உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறுபான்மையினருக்கு ரூ.75 கோடி கடன்: திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர்

சிறுபான்மையினருக்கு ரூ.75 கோடி கடன்: திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில், சிறுபான்மையினருக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், 75 கோடி ரூபாய் கடன் வழங்கும் பணியை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம், 1999ல் அமைக்கப்பட்டது. இதன் வழியே, சிறுபான்மையினருக்கு சிறு வணிகம், வியாபாரம் செய்வதற்கு, குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. சிறுபான்மையின மக்கள் பொருளாதார முன்னேற்றத்திற்காக, தனிநபர் காலக்கடன், கைவினை கலைஞர்களுக்கான விரசாத் கடன், சிறுகடன், கல்விக்கடன் போன்றவை வழங்கப்படுகின்றன.நடப்பாண்டு, 75 கோடி ரூபாய் கடன் வழங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்று தலைமை செயலகத்தில், சுய தொழில் செய்ய, தனி நபர் கடனாக, இருவருக்கு 3.80 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, முதல்வர் ஸ்டாலின் வழங்கி கடன் வழங்கும் பணியை துவக்கி வைத்தார்.அத்துடன், தமிழகத்தில் உள்ள தொன்மையான கிறிஸ்துவ தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், தர்காக்கள் போன்றவற்றை புனரமைத்தல், பழுது பார்த்தல் பணிகள் செய்ய, அரசு நிதிஉதவி வழங்குகிறது. கிறிஸ்தவர்களுக்கான கல்லறை தோட்டம்; முஸ்லிம்களுக்கான கபர்ஸ்தான்களுக்கு, புதிதாக சுற்றுச்சுவர், பாதை அமைத்தல் போன்ற பணிகளுக்கு நிதிஉதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டங்களின் கீழ், பல்வேறு பணிகளை மேற்கொள்ள, 3.61 கோடி ரூபாய்க்கான காசோலைகளை, சம்பந்தப்பட்ட தேவாலயங்கள் மற்றும் தர்காக்களின் நிர்வாகிகளிடம் முதல்வர் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், அமைச்சர் நாசர், தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் நவாஸ்கனி, எம்.எல்.ஏ., இனிகோ இருதயராஜ் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

S. Neelakanta Pillai
டிச 15, 2024 06:10

சிறுபான்மையினரின் பொருளாதார வலிமை எவ்வாறு இருக்கிறது என்பதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். வறுமை எதனால் வந்தது அதற்குரிய அடிப்படை காரணம் என்ன என்று கண்டறிந்து அதை நிவர்த்தி செய்வதற்கு சிறுபான்மையினருடன் ஆலோசித்து சரி செய்ய வேண்டும். அதைச் செய்யாமல் பணத்தை வாரி வழங்குவதில் அரசியல் ஓட்டு மட்டுமே கவனத்தில் இருப்பதாக அப்பட்டமாக தெரிகிறது.


Bahurudeen Ali Ahamed
டிச 14, 2024 19:09

75 கோடி கடன் திட்டம்தான் சகோதரர்களே, இலவச திட்டம் ஒன்றுமில்லை கவலை கொள்ளவேண்டாம்.


RAMAKRISHNAN NATESAN
டிச 14, 2024 14:44

பிரித்தாளுவது யார் ????


nv
டிச 14, 2024 11:13

சிறுபான்மையினர் கொடுக்கும் வரி எவ்வளவு? இவனுங்களுக்கு என்ன தனி சலுகை? நாம் ஹிந்துக்கள் ஒன்று சேர்ந்து வாக்களிக்கவில்லை என்றால் நாம் பிச்சை எடுக்க வேண்டி வரும்.. ஹிந்துக்களே விழிக்க வேண்டும்..


ram
டிச 14, 2024 10:47

ஹிந்துக்கள் வரி பணம் சிறுபான்மை ஓட்டுக்காக, திருட்டு திமுகவில் இருக்கும் ஹிந்துக்கள் புரிந்தால் நல்லது. என்னமோ இவர்கள் கட்சி டிரஸ்ட் பணத்தை கொடுப்பது மாதிரி.


Madras Madra
டிச 14, 2024 10:28

எனக்கு தெரிஞ்சி பண பற்றாக்குறை இருப்பதாக தெரியவில்லை


orange தமிழன்
டிச 14, 2024 10:21

இது பெரும்பான்மை மக்களின் வரி பணம்......உங்களுக்கு வேண்டுமென்றால் உங்க கட்சியிலிருந்து அல்லது சிவப்பு அசுரணிடமோ பெற்று செலவிடுங்கள்.......


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 14, 2024 08:56

யார் அச்சன் வீட்டுப்பணம் ???? சின்ன தத்தி கேட்ட கேள்விதான் ....


sridhar
டிச 14, 2024 08:53

75000 கோடி கொடுங்க , அவங்க வாக்குகளை அள்ளுங்க , ஹிந்துக்கள் தான் ஏறி மிதிச்சாலும் உங்களுக்கு வோட்டு போட தயாரா இருக்காங்களே .


karthik
டிச 14, 2024 08:45

சிறுபான்மையினர் என்றால் நவ துவாரங்களை திறந்து கொள்ளும்.. இந்துக்கள் என்றால் அதே நவ துவாரங்கள் இருக்க மூடிக்கொள்ளும்... விஸ்வகர்மா திட்டம் மூலம் பாரம்பரிய தொழில் செய்பவர்களுக்கு கடன் திட்டம் என்று மத்திய அரசு அறிவித்தால் அதில் சாதி இருக்கு குலம் இருக்கு என்று சொல்லி இந்துக்களை பிரித்து அரசியல் செய்வது.. சிறுமான்மையினர்க்கு தனி கடன் திட்டம் என்றால் நவ துவாரமும் திறந்து வாய் பிளந்து வழி விடும். தமிழக இந்துக்கள் என்று தான் புரிந்துகொள்வார்களோ. தமிழக இந்துக்களுக்கு பொங்கல் தீபாவளிக்கு ரேஷன் கார்டுக்கு 1000 பிச்சை போட்டால் அனைத்தையும் மறந்துவிடும் மதி இல்லா ஜென்மங்கள்.


சமீபத்திய செய்தி