உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பள்ளி மாணவன் விபத்தில் பலி

பள்ளி மாணவன் விபத்தில் பலி

சிவகங்கை: சிறப்பு வகுப்புக்கு சென்ற தனியார் பள்ளி மாணவன் விபத்தில் பலியானது பெற்றோர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சூடாமணிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம். ரயில்வேயில் பணியாற்றி வருகிறார். இவரது மகன், சுதர்சன்(18). காரைக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இன்று காலை பள்ளியில் நடக்கும் சிறப்பு வகுப்புக்கு செல்வதாக கூறிவிட்டு புது பைக்கில் சென்றார். கல்லூரி சாலை அருகே சென்றபோது, எதிரே வந்த கார் பைக் மீது மோதியது. இதில் சுதர்சன் மயக்கமடைந்தார். 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தும், வாகனம் வர தாமதமானது. இதனால் அவர் அங்கிருந்தவர்கள் டூவிலரில் அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சுதர்சன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். காரை ஓட்டி வந்த, காரைக்குடி அழகப்பாபுரம் பகுதியை சேர்ந்த தீபக் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

nb
பிப் 16, 2025 21:17

bikes always wrong side riding


Ganapathy
பிப் 16, 2025 16:48

ஹெல்மெட் போடாம பையன் செய்த தவறுகளையும் பட்டியலிடவும்.


V Rajamohan
பிப் 16, 2025 15:46

கார் ஓட்டியவன் எத்தனை கிலோமீட்டர் ஸ்பீட்டில் வந்தான்..? மக்கள் நெருக்கம் மிகுந்த இடங்களில் கட்டுப்படுகத்கூடிய வேகத்திலே வாகனத்தை இயக்கவேண்டும். சிறுவன் மீது தவறே இருந்தாலும் இயந்திரத்தைஇயக்குவதால் மனிதனும் இயந்திரமாக மாறக்கூடாது.


ram
பிப் 16, 2025 15:04

dear parents don't give bike or any two welr for your kids now days traffic is worst pls RIB that son


enkeyem
பிப் 16, 2025 14:50

பிளஸ் டூ படிக்கும் மாணவன் 18 வயதுக்கு குறைவானவன். அவனுக்கு பைக் ஓட்ட கொடுத்தது அவனது பெற்றோர் குற்றம். கார் ஓட்டுனரை எத்தகு கைது செய்ய வேண்டும்?