உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வங்கியில் ரூ.8 கோடி பணம், 50 கிலோ தங்கம் கொள்ளை

வங்கியில் ரூ.8 கோடி பணம், 50 கிலோ தங்கம் கொள்ளை

விஜயபுரா : கர்நாடகாவில், எஸ்.பி.ஐ., வங்கி ஒன்றில் புகுந்த முகமூடி கும்பல், ஊழியர்களை கட்டிப்போட்டு, 8 கோடி ரொக்கம், 50 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது. கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டம், சடசனா தாலுகாவில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி உள்ளது. இந்த பகுதி, மஹாராஷ்டிரா எல்லையை ஒட்டியுள்ளது. நேற்றிரவு 7:00 மணியளவில் வங்கி ஊழியர்கள், பணியை முடித்துக் கொண்டு வீட்டுக்கு புறப்பட தயாராகினர். அப்போது, முகமூடி அணிந்த மர்ம கும்பல், திடீரென முன் வாசல் வழியாக வங்கிக்குள் நுழைந்தது. அவர்கள் அடர்ந்த பச்சை நிறத்தில், ராணுவத்தினர் அணிவது போன்ற நிறத்தில் உடை அணிந்திருந்தனர். நாட்டு துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருந்தனர். அவற்றை காட்டி, வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்களை, 'சத்தம் போடக்கூடாது' என மிரட்டினர். அனைவரின் கை, கால்களை கட்டிப்போட்டனர். அதன்பின் லாக்கரில் இருந்த பணம், தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு, வாகனங்களில் தப்பினர். இதுகுறித்து, தகவலறிந்து போலீசார், சம்பவம் நடந்த வங்கிக்கு வந்து பார்வையிட்டனர். அதிகாரிகள், ஊழியர்களிடம் மர்ம கும்பல் குறித்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், 8 கோடி ரூபாய் ரொக்கம், 50 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. கொள்ளை நடந்த வங்கி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை, போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கொள்ளையர்கள் மஹாராஷ்டிராவை நோக்கிச் சென்றது தெரிய வந்துள்ளது. அவர்கள் அம்மாநிலத்துக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது. போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Amar Akbar Antony
செப் 17, 2025 11:38

அரசு ஊழியர்கள் தன் பொறுப்பை கவனிப்பதில்லை. இப்படியொரு சம்பவம் நடக்க வாய்ப்புகள் இருக்கும் இன்றைய பொருளாதார சூழல் மற்றும் நீதிமன்ற சட்ட வழுக்கல்கள். இந்த வங்கியின் ஊழியர்கள் ஏன் தடுக்க துணியவில்லை? எதற்க்காக பாதுகாப்பின்றி இவ்வளவு பெருந்தொகையை வங்கியில் வைத்திருக்கிறார்கள்? இனி வங்கி தனிப்பட்ட லாக்கர்கள் திறக்கப்பட்டால் உடைக்கப்பட்டால் உடனுக்குடன் செய்தி உரியவர்கள் மற்றொரு மொபைல் எண்ணிற்கும் செல்லவேண்டும்.வங்கி பனி நேரமல்லாத சமயத்தில் பண லாக்கர்கள் திறக்கப்பட்டால் உடனுக்குடன் அருகிலுள்ள காவல்நிலையத்திற்கும் மாவட்ட வங்கி தலைமையிடத்திற்கும் இந்த செய்தியும் அலாரமாக செல்லவேண்டும். இந்த கொள்ளைக்கூட்டத்தினர் கண்டிப்பாக அரியானா ராஜஸ்தான் பார்டரிலுள்ள பாவப்பட்ட மக்களாக இருக்கும். பிடித்தால் தயவுதாட்சனையின்றி கொன்றுவிடவும்.


Venugopal S
செப் 17, 2025 11:27

அதிக அளவிலான வட இந்தியர்களின் வரவு தென் இந்தியாவையும் வட இந்திய மாநிலங்களைப் போல் பாதுகாப்பற்றதாக ஆக்குகிறது!


Perumal Pillai
செப் 17, 2025 09:11

SBI மீது அவர்களுக்கு என்ன கோபமோ அல்லது யார் போட்ட சாபமோ.


சிட்டுக்குருவி
செப் 17, 2025 06:38

வங்கி ஊழியர்கள் பொறுப்பில்லாமல் நடந்துகொண்டது தெரிகின்றது .மக்கள் பரிவர்த்தனை நேரம் முடிந்தபிறகு கதவை உள்பக்கமாக தாளிட்டு மற்றவேளைகளை கவனிக்கவேண்டும் .அதுவும் மக்கள் நடமாட்டம் இல்லாத இடம்போலவும் தெரிகின்றது .இதுபோன்ற இடங்களில் சாவி வைத்திருக்கும் இருவரில் ஒருவர் முன்கூட்டியே வீட்டிற்கு சென்றிருக்கவேண்டும் .உள்ளடிவேலையாக இருக்கவும் வாய்ப்பிருக்கின்றது .


raja
செப் 17, 2025 06:33

திருட்டு திராவிடர்களின் கூட்டாளிகளின் கைவரிசையை இருக்கும்.. இங்கே விடியல் தரேன்னு சொல்லிக்கொள்ளும் கொள்ளையனின் உடன் பிறப்பி ஊராட்சி மன்ற தலைவி ஒரு சங்கிலி அறுக்கும் கொள்ளைக்காரி...


Palanisamy Sekar
செப் 17, 2025 06:20

காயமின்றி ரத்தமின்றி கொள்ளை என்றால் வங்கியின் கறுப்பாடு துணையின்றி நடந்திருக்க வாய்ப்பே கிடையாது. காங்கிரஸ் ஆட்சியின் லட்சணம் அப்படியே தமிழ்நாட்டை போலவே இருக்கிறது. அங்கே வங்கியில் இங்கே உலகவங்கி கடனில். ஆக இண்டி கூட்டணியின் ஆட்சிப்பொறுப்பின் லட்சணம் பல்லிளிக்கின்றது. மக்களின் பணம்தான் இவர்களுக்கு கசக்கவா போகிறது. ஆட்சியாளர்களை போல அன்றி இவர்கள் முகமூடி அணிந்து கொள்ளையடித்து சென்றுள்ளார்கள். துணிச்சல்தான்


R SRINIVASAN
செப் 17, 2025 05:53

சினிமாவிலும் சீரியல்களிலும் இம்மாதிரியான கொலை ,கொள்ளை போன்ற்வத்ரை படமெடுத்து காண்பிக்கிறார்கள். இவர்கள் எல்லாம் ஆட்சியில் அமர்ந்தால் இதுதான் நடக்கும். குறிப்பாக விஜய்க்கு பொருளாதாரத்தைப்பத்திரியோ, வணிகத்தை பத்ரியோ எதுவும் தெரியாது.சும்மா பெரியார், அண்ணா,MGR ,ஜெயலலிதா, கலைஞர் என்று தலைவர்கள் பெயரை சொன்னால் அரசியலில் முன்னேறி விடலாம் என்று நினைக்கிறார்கள் .இவர்களை பின்பத்ரி இளைஞர்களும் ,பெண்களும் ஓடுகிறார்கள். இம்மாதிரி கட்சி நடத்துபவர்கள் பணபலம் ,அரசியல் பலம் உள்ளவர்களுக்கே சாதகமாக நடந்து கொள்கிறார்கள் . ஆகையால் பெத்ரோர்கள் தங்கள் பிள்ளைகளை முறையாக படிக்க வைத்து அவர்களை கண்காணிக்க வேண்டும். சிறு வயது முதலே ஒழுக்கத்தையும், தெய்வ பக்தியையும் புகட்ட வேண்டும். இதன்மூலம் ஆரோக்கியமான சமுதாயம் வளரும். நாடு முன்னேறும்.


xyzabc
செப் 17, 2025 05:50

மாடல் ஆட்சியில் முகமூடி இல்லாமல் கொள்ளை அடிக்கின்றனர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை