உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ., வேட்பாளர் நயினார் தகுதி நீக்கம் கோரி வழக்கு:

பா.ஜ., வேட்பாளர் நயினார் தகுதி நீக்கம் கோரி வழக்கு:

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை, திருநெல்வேலி தொகுதி பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சுயேச்சை வேட்பாளர் மனு தாக்கல் செய்துள்ளார்.திருநெல்வேலி லோக்சபா தொகுதியில், சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் ராகவன் என்பவர் தாக்கல் செய்த மனு:சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், 4 கோடி ரூபாய் பிடிபட்டது தொடர்பாக, பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி, அமலாக்கத் துறையில் மனு அளித்துள்ளேன். வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் வைத்திருந்ததால், தகுதி நீக்கம் செய்யும்படி தேர்தல் ஆணையத்துக்கும் மனு அளித்தேன்.இந்த மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கும், தகுதி நீக்கம் கோரிய மனு மீது நடவடிக்கை எடுக்க, தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை அவசர வழக்காக விசாரிக்கும்படி, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அடங்கிய முதல் பெஞ்ச் முன், வழக்கறிஞர் இம்மானுவேல் முறையிட்டார்.மனுவை இன்று விசாரிப்பதாக முதல் பெஞ்ச் தெரிவித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Cheran Perumal
ஏப் 18, 2024 02:20

பணமும் திமுக வினுடையது, தற்போது வழக்கும் திமுக வின் பினாமியால் போடப்பட்டுள்ளது


Kumar Kumzi
ஏப் 18, 2024 00:05

விடியாத விடியலுக்கு பயம் தேர்தலுக்கு பிறகு ஒனக்கு நிச்சயம் ஆப்பு இருக்கு


M Ramachandran
ஏப் 17, 2024 22:13

ஒரு திரூடர்கள் கட்சியின் பயம் மிகுந்து நாத்தம் பிடிச்ச பெருச்சாளியின் அடி பொடி வேலையிது


ஆரூர் ரங்
ஏப் 17, 2024 22:05

தேர்தல் மனு தாக்கல் முடிந்த பிறகு முடிவுகள் வெளியிடப்படும் வரை தேர்தல் நடவடிக்கைகளில் கோர்ட் தலையிடாமல் இருப்பது நீண்டநாட்களுக்கு முன்பே கோர்ட் செய்த முடிவு. சுயேச்சை போல பலர் போலியாக திமுகவால் நிறுத்தப்பட்டுள்ளனர்.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை