வாசகர்கள் கருத்துகள் ( 2 )
ரூ. 500 லஞ்சம் வாங்குபவர்களை பிடிக்கிறார்கள். 5 லட்சம், 5 கோடி வாங்குபவர்களை பிடிப்பதில்லையே ... ஏன்?
அப்ப கோடிகளில் கொள்ளை அடித்தவர்கள்... வெளியே.. வெட்கம் இல்லாமல்
அரியலூர்: அரியலூர் அருகே மீட்டர் பாக்ஸ் வைக்க 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக உதவியாளர் கைது செய்யப்பட்டார்.அரியலூர் மாவட்டம் செட்டி திருகோணம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் வீரமுத்து,35. இவர் தனது வீட்டுக்கு மின் இணைப்பு வழங்கி மீட்டர் பாக்ஸ் வைக்க தேளூர் உதவி பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.மீட்டர் பாக்ஸ் வைக்க வணிக உதவியாளர் சாமிநாதன், 46, ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். லஞ்சம் தர விருப்பமில்லாத வீரமுத்து இதுகுறித்து அரியலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் செய்தார்.புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்தனர். சாமி நாதனை அலுவலகத்தில் சந்தித்த வீரமுத்து 500 ரூபாயை லஞ்சமாக கொடுத்தார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஹேம சித்ரா தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சாமி நாதனை கையும் களவுமாக கைது செய்தனர்.
ரூ. 500 லஞ்சம் வாங்குபவர்களை பிடிக்கிறார்கள். 5 லட்சம், 5 கோடி வாங்குபவர்களை பிடிப்பதில்லையே ... ஏன்?
அப்ப கோடிகளில் கொள்ளை அடித்தவர்கள்... வெளியே.. வெட்கம் இல்லாமல்