உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உயிரியல் பூங்காக்களுக்கு ரூ.35 கோடி ஒதுக்கீடு

உயிரியல் பூங்காக்களுக்கு ரூ.35 கோடி ஒதுக்கீடு

சென்னை : வண்டலுார் உயிரியல் பூங்கா உள்ளிட்ட, நான்கு பூங்காக்கள் மேம்பாட்டிற்கு, 35 கோடி ரூபாய் வழங்க, முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாடு வன உயிரின ஆணையத்தின் 22வது ஆட்சிமன்ற கூட்டம், தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. இதில், வனத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், தலைமைச் செயலர் முருகானந்தம், வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு, நிதித் துறை செயலர் உதயசந்திரன், சுற்றுச்சூழல் துறை இயக்குநர் ராகுல்நாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வண்டலுார் உயிரி யியல் பூங்கா, கிண்டி சிறுவர் இயற்கை பூங்கா, சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, வேலுார் அமிர்தி உயிரியல் பூங்கா ஆகியவற்றின் மேம்பாட்டிற்கு, 35 கோடி ரூபாய் வழங்க, கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. உயிரியல் பூங்கா நிர்வாகத்தின் தரத்தை உயர்த்தவும், வன விலங்குகளின் நலனை உறுதிப்படுத்தவும், பொதுமக்களிடம் வனவிலங்குகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை