உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்துக்கு மறுப்பு; மறுஆய்வு செய்யும்படி அட்வைஸ்

ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்துக்கு மறுப்பு; மறுஆய்வு செய்யும்படி அட்வைஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்துக்கு மறுக்கப்பட்ட இடங்களில், அனுமதி வழங்குவது குறித்து மறுஆய்வு செய்து தெரிவிக்கும்படி, போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.விஜயதசமியை ஒட்டி தமிழகம் முழுதும் 58 இடங்களில், ஆர்.எஸ்.எஸ்., சார்பில் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கு அனுமதி கோரி, அந்தந்த மாவட்ட ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர்கள் சார்பில், போலீசாரிடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. எந்த நடவடிக்கையும் இல்லாததால், உயர் நீதிமன்றத்தில் அவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

ஊர்வலம்

இம்மனுக்கள், நீதிபதி ஜெயச்சந்திரன் முன், மீண்டும் விசாரணைக்கு வந்தன. போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர். 'ஊர்வலத்துக்கான மாற்று தேதி; ஊர்வலம் துவங்கும் இடம், முடியும் இடம்; எவ்வளவு பேர் பங்கேற்பர்; யார் தலைமையில் நடக்கிறது என்ற விபரங்கள் இல்லை' என்றார். இதையடுத்து, போலீஸ் தரப்பில் கேட்கும் விபரங்களை அளிக்கும்படி மனுதாரர்களுக்கு, நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இவ்வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகிலன், “ஊர்வலத்துக்கு, 42 இடங்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது; 16 இடங்களில் நிராகரிக்கப்பட்டு உள்ளது. ''ஒரு மாவட்டத்தில், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஊர்வலத்துக்கு அனுமதி கோரப்பட்டதால், பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் உள்ளது. அதுபோன்ற இடங்களில் நிராகரிக்கப்பட்டு உள்ளது,” என்றார்.மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 'நேர கட்டுப்பாடு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர். அரசும், போலீசும் கண்ணாமூச்சி ஆடுகின்றனர்' என்றனர்.

பாதுகாப்பு

இதையடுத்து, நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என்று எச்சரித்த நீதிபதி, ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களை கூறி, அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.ஒரு மாவட்டத்தில், ஒரு இடத்துக்கு மேல் பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் உள்ளது என்கிற போது, பவள விழா நிகழ்ச்சிக்கு ஒரே நாளில், பல இடங்களில் எப்படி பாதுகாப்பு வழங்கப்பட்டது; இந்த அதிகாரிகளுக்கு எதிராக அவமதிப்பு நடவடிக்கை எடுத்தால் என்ன என்றும், நீதிபதி கேள்வி எழுப்பினார்.அதைத் தொடர்ந்து, மறுக்கப்பட்ட இடங்களில் அனுமதி வழங்குவது குறித்தும், அனுமதிக்கப்பட்ட இடங்களில் விதித்த நிபந்தனைகளை மறுஆய்வு செய்தும் தெரிவிக்கும்படி போலீஸ் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை இன்றைக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Ganesh
அக் 02, 2024 14:58

மத கலவரத்திற்கு ரெடி ஆகுது


V RAMASWAMY
அக் 01, 2024 11:24

அது என்ன ஆர் எஸ் எஸுக்கு மட்டும் மறுப்பு? அரசு கட்சியும் மற்ற கட்சிகளும் செய்யும் ஊர்வலங்களும் தடை செய்யுங்கள்.


RAMAKRISHNAN NATESAN
அக் 01, 2024 13:25

ஆர் எஸ் எஸ் சுக்கு மட்டும் ஜனநாயக உரிமையை மறுப்பதுதான் மதச்சார்பின்மை ...... ஆர் எஸ் எஸ் ஊர்வலம் நடத்தினால் தமிழகம் வன்முறைக்களமாகிவிடும் ன்னு மூணு வருடத்தில் ஆயிரக்கணக்கான கொலைகள் பார்த்த மாநிலம் சொல்லுறதை நீங்க கவனிக்கலையா ????


sankaranarayanan
அக் 01, 2024 11:16

ஒவ்வொரு ஆண்டும் இதேபோலத்தான் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தகிற்கு ணனுமதி மறுக்கப்படுகிறது பிறகு நீதி அரசர்களால்தான் இதற்கு ஒரு விடிமோட்சம் கிடைக்கிறது இந்த கதி ஏன் ஒவ்வொரு ஆண்டுமாக நடக்க வேண்டுமா? அரசின் இந்த குறுகிய மனப்பான்மை அடியோடு ஒழிய வேண்டும் அவர்கள் மாநாடு கட்சி கூட்டங்கள் என்றால் தமிழகம் முழுவதும் அனுமதி மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்று கூறிய கலைஞரின் கூற்றை நினைவில் அடுத்தவர்கள் நடத்தும் பேரணி கூட்டம் இவைகளுக்கு ஆளும் அரசு ஜனநாயகத்தில் அனுமதி அளிக்க வேண்டும்


N Sasikumar Yadhav
அக் 01, 2024 10:50

இசுலாமிய பயங்கரவாத ஹிஸ்புல்லா தலைவன் நசிருல்லா சாவுக்கு இசுலாமியர்கள் அஞ்சலி செலுத்த ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டால் ஓட்டுப்பிச்சைக்காக உடனடியாக திருட்டு திராவிட மாடல் அரசு கொடுத்துவிடும் ஏனென்றால் ஊர்வலம் செல்ல அனுமதி கேட்பவர்கள் அமிதிமார்க்கத்தினர்


S Ramkumar
அக் 01, 2024 09:46

எல்லா ஊர்வலங்களும் நடக்கும்போது ஆர் எஸ் எஸ் நடத்தும் ஊர்வலத்துக்கு ஆண்டு தோறும் தி மு க அரசு ஏன் இவ்வளவு கெடுபிடிகள் செய்கிறது?


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 01, 2024 09:07

ஜெ யால் கவிழ்ந்திருக்க வேண்டிய வாஜ்பாயி ஆட்சி க்கு முட்டுக்கொடுத்து தமிழகத்தில் பாஜகவை வளர்த்த திமுக ,,,, ஆர் எஸ் எஸ் ஊர்வலத்துக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போடுது .......


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 01, 2024 09:02

தங்களை சி மகன்கள் என்று சொன்ன கன்னடத்தான் ஈவேராவை மனதுக்குள் வெறுப்பது திராவிடம் ........ அப்படிப்பட்டவர்கள் ஆர் எஸ் எஸ் ஐ வளர்த்தெடுக்க விரும்புவது சரிதானே ????


Velan Iyengaar
அக் 01, 2024 08:53

ஜக்கி வாசுதேவ் குறித்து உயர்நீதிமன்றம் கூறிய கருத்துக்களை கூட இங்கு பிரசுரிக்கலாம் ...


Barakat Ali
அக் 01, 2024 08:51

பவள விழா நிகழ்ச்சிக்கு ஒரே நாளில், பல இடங்களில் எப்படி பாதுகாப்பு வழங்கப்பட்டது இந்த அதிகாரிகளுக்கு எதிராக அவமதிப்பு நடவடிக்கை எடுத்தால் என்ன என்றும், நீதிபதி கேள்வி எழுப்பினார். ஐயா .... ஐயா ... நீங்க நடைப்பயிற்சி போகாதீங்க ஐயா .........


Dharmavaan
அக் 01, 2024 08:26

சதி என்று ஏன் வெளிப்படையாக சொல்லவில்லை