உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கலால் உதவி கமிஷனர் காரில் சிக்கியது ரூ.3.75 லட்சம்; மடக்கியது லஞ்ச ஒழிப்பு போலீஸ் படை!

கலால் உதவி கமிஷனர் காரில் சிக்கியது ரூ.3.75 லட்சம்; மடக்கியது லஞ்ச ஒழிப்பு போலீஸ் படை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விருதுநகர்: விருதுநகரில் ரூ.3.75 லட்சத்துடன் காரில் சென்ற மாவட்ட கலால் துறை உதவி கமிஷனர் கணேசனிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.திருச்சியைச் சேர்ந்த கணேசன் 58, விருதுநகர் மாவட்ட கலால் துறை உதவி கமிஷனராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்றிரவு விருதுநகரில் இருந்து திருச்சிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சத்திர ரெட்டியப்பட்டி போலீஸ் சோதனைச் சாவடியில் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் காரை சோதனையிட்டனர். அதில் ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் இருப்பது தெரிய வந்தது.இதனையடுத்து அவரை விருதுநகர் கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரித்தனர். தனியார் மதுக்கூடங்கள் மற்றும் மெத்தனால் பயன்படுத்தும் நிறுவனங்களில் இருந்து பணத்தை லஞ்சமாக பெற்றுக் கொண்டு சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுவது விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர். பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

naranam
மார் 09, 2025 20:06

மானங்கெட்ட ஈனப் பிறவிகள்.


K.n. Dhasarathan
மார் 09, 2025 14:22

இப்படிப்பட்ட அரசு அலுவலர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். இவரது சொத்து முழுதும் பறிமுதல் செய்து கோர்ட் அனுமதி இல்லாமல் ஒரு ரூபாய் கூட இவர் எடுக்க முடியாதபடி பண்ணனும், எந்த ஒரு சிபாரிசுகளை ஏற்க கூடாது, அவரது விசாரணையில் அவர் கொள்ளையடித்த லஞ்சம் எவ்வளவு, உண்மையான சம்பாத்தியம் எவ்வளவு, சொத்துக்கள் குவிப்பு, யார் யார் பெயரில், முழு விபரம் வரும் வரையில் சஸ்பெண்ட் செய்து வைக்கவும், இங்கே தட்டினால், அங்கெ லஞ்சம் வாங்குபவர்கள் வலி க்கணும், காவல் துரையின் மான்பை காப்பாற்றுங்கள், யாராவது சொன்னார்கள் என்று பக்கத்து ஊருக்கு ட்ரான்ஸபெர் செய்து குற்றவாளிகளை காப்பாற்றாதீர்கள், அவர்கள் ங்கு சென்றாலும் மாற மாட்டார்கள்.


Ramesh Sargam
மார் 09, 2025 11:45

திமுக மற்றும் அதிமுக இந்த இரண்டும் தமிழகத்தில் ஒழிந்தால்தான், லஞ்சம் முற்றிலும் தமிழகத்தில் ஒழியும்.


Kanns
மார் 09, 2025 10:47

Corruption & Briberies are Extensive-Widespread and Dangerous Cancer. But All RulingParty Officials-Rowdies etc Will Escape. FastTrack All Corruption-Briberies Cases for Severe Punishments incl Public Deaths Within 03 months


Kasimani Baskaran
மார் 09, 2025 07:30

நூதன வசூலாக இருக்கிறது. பத்து ரூபாய் நபருக்கு தொடர்பு இருக்கிறதா அல்லது தனிப்பட்ட வசூலா என்று அறிவது நல்லது. ஒய்வு பெற ஒரு சில ஆண்டுகள் இருக்கும் பொழுதும் கூட இந்துகளுக்கு பேராசை விடுவது இல்லை. மாடல் ஆட்சியில் லஞ்சம் மாநில அரசுடைமையாக்கப்பட்டு விட்டது என்றால் அது மிகையாகாது.


பிரேம்ஜி
மார் 09, 2025 07:14

வசூல் ராஜாக்கள்! சம்பளம் செலவுக்கு போதவில்லை! எனவே கைநீட்டி விட்டார்! மன்னிப்பு கொடுத்து, ஊதிய உயர்வு, பதவி உயர்வு கொடுத்தால் சிறப்பாக செயல்படுவார்!


Kalyanaraman
மார் 09, 2025 07:12

சட்டங்களையும் தண்டனைகளையும் கடுமையாக்கப்பட வேண்டும். நீதி விசாரணை துரிதமாக நடைபெற வேண்டும். நீதிபதிகளே லஞ்சம் வாங்கும் காலம் இது ?


புதிய வீடியோ