உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / "சாராய சாவுக்கு அரசின் அலட்சியமே காரணம்": அரசியல் பேசி ஆரம்பித்து வைத்த விஜய்

"சாராய சாவுக்கு அரசின் அலட்சியமே காரணம்": அரசியல் பேசி ஆரம்பித்து வைத்த விஜய்

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியை துவக்கி, இதுவரை அரசியல் ரீதியாக கருத்து தெரிவிக்காத நடிகர் விஜய், கள்ளச்சாராயத்தால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ள சம்பவத்திற்கு அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது எனக் கூறியுள்ளார்.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கள்ளச்சாராய பலி தொடர்பாக நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவருமான விஜய் வெளியிட்ட அறிக்கை: கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, அதிர்ச்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது.இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.'தமிழக வெற்றிக் கழகம்' என்ற அரசியல் கட்சியை துவக்குவதாக கடந்த பிப்ரவரியில் அறிவித்த நடிகர் விஜய், இதுவரை அரசியல் ரீதியாக எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை. அப்படியிருக்கையில், கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்துள்ள கள்ளச்சாராய பலி சம்பவத்தில் இருந்து தனது முதல் அரசியல் கருத்தை தெரிவித்து ஆரம்பித்துள்ளார் நடிகர் விஜய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 52 )

தமிழ்வேள்
ஜூன் 20, 2024 19:58

தம்புடு, டயலாக் வுடரதுக்கு முன்பு திருச்சபையில் பர்மிஷன் வாங்கியாச்சா?... இல்லை என்றால் தசமபாகம் நூறு சதவீதம் அதிகரிக்கும் மேலும் பாவமன்னிப்பு கிடைக்காது...திமுக திருச்சபையின் அங்கம்..ஓகே?


karutthu
ஜூன் 20, 2024 19:31

எல்லாருமே எம்ஜிஆர்... ஆயிடலாம்னு நினைக்குறீங்க...? . கடைசி வரைக்கும் முதலமைச்சர் நாற்காலியில் உட்காராமலேயே போய் சேர்ந்துட்டாரு... இவர் என்ன உளறுகிறார் சாகும்வரை முதலமைச்சர் ஆக இருந்தவர் .அவரும் கள்ள சாராயத்தை ஒழிக்க பாடுபட்டவர் தான் .அப்போதும் இந்த குடிகாரர்கள் கள்ள சாராயத்தை குடித்து நிறையபேர் இறந்தனர் .பிறகு வேறு வழிஇல்லாமல் சாராயத்தை அனுமதித்தார் குடிகாரனாக திருந்தாவிட்டால் குடியை ஒழிக்க முடியாது .இந்த அரசாங்கமே குடியில் வரும் பணத்தில் தான் நடக்கிறது .ம் ம் ம் இந்த பத்து லச்சத்தில் எத்தனை குடிகாரன் பணம் இருக்கிறதோ


Karups
ஜூன் 20, 2024 18:15

அரசு நிர்வாகத்திற்கு எதிராக நீங்கள் பேச ஆரம்பித்து விட்டதால் உங்கள் படம் ரிலீஸ் தள்ளிப் போகும், படம் சீக்கிரம் தியேட்டரை விட்டு போகும், போஸ்டர்கள் கிழிந்து போகும். நடக்கிறதா இல்லையா பாருங்கள்.


Maheesh
ஜூன் 20, 2024 18:08

நடிகர் விஜய் தனது படங்களில் போதைப்பொருட்கள் இல்லாமலும் சாராயம் இல்லாமலும் சிகரெட் இல்லாமலும் முதலில் நடித்துக் கொடுக்கட்டும். பிறகு கள்ளச்சாராயம் பற்றி பேசலாம்.


INDIAN Kumar
ஜூன் 20, 2024 17:59

திமுக அதிமுக இரண்டும் மதுவை ஒழிக்காது இரண்டுக்கும் முடிவு கட்டுவோம்


INDIAN Kumar
ஜூன் 20, 2024 17:57

திராவிட மாடல் ஆட்சிக்கு முடிவு காட்டும் காலம் வந்து விட்டது விக்கிரவாண்டி ஆரம்பம் ஆக இருக்க வேண்டும்.


V RAMASWAMY
ஜூன் 20, 2024 17:46

Good show, good ning, keep it up Mr Vijay


john
ஜூன் 20, 2024 17:43

எதற்கு இந்த சாராயத்தை வாங்கி குடிக்கணும் சாவணும், எல்லாம் தெரிந்தும் அஜாக்கிரதையாக செய்கிறார்கள். மக்களை திருத்த முடியாது. எல்லாவற்றிற்கும் அரசாங்கத்தை குறை கூறும் மக்கள், நாங்கள் இனிமேல் சாராயம் குடிக்கமாட்டோம் என்று அரசாங்கத்துக்கு சாவால் விடுங்க பார்ப்போம்.


Sri
ஜூன் 23, 2024 17:08

நல்ல கருத்து


Mariadoss E
ஜூன் 20, 2024 17:06

முதல்ல உங்க படத்துல சரக்கு, சிகரெட் இதெல்லாம் கட்டுப்படுத்துங்கள். மாணவர்கள் மற்றும் சமுதாயம் கெட்டுப் போகாமல் இருக்கும்....


Kanagaraj M
ஜூன் 20, 2024 16:30

கோடிமக்கள் குடிக்கும்போது கோடிபேரையும் திருத்துவதைவிட அந்த ஒரு சாராய தொழிற்சாலை முதலாளியை ஒழிப்பதே சிறந்தது. அது வேற யாரும் இல்லை திருட்டு திராவிட குடும்பம்தான்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி