உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சேலம் போலீசார் மீண்டும் இடமாற்றம் அடுத்தடுத்த அதிரடியால் அதிர்ச்சி

சேலம் போலீசார் மீண்டும் இடமாற்றம் அடுத்தடுத்த அதிரடியால் அதிர்ச்சி

சேலம் : போலீஸ் விசாரணைக்கு வீரபாண்டி ஆறுமுகம் வந்த போது, போலீசார் அளித்த ராஜமரியாதை சம்பவங்களை காரணம் காட்டி, திருநெல்வேலிக்கு மாற்றம் செய்யப்பட்ட போலீசார், வேலூர் மாவட்டத்துக்கு மீண்டும் மாற்றப்பட்டுள்ளனர். மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், ஜூலை 25ல், சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஆஜரான போது, ராஜ உபச்சாரம் அளித்து போலீசார், விசுவாசத்தை காட்டினர். விசாரணையின் கடைசி நாளான, ஜூலை 27ல், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, தி.மு.க.,வினர் ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்ததோடு, நடுரோட்டில் ஆபாச நாடகத்தையும் அரங்கேற்றினர்.

தி.மு.க.,வினரின் இச்செயல்கள் அனைத்தையும், போலீஸ் உயர் அதிகாரிகள் உட்பட அனைவரும் வேடிக்கை பார்த்தனர். இதுகுறித்து, அரசுக்கு சென்ற புகார்களால், சேலம் மாநகரில் துணை கமிஷனர் ஒருவர், ஐந்து உதவி கமிஷனர், 15 இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக பணி மாற்றம் செய்யப்பட்டனர். ஆக., 3ல், மூன்று எஸ்.ஐ.,க்கள், ஐந்து எஸ்.எஸ்.ஐ.,க்கள் உட்பட, 19 பேர் அதிரடியாக திருநெல்வேலிக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டனர். இடமாற்றத்தை எதிர்த்து, அவர்களின் குடும்பத்தார், சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதோடு, கமிஷனர் மற்றும் சென்னை உயர் அதிகாரிகளுக்கு, கோரிக்கை மனு கொடுத்தனர். சிலர், சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு, விசாரணைக்கு வராமலேயே, 'டிஸ்மிஸ்' ஆனது.

இந்நிலையில், திருநெல்வேலி சரகத்துக்கு மாற்றம் செய்யப்பட்டவர்களில், வழக்கு தொடர்ந்தவர்களை தவிர, மற்றவர்கள் அனைவரும் வேலூர் மாவட்டத்துக்கும், ராமநாதபுரம் மாவட்டத்துக்கும் மாற்றம் செய்யப்பட்டவர்கள், விழுப்புரம் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். மாற்றம் செய்யப்பட்டு, ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது, போலீசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி