உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துருப்பிடித்த ஜன்னல், தேய்ந்த இருக்கை; 5 விரைவு ரயில்களுக்கு பிறக்குமா விடிவு?

துருப்பிடித்த ஜன்னல், தேய்ந்த இருக்கை; 5 விரைவு ரயில்களுக்கு பிறக்குமா விடிவு?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ராமேஸ்வரம் உள்ளிட்ட ஐந்து விரைவு ரயில்களில், பழைய பெட்டிகளே பயன்படுத்தப்படுவதால், துருப்பிடித்த ஜன்னல்கள், தேய்ந்து போன இருக்கைகள், துர்நாற்றம் வீசும் கழிப்பறைகள் என, பிரச்னைகள் தொடர்வதாக, பயணியர் புகார் கூறுகின்றனர்.விரைவு ரயில்களில், பழைய பெட்டிகள் நீக்கப்பட்டு, எல்.எச்.பி., எனப்படும் நவீன ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகின்றன. சொகுசு இருக்கைகள், மொபைல் போன் சார்ஜிங் உட்பட, பல்வேறு வசதிகள் இருக்கும். எல்.எச்.பி., சாதாரண பெட்டிகளில், 80 படுக்கைகளும், 'ஏசி' பெட்டியில், 72 படுக்கைகளும் இருக்கும். முக்கிய விரைவு ரயில்களில், எல்.எச்.பி., பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சென்னை எழும்பூரில் இருந்து செல்லும் கன்னியாகுமரி, நெல்லை, பொதிகை, பாண்டியன், ராக்போர்ட், முத்துநகர் உள்ளிட்ட விரைவு ரயில்களில், பழைய பெட்டிகள் நீக்கப்பட்டு, புது எல்.எச்.பி., பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படுகின்றன. இருப்பினும், ராமேஸ்வரம், திருச்செந்துார், குருவாயூர், மன்னார்குடி, புதுச்சேரி ஆகிய, ஐந்து விரைவு ரயில்களில் இன்னும் பழைய பெட்டிகள் தான் உள்ளன. இந்த பெட்டிகளில் பயணிருக்கான வசதிகள் இல்லை. துருப்பிடித்த ஜன்னல்கள், தேய்ந்து போன இருக்கைகள், நாற்றம் வீசும் கழிப்பறைகள் போன்ற பிரச்னைகள் நீடிக்கின்றன. மொபைல் போனுக்கான சார்ஜிங் பாயின்ட்டுகளும் செயல்படுவதில்லை.அதனால், இந்த ரயில்களிலும் நவீன எல்.எச்.பி., பெட்டிகளை இணைத்து இயக்க வேண்டும் என்று, தெற்கு ரயில்வேக்கு பயணியர் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Bhaskaran
பிப் 15, 2025 09:41

நல்ல பெட்டிகள் வடநாட்டுக்கு ஜெய்ஹிந்த்


veeramani
பிப் 10, 2025 09:47

ஒரு செட்டி நாடு சிட்டிஸினின் மனக்குமுறல் .. பிப்ரவரி எட்டாம்நாள் சேது விரைவு வண்டியில் இரண்டாம் ஏ சி பெட்டியில் பிரயாணம் செய்தென் மிக பழமையான கோச். வண்டியில் சரியான குளிர் இல்லை, திரைசீலைகள் அறுத்த பழசு . வடமாநிலத்தவர்கள் வெளிநாட்டினர் அதிகமாக பிரயாணம் செய்யும் ராமேஸ்வரம் ரயில்களை எள் ஹெச் பி பெட்டிகள் வைத்து இயக்கினால் இந்திய ரயில்வேயின் மதிப்பு நிச்சயம் உயரே கூடும் .


RAJA 69
பிப் 09, 2025 14:55

நான் மண்ணை எக்ஸ்பிரஸ் ரயிலில் திருவாரூரில் இருந்து தாம்பரம் வந்தேன் எனக்கு கிடைத்த முன்பதிவு செய்யப்பட்ட இரண்டாவது வகுப்பு ஸ்லீப்பர் கோச் மிகவும் கேவலமாக இருந்தது இப்படித்தான் துருப்பிடித்த கம்பிகள் ஜன்னல்கள் இருக்கைகள் கழிப்பறை துர்நாற்றம். பயணிகளிடமிருந்து சூப்பர் ஃபாஸ்ட் என்ற பெயரில் அதிக கட்டணம் வசூலிக்கும் ரயில்வே நிர்வாகம் இப்படி ஒரு கேவலமான பெட்டிகளை போடுகிறார்கள். செங்கல்பட்டில் இருந்து கச்சேகுடா செல்லும் ரயில் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நிப்பாட்டி இருந்தது. இரண்டாவது வகுப் பெட்டிகளின் நிலைமை மிகவும் கேவலம். அழுக்கு பிடித்து வாந்தி எடுத்தார் போல் இருந்தது. உடைந்து போன ஜன்னல்களின் கதவுகளில் ஓட்டை விழுந்திருந்தது. எப்படித்தான் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் ரயில்வே நிர்வாகம் இவ்வளவு கீழ்த்தரமாக பயணிகளை மதிக்கிறது என்று புரியவில்லை.


venugopal s
பிப் 09, 2025 11:06

மத்தியில் பாஜக அரசு இருக்கும் வரை எல்லா துறைகளிலும் தமிழகத்தை புறக்கணிப்பது தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்! விடிவே இல்லை!


அப்பாவி
பிப் 09, 2025 10:18

ஆயிரம் அக்க்சிடெண்ட்களைப் பார்த்த அஸ்வினுக்கு சொல்லவும். எம்.பி.ஏ படிச்ச அமைச்சர்.


பாமரன்
பிப் 09, 2025 09:51

முப்பத்தி ஒன்பது பேர் காண்டீன்ல பகோடா சாப்புடறது பார்த்து வயிரெறியும் அப்ரசண்டிகளா.. எல்எச்பி அல்லது எந்த டப்பா விட்டாலும் அதே ஃபேர் தானே உங்க கிட்டேயும் வாங்குறானுவ.. உங்களுக்கு முதலில் ஒரச்சிருக்கனும்..


பாமரன்
பிப் 09, 2025 09:26

முதலில் இரண்டு காரணங்கள் சொல்லிட்டு வோம்... முதலாவதாக இந்த கோச்சுகள் காங் காலத்தில் விடப்பட்டன. இரண்டாவது இந்த எல்எச்பி கோச்சுகளை அறிமுகம் செஞ்சதும் காங் தான்... அதனால் எங்க கம்பெனி பொறுப்பல்ல... இந்த மாதிரி கேள்விகள் கேக்குற தால் தான் லேசாக டிங்கரிங் பெயிண்டிங் பண்ணி அதிக எண்ணிக்கையில் பெர்த் சேர்த்து அம்ரித் பாரத் அப்பிடின்னு பேரை மாற்றி ஃபேர்ல அம்பது பர்சண்ட் எக்ஸ்ட்ரா சூடு வச்சி உட போறோம்... கூடிய விரைவில் ஜி கையில் கொடியோட வருவாப்ல... வெயிட் பிளீஜ்...


அம்பி ஐயர்
பிப் 09, 2025 09:11

சென்னை-மங்களூர் வழி திருச்சி விரைவு ரயிலிலும் பராமரிப்பு மிகவும் மோசம்.... பழைய பெட்டிகள் தான் உள்ளன...


baala
பிப் 10, 2025 10:41

மொத்தமாகவே எல்லாமே மோசம் thaan.


AMLA ASOKAN
பிப் 09, 2025 09:02

ரயில்வே நிர்வாகம் மத்திய அரசின் கையில் உள்ளது . ஏன் குறை செல்லும் இவர்கள் அணைத்து வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரயிலில் செல்ல வேண்டியது தானே ? பணமில்லையென்றால் கடன் வாங்க வேண்டியது தானே ?


நிக்கோல்தாம்சன்
பிப் 09, 2025 08:53

தென்னக ரயில்வேயில் இருந்து மலங்களை வெளியேற்றினால் தான் விடிவு பிறக்கும்