உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓடும் ரயில் முன்பு கல்லூரி மாணவியை தள்ளி கொன்ற வழக்கு! வாலிபருக்கு தூக்கு தண்டனை

ஓடும் ரயில் முன்பு கல்லூரி மாணவியை தள்ளி கொன்ற வழக்கு! வாலிபருக்கு தூக்கு தண்டனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் ஓடும் ரயில் முன்பு கல்லூரி மாணவியை தள்ளிக் கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு சென்னை சிறப்பு மகளிர் கோர்ட் தூக்கு தண்டனை விதித்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு; https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9kxgfdrf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=02022ம் ஆண்டு பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷனில் கல்லூரி மாணவி சத்யபிரியா என்பவரை சதீஷ் என்ற இளைஞர் ரயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சத்யபிரியா கொல்லப்பட்ட தகவலை அறிந்த அவரது தந்தை தற்கொலை செய்துகொள்ள, நோய்வாய்ப்பட்டிருந்த தாயாரும் பின்னர் உயிரிழந்தார். போலீசார் விசாரணையில், தம்முடன் பழகியதை நிறுத்தியதால், மாணவி சத்யபிரியாவை அவர் கொன்றது தெரிய வந்தது. 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த விசாரணையில் சதீஷ் குற்றவாளி என்று அறிவித்த மகளிர் கோர்ட், இன்று (டிச.30) தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்து இருந்தது.அதன்படி, இன்று குற்றவாளி சதீஷ்க்கு தூக்கு தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. மாணவியை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 35,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதாகவும் கோர்ட் தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. இந்த அபராத தொகையில் 25,000 ரூபாய் பாதிக்கப்பட்டவரின் சகோதரிகளுக்கு அளிக்கவும் 15,000 ரூபாயை அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.தமிழக அரசு இழப்பீடாக பாதிக்கப்பட்டவருக்கு ரூ.10 லட்சம் அளிக்க வேண்டும் என்றும் கோர்ட் கூறி உள்ளது. சிறை தண்டனை முடிந்த பின்னர், சதீஷை சாகும் வரை தூக்கிலிடவும் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

Ramaswamy Jayaraman
டிச 31, 2024 11:39

தண்டனை நிறைவேற்றும் நாளே நல்ல நாள். அதை பார்த்து மற்றவர்கள் திருந்த வாய்ப்பு உண்டு. ஆனால் தீர்ப்பு இன்னும் வழங்கப்படவில்லை என்றே தோன்றுகிறது. ஏனென்றால் இதை உயர் நீதி மன்றத்திற்குத்தான் அனுப்பி உள்ளார்கள். அங்கு என்ன நடக்கும் என்பது நம்மை படைத்த ஆண்டவனுக்கே தெரியாது.


Mc Cullum
டிச 31, 2024 06:42

அந்த நாய்க்கு எதுக்கு துக்கு தண்டனை. அவனை எல்லாம் அதே தண்டவாளத்தில் நிற்க வைத்து அதிவேக விரைவு ரயில் ஏத்தி கொள்ளணும். அப்பதான் அந்த பெண்ணின் வலி புரியும் அந்த ஆன்மாவும் சாந்தி அடையும். மனு நிதி சோழன் வாழ்ந்த மண்ணில் நாம் வாழ்கிறோம். மணி அடித்து தான் கன்றை கொன்ற இளவரசனுக்கு தண்டனை வழங்க வேண்டும் கேட்ட பசுவுக்கும் நிதி அளித்த அந்த மன்னன், தான் மகனை அதே தேரை ஏற்றி கொன்றான் என்பது வரலாறு. இந்த நாய்க்கும் அதே ரயிலில் மரணம் நிகழ வேண்டும் என்பதே என் ஆசை. ஒரு குடும்பத்தை அழிச்சிட்டான் அவனுக்கு துக்கு தண்டனை என்பது குறைவு.


CMA Manjunathan Karuppannan
டிச 31, 2024 12:51

தயவு செய்து ... கேவலப்படுத்த வேண்டாம்


BalaG
டிச 31, 2024 00:02

இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டால் பெண்கள் விஷயத்தில் தவறு செய்யும் தறுதலைகளுக்கு கொஞ்சம் உறைக்கும்.. ரொம்ப நாள் கழித்து ஒரு சரியான தண்டனையை பார்த்த திருப்தி


aaruthirumalai
டிச 30, 2024 23:01

தண்டனை வெற்றிபெற்றால் பார்ப்போம்.


theruvasagan
டிச 30, 2024 21:31

அவனுக்கு ஒண்ணும் நடக்காது. இருக்கவே இருக்கு மேல் கோர்ட்டு. கண்ணால் பார்த்த சாட்சியே இல்லைன்னு சொல்லி தண்டனையை தள்ளுபடி பண்ணிடுவாங்க.


Uuu
டிச 30, 2024 21:02

சும்மா கண்துடைப்பு இந்தியால இதற்கு வாய்ப்பு இல்லை


Sudha
டிச 30, 2024 20:45

3 ஆண்டுகள் 35000 ரூபாய் இதெல்லாம் அவசியமில்லை, நேரடியாக தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும். அது சரி, இவனது வக்கில் மற்றும் குடும்பத்தினர் என்னென்ன பிதற்றினார்கள் என்பதையும் வெளியிடுங்கள். இவள் குடும்பம் முழுவதும் அழிந்தது போல் வக்கில் உட்பட அவன் குடும்பமே ஒழிய வேண்டும்


M Ramachandran
டிச 30, 2024 19:48

சட்ட தின் உள்ள இண்டு இடுக்குகளை புகுந்து உபயோக படுத்தி பணத்திற்காக அவன் வக்கீல் அவனுக்கு விடுதலை வாங்கி கொடுத்து விடாமல் இருக்கணும்


ஸ்ரீ
டிச 30, 2024 19:16

Anna பிறந்த நாளில் ............????


Barakat Ali
டிச 30, 2024 18:39

அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை கொடுத்தது சரியே .... மனித உரிமை என்று பேசிக்கொண்டு சமூக விரோதிகள் வந்துவிடக்கூடாது ... மேல்முறையீட்டை அனுமதிக்கும் அவலத்தை இந்த வழக்கிலிருந்தே நிறுத்துங்கள் ..... அது சரி .... கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கும் பத்து லட்சம், இறந்த பெண்ணின் குடும்பத்துக்கும் பத்து லட்சமா ???? அதையும் குற்றவாளியின் குடும்பமே கொடுக்கவேண்டும் ..... எதற்கு அரசு ???? மக்களின் வரிப்பணம் ஏன் ????


முக்கிய வீடியோ