குண்டுவெடிப்பு சம்பவம் : நஷ்ட ஈடு அதிகரிக்க உத்தரவு
புதுடில்லி: டில்லி ஐகோர்ட் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 7-ம் தேதி டில்லி ஐகோர்ட் வாசலில் குண்டுவெடித்தது. இதில் 15 பேர் பலியாயினர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவத்தில் பலியானவர்களின் குடு்ம்பங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கிட கோரி மத்திய , மாநில அரசுகளுக்கு எதிராக டில்லி ஐகோர்டில் வழக்கு தொரடப்பட்டது. இதன் மீதான விசாரணை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்புவிசாரணைக்கு வந்தது. இதில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் வீதம் மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.