உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.4 லட்சம் மானியம் பெற ரூ.4 ஆயிரம் கமிஷன்

ரூ.4 லட்சம் மானியம் பெற ரூ.4 ஆயிரம் கமிஷன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிவகங்கை: சிவகங்கையில் கட்டு மான தொழிலாளர்கள் வீடு கட்ட முழு மானியமாக ரூ.4 லட்சம் பெறுவதற்கு, ரூ.4 ஆயிரம் கமிஷன் கொடுக்க வேண்டியதிருப்பதாக புகார் எழுந்துள்ளது.தொழிலாளர் நல ஆணையம் மூலம் கட்டுமான தொழிலாளர்களில், வீடற்ற, ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் வீடு கட்டிக்கொள்ள கட்டுமான தொழிலாளர் நல வாரியம் மூலம் நபருக்கு ரூ.4 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. தொழிலாளரிடம் வாரிய அட்டை, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம், சொந்த பெயரில் பட்டா இருத்தல் வேண்டும். கட்டுமான தொழிலாளர் நல வாரிய நிதியில் இருந்து இவர்களுக்கு பணம் வழங்கப்படுகிறது. ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்.

கட்டாய வசூல்

இத்திட்டத்தில் வீடு கட்ட ரூ.4 லட்சம் பெற்றுத்தருவதாக கூறி கட்டுமான தொழிலாளர் சங்கம் பெயரில் ஒவ்வொருவரிடம் இருந்தும் ரூ.4 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. இதில் ரூ.2 ஆயிரம் சங்கத்திற்கும், ரூ.2 ஆயிரம் தொழிலாளர் நல அலுவலகத்திற்கும் வழங்க வேண்டும் என தெரிவிப்பதாக கூறுகின்றனர். வாரியம் மூலம் பெறும் ரூ.4 லட்சத்திற்காக கமிஷன் வசூலிக்கும் சங்கங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்டுமான தொழிலாளர்கள் குமுறினர். சிவகங்கை தொழிலாளர் நல உதவி கமிஷனர் சதீஷ்குமார் கூறியதாவது: ஆன்லைனில் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்தால் போதும். இதற்காக யாரிடமும் பணம் கொடுக்க தேவை இல்லை. பயனாளிக்கு வேறு எங்கும் வீடுகள், சொத்துக்கள், நிலம் இருக்கக்கூடாது. வீடு கட்ட ரூ.4 லட்சம் பெற தகுதி இருக்கிறதா என்பதை உறுதி செய்த பின்பே தொகை வழங்கப்படும். எனவே ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது கம்ப்யூட்டர் சென்டர், சங்கங்கள் போன்றவற்றில் யாரிடமும் கமிஷன் வழங்க தேவையில்லை. பணம்கேட்டால் நேரடியாகபுகார் தெரிவிக்கலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Barakat Ali
ஏப் 08, 2025 10:45

முன்னேறிய மாநிலம் ..... முன்னோடி மாநிலம் .....


V RAMASWAMY
ஏப் 08, 2025 09:30

மறைந்த மேதை திரு சோ அவர்கள் சொன்னது போல் இனி லஞ்சம் வாங்குவதற்கு தனி கவுண்டர்கள் அமைக்கவேண்டியது தான் பாக்கி. மற்றபடி எந்த வேலையும் சிறிதோ பெரிதோ கையூட்டு கொடுத்தால் தான் நடக்கும் என்பது தான் உண்மை. இனி அரசே ஊழியர்களுக்கு சம்பளம் தவிர கிம்பளமும் கொடுத்தால் தான் வேலைக்கு வருவார்கள் அதற்கு மேல் போட்டு கொடுத்தால் கொஞ்சம் வேலை செய்வார்கள் என்கிற நிலை உருவானாலும் ஆச்சரியம் இல்லை. இதற்கு மூல காரணம் எந்த கட்சி என்று மக்களுக்கு தெரியும். அதனை உணர்ந்து 2026 தேர்தலில் பாடம் புகட்டவேண்டும்.


அப்பாவி
ஏப் 08, 2025 09:06

இவிங்க கிட்டே பிறீங்க? அல்லாருக்கும் வூடு குடுக்கும் பெரியவர் கிட்டே போக வேண்டியதுதானே?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை