உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலீஸ் பாதுகாப்பு கேட்டு சவுக்கு சங்கர் மனு

போலீஸ் பாதுகாப்பு கேட்டு சவுக்கு சங்கர் மனு

சென்னை:ஐ.பி.எஸ்., அதி காரிகளால், தன் உயிருக்கு ஆபத்து இருப்பதால், போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என, 'யூ டியூபர்' சவுக்கு சங்கர், பொறுப்பு டி.ஜி.பி., வெங்கட்ராமனிடம் மனு அளித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் வசித்து வருபவர் சங்கர். 'சவுக்கு மீடியா' என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். நேற்று, சென்னை மயிலாப்பூரில் உள்ள, டி.ஜி.பி., அலுவலகத்தில், பொறுப்பு டி.ஜி.பி., வெங்கட்ராமனை சந்தித்து மனு அளித்தார். அதில், 'ஐ.பி.எஸ்., அதிகாரிகளான, சென்னை போலீஸ் கமிஷனர் அருண் மற்றும் சி.பி.சி.ஐ.டி., - டி.ஐ.ஜி., வருண் குமார் ஆகியோரால், என் உயிருக்கு ஆபத்து உள்ளது. இதனால், எனக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தர வேண் டும்' என, கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி