உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உதயநிதி பெயரில் ரூ.2 லட்சம் மோசடி; சேலம் தி.மு.க., பெண் பிரமுகர் கைது

உதயநிதி பெயரில் ரூ.2 லட்சம் மோசடி; சேலம் தி.மு.க., பெண் பிரமுகர் கைது

சேலம் : துணை முதல்வர் உதயநிதியின் பி.ஏ., என கூறி, ஒன்றிய அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக, 2 லட்சம் ரூபாய் மோசடி செய்த, சேலம் தி.மு.க., பெண் பிரமுகரை, போலீசார் கைது செய்தனர்.அரியலுார் மாவட்டம் செந்துறை அடுத்த கீழராயபுரம், தெற்கு தெருவை சேர்ந்தவர் அரவிந்த், 22. மாற்றுத்திறனாளியான இவர், பி.ஏ., பட்டதாரி. இவருக்கு, நண்பர் கோவிந்தராஜ் மூலம், சேலம், செவ்வாய்ப்பேட்டை, முத்தவள்ளி இப்ராஹிம் தெருவை சேர்ந்த ராஜூ மனைவி வித்யாமோனல், 39, அறிமுகம் ஆனார். தி.மு.க., பிரமுகரான இவர், சின்னத்திரை, பெரிய திரைக்கு ஆள் சேர்க்கும் ஏஜன்டாக உள்ளார்.ஆனால், துணை முதல்வர் உதயநிதியின் பி.ஏ., என, அரவிந்திடம் அறிமுகம் செய்து கொண்டு, சின்னசேலம் ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி, 5 லட்சம் ரூபாய் பேரம் பேசியுள்ளார்.கடைசியில், 2 லட்சம் ரூபாய்க்கு ஒப்புக்கொண்டதும், 2024 ஜனவரியில், அரவிந்த், ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தார். பின் இரு தவணையாக தலா, 50,000 ரூபாயை பெற்றுக்கொண்ட வித்யா மோனல், போலி பணி நியமன ஆணையை வழங்கினார். அதை பெற்றுக்கொண்ட மாற்றுத்திறனாளி, கடந்த ஜன., 12ல் பணியில் சேர சென்றபோது, போலி அரசாணை என்பது தெரிந்தது. பாதிக்கப்பட்ட அவர், முதல்வர் தனி பிரிவுக்கு புகார் அனுப்பினார். தொடர்ந்து சேலம் கலெக்டர் அலுவலகத்திலும் புகார் அளித்தார்.அதன் எதிரொலியாக, செவ்வாய்ப்பேட்டை போலீசார் விசாரித்து, மோசடி உள்பட 2 பிரிவுகளில் வழக்குப்பதிந்து, வித்யா மோனலை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை