes ago
வேலூர், தர்மபுரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கன மழை
41 minutes ago
சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.29 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.சிவகாசி அருகே திருத்தங்கல் விருதுநகர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பிச்சைமணி 52. இவரது மகள் நித்யலட்சுமி பி.இ., முடித்துவிட்டு அரசு வேலைக்கு முயற்சி செய்து வருகிறார். இதற்காக சிவகாசி ரிசர்வ் லைனில் உள்ள டியூஷன் சென்டரில் படித்து வந்தார். டியூஷன் சென்டர் உரிமையாளர் ஸ்ரீவில்லிபுத்துார் ரோடு பகுதியைச் சேர்ந்த பெரியசாமி உங்களது மகளுக்கு சார்பதிவாளர் வேலை வாங்கி தருகிறேன், அதற்கு ரூ.50 லட்சம் கொடுக்க வேண்டும் என பிச்சை மணியிடம் கூறியுள்ளார். அதனை நம்பிய பெரியசாமி அவரிடம் காசோலையாகவும் பணமாகவும் ரூ. 29 லட்சம் கொடுத்தார். ஆனால் அவர் கூறியபடி அரசு வேலை வாங்கித் தரவில்லை. இதனை தொடர்ந்து பெரியசாமி, அவரது மனைவி ராமலட்சுமியிடமும் கொடுத்த பணத்தை பிச்சைமணி கேட்டதற்கு திருப்பித் தர முடியாது எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்தனராம். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
14 minutes ago
25 minutes ago
41 minutes ago