உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாம்சங் எஸ் 25 அல்ட்ரா ஸ்மார்ட் போன் சத்யா நிறுவனம் அறிமுகம்

சாம்சங் எஸ் 25 அல்ட்ரா ஸ்மார்ட் போன் சத்யா நிறுவனம் அறிமுகம்

சென்னை:சத்யா நிறுவனம், 'சாம்சங் கேலக்ஸி எஸ் 25 அல்ட்ரா' என்ற புதிய ஸ்மார்ட் போனை, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள, 300 கடைகளில், அறிமுகப்படுத்தி உள்ளது.சென்னை பீனிக்ஸ் மாலில் நடந்த அறிமுக விழாவில், சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா பங்கேற்றார். அவர் ஏற்கனவே முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு, புதிய மொபைல் போனை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சத்யா நிறுவனத்தின் இயக்குனர் ஜாக்சன், பொது மேலாளர் சீதாராமன் மற்றும் அந்நிறுவனத்தின் அலுவலர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.'எஸ் 24 அல்ட்ரா' மொபைல் போனுடன் ஒப்பிடுகையில், புதிய, 'எஸ் 25 அல்ட்ரா'வில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, 100 மடங்கு ஜூம் செய்யும் வசதி, தற்போது, 200 மடங்காக அதிகரிக்கப்பட்டு உள்ளது. 'ஸ்னாப்டிராகன் 8 எலைட் பிராசசர்' மற்றும் 50 எம்.பி., அல்ட்ரா வைடு சென்சார், செயற்கை நுண்ணறிவு மேம்பாடு, ஒயர்லெஸ் சார்ஜிங் 25 வாட் ஆக அதிகரிப்பு, 256 ஜி.பி., முதல் 1 டி.பி., வரையிலான சேமிப்பு வசதி, ஆண்ட்ராய்டு 15 மென்பொருள் ஆகியவை இதன் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ