மேலும் செய்திகள்
ராணுவ பயிற்சி அகாடமி - எஸ்.ஆர்.எம்., ஒப்பந்தம்
28-May-2025
சென்னை:சென்னை காட்டாங்கொளத்துார், எஸ்.ஆர்.எம்., பல்கலையில், 221 விளையாட்டு வீரர் - வீராங்கனையருக்கு, பல்கலையில் சேருவதற்கான ஆணை மற்றும் உதவித்தொகை வழங்கும் விழா நேற்று நடந்தது. எஸ்.ஆர்.எம்., பல்கலையில் செஸ், கால்பந்து, வாலிபால், கபடி, டென்னிஸ் உட்பட பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கட்டணம் எதுவும் இல்லை. அந்த மாணவர்களின் ஒட்டுமொத்த படிப்பு கட்டணம், தங்கும் வசதி, பயிற்சிக்கான செலவுகள் அனைத்தையும் பல்கலையே ஏற்றுக் கொண்டது.புதிதாக பல்கலையில் சேர்ந்த 221 விளையாட்டு வீரர் - வீராங்கனையருக்கான உதவித்தொகை 55 கோடி ரூபாய், அந்தந்த விளையாட்டு பிரிவுக்கு வழங்கப்பட்டது. அத்துடன், அந்த மாணவர்கள் பல்கலையில் சேர்க்கப்பட்டதற்கான ஆணை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், எஸ்.ஆர்.எம்., பல்கலை துணைவேந்தர் முத்தமிழ்செல்வன், பதிவாளர் பொன்னுசாமி, விளையாட்டு இயக்குநர் மோகனா கிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
28-May-2025