உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாட்டையடி போராட்டத்தால் பெரிய பதவிகள் வரும்: அண்ணாமலையை கிண்டல் செய்த ஆர்.எஸ்.பாரதி

சாட்டையடி போராட்டத்தால் பெரிய பதவிகள் வரும்: அண்ணாமலையை கிண்டல் செய்த ஆர்.எஸ்.பாரதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''சாட்டையடி போராட்டத்தில் ஈடுபட்டால், மத்திய அரசு சார்பில், பெரிய பதவிகள் வரும் என, அண்ணாமலை எண்ணுகிறார் போலும். இது பகுத்தறிவு அற்ற செயல். சுத்த காட்டுமிராண்டித்தனம் மட்டுமல்ல கேலிக்கூத்துக்குரியது'' என, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார். சென்னை அறிவாலயத்தில், அவரது பேட்டி:அண்ணா பல்கலையில் மாணவிக்கு இழைக்கப்பட்ட கொடூரம் வேதனைக்குரிய சம்பவம் தான். அதை யாரும் மறுக்க முடியாது. அதை வைத்து, பழனிசாமியும் அண்ணாமலையும் அரசியல் செய்வதை ஏற்க முடியாது. அண்ணா பல்கலை, தமிழக கவர்னரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதை முதலில் அவர்கள் அறிந்து இருக்க வேண்டும். கவர்னரிடம் உள்ள அதிகாரத்தை, மாநில அரசிடம் வழங்க வேண்டுமென, முன்னாள் முதல்வர்கள் ஏற்கனவே வலியுறுத்தி உள்ளனர்.காவல் துறை அனுமதி பெற்று, அண்ணா பல்கலையில் நுழைவதைவிட, துணைவேந்தர் அனுமதி பெற்று நுழைவதுதான் மிகவும் சிரமம். பல்கலையை பொறுத்தவரை, 24 மணி நேரமும், காவலர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த சம்பவம் நடந்தபோது, பாதுகாப்பு பணிகளில் இருந்தவர்கள் விபரம், போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.வளாகத்தில் பாதுகாப்பு இல்லை என சிலர் கூறுகின்றனர். அது யாருடைய பொறுப்பு என்பதை உணர்ந்து கூற வேண்டும். இதுபோன்ற சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதும், குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சியில், பொள்ளாச்சியில் பல மாணவியர் சம்பந்தப்பட்ட மோசமான வீடியோக்கள் வெளியான நிலையில், அப்போது ஆட்சி அதிகாரத்தில் இருந்த பழனிசாமி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.ஆனால், சென்னை அண்ணா பல்கலை சம்பவத்தில், குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையும் மிகவும் சரியான வழியில் செல்கிறது. நடந்த சம்பவத்துக்கு நியாயம் கேட்டு, கோவையில் அண்ணாமலை சாட்டையால் அடித்து போராட்டம் செய்துள்ளார்.பொள்ளாச்சி சம்பவத்தின்போது, இவர் சாட்டை போராட்டத்தை ஏன் கையில் எடுக்கவில்லை? இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபட்டால், அவருக்கு மத்திய அரசு சார்பில் பெரிய பதவிகள் வரும் என, எண்ணுகிறார் போலும்.இது பகுத்தறிவு அற்ற செயல். சுத்த காட்டுமிராண்டித்தனம் மட்டுமல்ல; கேலிக்கூத்துக்குரியது.என் அரசியல் வாழ்க்கையில், இதுபோன்று எந்த ஒரு தலைவரும், போராட்டத்தில் ஈடுபட்டது கிடையாது. அண்ணாமலை போராட்டத்தைக் கண்டு, பொதுமக்கள் சிரிக்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 90 )

Mohan
ஜன 04, 2025 12:34

தான் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால், தான் எந்த விதமாகவும் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்பதை முழுக்க முழுக்க அமுல் படுத்தி தன்னைப் போன்றவர்களுக்கு சிறப்பான , பாதுகாப்பான """நல்லவழி""" காட்டும் பெரியவர் இவர். ஆகவே இவர் ஒரு ""வழிகாட்டி"". தவறுதலாக தமிழக அரசியலில் உள்ளார். தேசிய அரசியலுக்கு போனால், ராகுலை பின் தொடர்வதை நிறுத்தி எல்லோரும் இவரை பின் தொடர்வார்கள். இவர் தனது தலைவர், துணை தலைவர்களுக்கு ""கிங் மேக்கர்"" ஆகிவிடலாம். தலைவர் காமராஜூக்கு பிறகு இந்திய அரசியலில் ஏற்பட்ட அடுத்த ""கிங் மேக்கர்"" இவரே வாழ்க திராவிடம், வாழ்க விடியல், வாழ்க இந்தியா கூட்டணி .


Naga Subramanian
ஜன 03, 2025 10:05

தரிசுநில மொத்த வாடகை வாயர் இவர்.


Sivasankaran Kannan
ஜன 02, 2025 16:55

இந்த திராவிட கேவலத்திற்கு பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.. ஏதோ தரித்திரத்திற்கு குபேரன் என்று பெயராம்..


sankaranarayanan
ஜன 01, 2025 18:34

அண்ணா பல்கலை, தமிழக கவர்னரின் கட்டுப்பாட்டில் உள்ளது.என்று கூறும் ஆர்.எஸ்.பாரதிக்கும் முழு விவரம் தெரியவில்லையா, அல்லது தெரிந்து தெரியாதது போல் நடிக்கிறாரா.ஆளுநருடைய கட்டுப்பாட்டில் இருந்ததால் தான் இந்த பாலியல் படுபாவியை பிடிக்க முடிந்தது.பிடிபட்டவன் யாரால் போற்றி வளர்க்கப்பட்டவர் எந்த கட்சி பிரமுகர்களின் அரவணைப்பில் உள்ளான் சார் சார் என்று அந்த செல்லில் அவன் அழைத்தது அந்த சார் யார் என்று கேள்விகளுக்கு விடை வந்ததும் கதை கந்தலாகிவிடும்.


Suppan
டிச 30, 2024 14:27

பாரதி அண்ணா நீங்களும் சாட்டையால் அடிச்சுக்கங்க . உங்களுக்கும் பதவி தேடி வரும். தயிர்வடை, பாத பூஜை பகுத்தறிவுக்கட்சியில் இதெல்லாம் சகஜம்


NaamIndian
டிச 30, 2024 12:25

திமுககாரன் break fastkkum lunchkkum இடைப்பட்ட நேரத்துல fasting இருக்குறவனுங்க


Rajasekar Jayaraman
டிச 29, 2024 10:03

தலைசாயம் பூசிய திருட்டு கோமாளிகள்.


Sathya
டிச 28, 2024 23:18

This old fellow has no work at his old age for 200 blabbering


Seekayyes
டிச 28, 2024 21:43

இதெல்லாம் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமான கிராக்கி. ஏதோ கட்சி மேலிடம் போடுறதை நம்பி காலத்த ஓட்டுது. இதெல்லாத்தையும் பேட்டி எடுக்கணுமானு தான் நான் கேக்குறேன்


MN JANAKIRAMAN
டிச 30, 2024 12:23

உண்மை ..எந்த வேலையும் ஒழுங்காக பார்ப்பதில்லை ...ஆட்சிக்கு முட்டு கொடுக்குறது அடுத்தவங்களை கிண்டல் பண்றதுக்காகவே சட்டம் படித்திருக்கிறார் ...


Pats, Kongunadu, Bharat, Hindustan
டிச 28, 2024 18:53

அண்ணாமலைக்கு பதவி வருமோ இல்லையோ தெரியாது. ஆனால் உங்களோட சீட்டு 2026-ல் கிழிந்துவிடும் என்பது உண்மை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை