உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.1,000 இலவசம்: 24 லட்சம் பேருக்கு இல்லை

ரூ.1,000 இலவசம்: 24 லட்சம் பேருக்கு இல்லை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : பொங்கலை முன்னிட்டு, அரிசி கார்டுதாரர்களுக்கு தலா, 1,000 ரூபாய், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பை தமிழக அரசு வழங்குகிறது.'மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை கார்டுதாரர்கள், பொருளில்லா கார்டுதாரர்கள் தவிர்த்து, ஏனைய அனைவருக்கும், 1,000 ரூபாய் ரேஷன் கடைகளில் வழங்கப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்தார்.இதுவரை பொங்கல் பரிசு வழங்கிய போது, எத்தனை கார்டுதாரர்கள், எவ்வளவு செலவு என்ற விபரம், உணவு வழங்கல் துறையிடம் கேட்டு, அதற்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இலவசங்களை விரும்பாதவர்கள், பொங்கல் பரிசு தொகுப்பை வாங்க மாட்டார்கள். அதன்படி தகுதி இருந்தும் சராசரியாக, 2 லட்சம் பேர் வரை வாங்கியதில்லை.இந்த முறை, அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோருக்கு, 1,000 ரூபாய் கிடையாது என, அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் விபரங்கள் எப்படி சேகரிக்கப்பட்டன என்ற தகவல் வெளியாகியுள்ளது.மாநிலத்தில், நான்கு லட்சம் சர்க்கரை கார்டுதாரர்கள், 62,000 பொருளில்லா கார்டுதாரர்கள் உள்ளனர். அவர்களின் விபரங்கள், உணவு வழங்கல் துறையிடம் இருந்து பெறப்பட்டு விட்டன. தமிழக அரசின் நிதித்துறை, ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., எனப்படும் மென்பொருள் வாயிலாக, பிற துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் விபரங்களை கண்டறிந்துள்ளது.மத்திய நிதித்துறையிடம் இருந்து, தமிழகத்தில் வருமான வரி செலுத்துவோரின் விபரங்கள் பெறப்பட்டுள்ளன. உணவு வழங்கல் துறையிடம் இருந்து, மொத்த ரேஷன் கார்டுதார்களின் விபரங்கள் பெறப்பட்டுள்ளன.அரசு ஊழியர்கள், வரி செலுத்துவோரினின், 'ஆதார்' எண்ணை வைத்து, அவர்களின் ரேஷன் கார்டுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்த கார்டுகள், 1,000 ரூபாய் வழங்கும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. அதன்படி, 2.24 கோடி கார்டுதாரர்களில், 2 கோடி பேருக்கு மட்டும் தலா, 1,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது.மின் ஆளுமை முகமையானது, ஒவ்வொரு கடை வாரியாக, 1,000 ரூபாய் வழங்க வேண்டிய கார்டுதாரர் பட்டியலை, உணவு மற்றும் கூட்டுறவு துறையிடம் நேற்று மாலை வழங்கியது. அவர்களின் வீடுகளில் பரிசு தொகுப்பு வாங்க, எந்த தேதி, நேரத்திற்கு வர வேண்டும் என்ற விபரம் அடங்கிய டோக்கனை, ரேஷன் ஊழியர்கள் இன்று முதல் வழங்க உள்ளனர்.வரும், 10ம் தேதி முதல் ரேஷன் கடைகள் வாயிலாக, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

பாரபட்சத்தால் மக்கள் கோபம்

தமிழக அரசிடம், மத்திய அரசு நிறுவனங்களில் பணிபுரிவோரின் விபரம் இல்லை.கடந்த மாதம் சென்னையில், 6,000 ரூபாய் வெள்ள நிவாரணம் வழங்கிய போதும், அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோருக்கு, அந்த தொகை வழங்கப்படவில்லை.வரி செலுத்தும் தனியார் நிறுவன பணியாளர்களுக்கும் நிவாரண தொகை வழங்கப்படவில்லை. அதேசமயம், மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டது. இந்த பாரபட்சம், மக்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.எனவே, கடந்த காலங்களை போல, அரிசி கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும், 1,000 ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குமாறு, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

தமிழ் மைந்தன்
ஜன 07, 2024 14:56

ஒரு ரூபாயில் 61காசுகளை கருணாநிதி குடும்பம் திருடி கொள்வதால் பொதுமக்கள் பாதிக்க படுவதாக மக்கள் கூறுகின்றனர்..


Ramesh Sargam
ஜன 07, 2024 10:52

முஸ்லீம் மதத்தினருக்கு, மற்றும் கிறிஸ்துவ மதத்தினருக்கும் பொங்கல் இனாம் கொடுத்து அவர்களை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மதமாற்றம் செய்கிறார்.????????????


Google
ஜன 07, 2024 10:32

இனிமேல் இவர்கள் vote வேண்டாம் என்று சொல்லுவார்கலா.டேக்ஸ் கட்டுபவர்கள் dmk கு vote போட கூடாது.


R. Vidya Sagar
ஜன 07, 2024 10:32

அப்பன் வீட்டு காசில் இருந்து செலவு செய்வதால் சிக்கனம்


R.RAMACHANDRAN
ஜன 07, 2024 07:48

மத்திய மாநில அரசு மற்றும் பொது துறை ஊழியர்கள் போனசு வாங்கும் நிலையில் அவர்களை பொங்கல் பரிசிலிருந்து நீக்கியது நல்ல முடிவு.


Kasimani Baskaran
ஜன 07, 2024 07:29

தேர்தல் நேரத்தில் ஓட்டுக்கு பணம் கொடுக்க வேண்டியிருப்பதால் இப்பொழுது சிக்கனமாக செலவு செய்கிறார்கள். விரைவில் உலகவங்கியிடம் (யுனஸ்கோ அல்ல) கடன் வங்கி அதை டைவர்ட் செய்து தேர்தலில் வெற்றி பெற முயல்வார்கள். இப்பொழுதைய பிரச்சினை அண்ணாமலையை சமாளிப்பதுதான்.


T.sthivinayagam
ஜன 07, 2024 07:18

ஒரு ரூபாயில் 61காசுகளை மத்திய மோடி அரச எடுத்துக்கொள்வதால் மக்கள் பாதிக்க படுவதாக மக்கள் கூறுகின்றனர்


Duruvesan
ஜன 07, 2024 07:08

அவங்க இஷ்டம். காசு வாங்கிட்டு ஓட்டு போட்டவர்கள்


Godyes
ஜன 07, 2024 05:32

இனி ஊத்தி மூடிவிடுவார்கள் தேர்தல் நேரத்தில் தலகாஞ்சவன் பக்கிரி சோதா என எவனைப்பாரத்தாலும் காலில் விழமாட்டாத குறையாய் கூனிக்குறுகி கும்பிடு போட்டு அவர்களை தாஜா பண்ண கவர்ச்சிகரமாக பேசி வாக்கை பிடுங்குபவர்கள்.வேலை முடிந்ததும் நீயாரோ நான் யாரோ ஜகஜ்ஜால கில்லாடிங்க


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை