வாசகர்கள் கருத்துகள் ( 1 )
யாரையோ மாட்டிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் பணம் போகும் வழியை காட்ச்சென்றது போல இருக்கிறது. சுபம்...
சென்னை: அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவனங்களுக்கு, அமலாக்கத் துறை அதிகாரிகள், 566.5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.சென்னை கிண்டியில், பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும், 'ஜி.ஐ.ரீடெய்ல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம்' செயல்படுகிறது. இதன் இணை நிறுவனமாக, 'ெஹர்ம்ஸ் ஐ டிக்கெட் பிரைவேட் லிமிடெட்' செயல்படுகிறது.கடந்த ஒரு வாரத்திற்குள், இந்நிறுவனத்தின் ஏராளமான பங்குகள், மொரீஷியஸ் நாட்டில் உள்ள நிறுவனத்திற்கு மாற்றப்பட்டு உள்ளன. அங்கிருந்து அப்பங்குகள், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள, இந்தியர் ஒருவருக்கு விற்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, தனியார் நிறுவனங்களுக்கு, 195 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. இத்தகைய செயல், அன்னிய செலாவணி மோசடி சட்டத்தின் கீழ் வருவதால், இரு நிறுவனங்கள் மீதும், சென்னை அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து, 566.5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.மேலும், இந்நிறுவனங்களுக்கு சொந்தமான, 195 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கவும், தீவிரம் காட்டி வருகின்றனர்.
யாரையோ மாட்டிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் பணம் போகும் வழியை காட்ச்சென்றது போல இருக்கிறது. சுபம்...