உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பள்ளி மாணவர்களுக்கு இ - மெயில் முகவரி உருவாக்கி தர உத்தரவு

பள்ளி மாணவர்களுக்கு இ - மெயில் முகவரி உருவாக்கி தர உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பள்ளி மாணவர்களுக்கு இ - மெயில் முகவரி உருவாக்கி தர ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழக திறன் மேம்பாட்டு கழகம் வழங்கும் இணைய தள சான்றிதழ் படிப்பு, உயர்கல்வி போட்டி தேர்வுகளுக்கு விண்ணப்பித்தல், உயர் கல்விக்கு விண்ணப்பித்தல் என, அனைத்து செயல் பாடுகளுக்கும், ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியே இ - மெயில் முகவரி தேவைப்படுகிறது. இதனால், கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில், 9 முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு, இ - மெயில் முகவரி உருவாக்க உதவி செய்யும்படி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து நடப்பாண்டில், ஒன்பதாம் வகுப்பு வந்துள்ள மாணவ - மாணவியருக்கும், கடந்த ஆண்டு இ - மெயில் உருவாக்காத, 10 முதல், பிளஸ் 2 வரையான மாணவர்களுக்கும், பள்ளியிலேயே இ - மெயில் முகவரி உருவாக்கித்தர உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த முகவரியை, 'எமிஸ்' இணையதளத்தில் பதிவு செய்யவும், இ - மெயில் பயன்படுத்து வது குறித்து விளக்கத்தை கற்றுத்தரவும், தலைமை ஆசிரியர்களுக்கு அறி வுறுத்தப்பட்டுள் ளது. - - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
ஆக 08, 2025 11:30

மாணவர்களின் இ மெயில் திருடி சாரி சாரி திராவிட மொழியில் முறைகேடாக புரிந்ததா முறைகேடாக எடுத்து மாணவர்களை மதம் மாற்ற போதை பொருள் உபயோகிக்க லவ் ஜிஹாத் செய்ய திட்டம் தான்.


Janu
ஆக 08, 2025 10:58

டீச்சிங் வேலைய தவிர மீதி எல்லா வெட்டி வேலையும் டீச்சருக்கு தந்து டென்ஷன் பண்றாங்க.. இப்போ இருக்கற பசங்க யாரு instagram, பேஸ்புக் இல்லாமஇருக்காங்க...??ஈமெயில் ஓபன் பண்ண தெரியாத???


rama adhavan
ஆக 08, 2025 05:05

வேண்டாத வேலை. மாணவர்களுக்கு தெரியாதா ஈ மெயில் உருவாக்க? அரசுப் பள்ளிகள் மாணவர்களின் ஈ மெயில் ஐ டி அரசுக்கும் தெரிய வாய்ப்பு உள்ளது. அதனால் கட்சி உறுப்பினர் சேர்க்கை, கட்சி சம்பந்தம் உள்ள அறிக்கைகள் மாணவர்களுக்கு பரப்ப பட வாய்ப்பு உள்ளது.


Kasimani Baskaran
ஆக 08, 2025 03:57

தனிப்பட்ட நிறுவனங்கள் நடந்தும் சேவையை பயன்படுத்துவதை விட பள்ளிக்கல்வித்துறையே ஈமெயில் செர்வர்களை பராமரிக்கலாம். இல்லை என்றால் தகவல்கள் பத்திரமாக இருக்க வாய்ப்பே இல்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை