மண் இறந்தால் உயிரும் இறக்கும் உலக மண் தினத்தில் சத்குரு பேச்சு
தொண்டாமுத்துார்: ஆண்டுதோறும் மண்வளம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, டிச., 5ம் தேதி, உலக மண் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தையொட்டி, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, தன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:நம் மண் உயிரின் ஒவ்வொரு வடிவத்தையும் கடந்து வந்துள்ளது. இடைவிடாமல் அப்படியே தொடர்கிறது. மண் ஒரு பொருள் அல்ல. இது இந்த பூமியில் உயிருக்கு ஆதாரமானது. அது நம்மை விட பழமையானது, நம்மை விட விவேகமானது, நம்மை விட மிகவும் புத்திசாலித்தனமானது, நம்மை விட மிகவும் திறமையானது. அது மனிதர்களாகிய நம்மை விட மிகப்பெரிய செயல்முறை. நாம் மண்ணில் இருந்து பிறந்தோம். மரணத்தில் மண்ணால் அரவணைக்கப்படுகிறோம். மண் இறந்தால், உயிர் இறக்கும். மண் காப்போம்.இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.