உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விதிகளை தளர்த்த கூடாது

விதிகளை தளர்த்த கூடாது

இது குறித்து, நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது: விதிமீறல் கட்டடங்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உத்தரவுகள் பிறப்பித்துள்ளன. ஆனால், இந்த உத்தரவுகளை பின்பற்ற வேண்டிய துறைகள், விதிகளை மீறி கட்டப்படும் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. அதன்பிறகு, விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களின் உரிமையாளர்கள், 'அந்த கட்டடங்களை வரன்முறை செய்ய வேண்டும்; விதிகளில் விலக்கு அளித்து சலுகை தர வேண்டும்' என, அரசை அணுகுகின்றனர். நகர், ஊரமைப்பு சட்டத்தில், பொது நலன் கருதி, அரிதாக சில கட்டடங்களுக்கு விலக்கு அளிக்க அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி, பெரும்பாலான விதிமீறல் கட்டடங்கள், சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பிக்கின்றன. நகரமைப்பு சட்டத்தில் அளிக்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்த, கட்டுப்பாடு விதிக்க வேண்டும். 'விதிமீறல் கட்டடங்களால், சென்னை போன்ற நகரங்களில், மக்கள் வசிக்க முடியாத நிலை ஏற்படுகிறது' என, நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தும், அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். தகுதி இல்லாத கட்டடங்களை வரன்முறைப்படுத்துவது, விதிகளை தளர்த்தி சலுகை வழங்குவதை, இனியாவது ஆட்சியாளர்கள் நிறுத்தி, நீதிமன்ற உத்தரவின்படி, இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ