உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முட்டை கேட்ட பள்ளிச் சிறுவன் மீது துடைப்பத்தால் தாக்குதல்; சத்துணவு பணியாளர்கள் கைது

முட்டை கேட்ட பள்ளிச் சிறுவன் மீது துடைப்பத்தால் தாக்குதல்; சத்துணவு பணியாளர்கள் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவண்ணாமலை: சத்துணவில் வழங்கப்படும் முட்டை குறித்து கேள்வி எழுப்பிய மாணவனை தாக்கிய ஊழியர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகில் உள்ள செங்குணம் கொள்ளைமேடு பகுதியில் அரசு துவக்கப்பள்ளி உள்ளது. இந்த அரசுப்பள்ளியில், சத்துணவு வழங்கிய போது, ஐந்தாம் படிக்கும் மாணவனுக்கு முட்டை வழங்கப்படவில்லை. மாணவன் கேட்டதற்கு இல்லை என பணியாளர்கள் கூறியுள்ளனர். ஆனால், சமையல் கூடத்தில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த முட்டைகளை அந்த மாணவன் கண்டுபிடித்ததுடன் அது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.இதனால், கோபமடைந்த சமையலர் லட்சுமி மற்றும் உதவியாளர் முனியம்மாள் ஆகியோர், வகுப்பறைக்குள் புகுந்து மாணவனை துடைப்பத்தால் தாக்கி உள்ளனர். மாணவன் கதறி ஓடிய போதும், ஆசிரியர்கள், சக மாணவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மாணவர்களை திட்டி உள்ளனர். இதனை அங்கிருந்தவர்கள் மொபைல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளனர். இதனால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டது. இதனையடுத்து லட்சுமி மற்றும் முனியம்மாள் இருவரையும் சஸ்பெண்ட் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.இந்நிலையில், லட்சுமி மற்றும் முனியம்மாள் மீது பிஎன்எஸ் 131 மற்றும் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போளூர் போலீசார், அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

எவர்கிங்
ஏப் 05, 2025 10:00

விடியலோ விடியல்


நரேந்திர பாரதி
ஏப் 05, 2025 04:07

விடியல் வேணும்...விடியல் வேணும்னு திராவிடிய திருட்டு கும்பலுக்கு ஓட்டு போட்டீங்களேடா?? மிஞ்சுனது விளக்கமாத்து அடியும், செருப்படியும், ஓரெழுத்து திரவ அபிஷேகமும்தானே? அடுத்த தடவையாவது நல்ல புத்தி, சுய புத்தியுடன் மக்களைப்பற்றி சிந்திப்பவகர்களுக்கு ஓட்டு போடுங்கள்


Bhaskaran
ஏப் 05, 2025 03:59

இவங்க எல்லாம் பெண்கலா பெண்களா இவர்களுக்கும் சிறுத்தைகள் ஆதரவு இருக்கும் போலிருக்கு முட்டை விற்பதை தடுத்தால் ஆத்திரம்


நிக்கோல்தாம்சன்
ஏப் 05, 2025 03:44

என்ன நடக்கிறது இங்கே? கேட்டால் விடியல் என்கிறார்கள் , உண்மையில் துடைப்பத்தால் பொதுமக்களை அடித்து கொண்டிருக்கிறார்கள்


தமிழன்
ஏப் 05, 2025 01:26

"அப்பா"வுக்கு மாணவர்களுக்கு சோறு ஊட்டுவது போல குளோசப்பில் போஸ் கொடுக்க மட்டுமே தெரியும் சாராய கடலை வளர்த்தெடுத்து அதில் நீந்தி சென்று மணலை கொள்ளையடித்து காசு பார்த்து மக்களின் சாவோடு விளையாட தெரியும் வாய்ச் செவடால் நன்றாக தெரியும் பிறகு காம பிசாசுகளை "சார்" ஆக்க தெரியும் பிறகு தேர்தல் வந்தால் மக்களை ஆட்டு மந்தையில் அடைத்து சாராயமும் பிரியாணியையும் கொடுக்க தெரியும் பின்பு குண்டு வைத்து தீவரவாதம் செய்யும் மூர்க்கன்களை தாங்கி பிடித்து கொண்டாட தெரியும் ஆனால் எங்க பரம்பரைக்கு திருட்டு ரயில் ஏறி ஊரவிட்டு ஊர்வந்து மாட்டிக்கொள்ளாமல் திருடுவது எப்படி என்றும் தெரியும் இப்படிக்கு விடிந்து வெந்த ஆட்சி


Kumar Kumzi
ஏப் 04, 2025 23:10

டாஸ்மாக்கில் கோடி கணக்கில் கொள்ளையடிக்கும் ஓங்கோல் துண்டுசீட்டு சுடலை மாடல் ஆட்சியில் சிறிய மானவனுக்கும் முட்டை கொடுக்க வக்கில்லை...


Raja k
ஏப் 04, 2025 22:06

உணவு இடைவேளையின் போது, பள்ளி வகுப்பறைக்குள் வெளி நபர் வர முடியாது, அந்த வீடியோவில் இறுதியில் ஒரு பெண்குரல் எல்லோரும் வெளியே போங்க என்கிறது, ஆக அந்த வீடியோவை எடுத்தது அந்த வகுப்பு பெண் ஆசிரியர்தான், வகுப்பை விட்டு ஆசிரியர் எங்கே போனார்? முதலில் அதை வேடிக்கை பார்த்து வீடியோ எடுத்த ஆசிரியரை தண்டிக்க வேண்டும்


Venkataraman Subramania
ஏப் 04, 2025 21:48

They should be terminated from the service and put them in jail with non bailable on whatsoever reasons for 10 years, therefore all other will get lesson from this and it should be uted immediately without giving any mercy


Nandakumar Naidu.
ஏப் 04, 2025 21:39

அவர்களையும் துடைப்பத்தால் அடித்து துவைக்க வேண்டும்.


கல்யாணராமன்
ஏப் 04, 2025 21:33

அந்த வாத்திகள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை