உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொறுமையை சோதிக்கும் டேப் பள்ளி ஆசிரியர்கள் குமுறல்

பொறுமையை சோதிக்கும் டேப் பள்ளி ஆசிரியர்கள் குமுறல்

சென்னை : ஆசிரியர்களின் கல்வி செயல்பாடுகளுக்காக பள்ளிக்கல்வித் துறை சார்பில் வழங்கப்பட்ட கையடக்க கணினி எனும் 'டேப்' மெதுவாக இயங்கி, அவர்களின் பொறுமையை சோதித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், மாறி வரும் கற்றல் - கற்பித்தல் சூழலுக்கு ஏற்ப, ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்க, பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டது. இதற்காக, கடந்த 2023 - 24ம் கல்வியாண்டில், இடைநிலை ஆசிரியர்களுக்கு, 79,723 கையடக்க கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டன. பின்னர், ஆசிரியர்களுக்கு படிப்படியாக விநியோகம் செய்யப்பட்டன. இந்த புதிய கையடக்க கணினி, மாணவர்களின் வருகைப் பதிவு மற்றும் சுய விபரங்களை, 'எமிஸ்' செயலியில் பதிவேற்றம் செய்வது, குழந்தைகளுக்கு கல்வி சார்ந்த வீடியோ காட்சிகளை காண்பிப்பது என, கல்வி சார்ந்த செயல்பாடுகளுக்காக வழங்கப்பட்டது. ஆனால், இந்த கையடக்க கணினிகள், தற்போது ஆசிரியர்களின் பொறுமையை சோதிக்கின்றன; இவை மிக மெதுவாக இயங்குகின்றன என, ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து, அவர்கள் கூறியதாவது: பள்ளிக்கல்வித் துறை வழங்கிய கையடக்க கணினிகள், மிகவும் மெதுவாக இயங்குகின்றன. வருகைப் பதிவை மேற்கொள்ளவே சிரமமாக இருக்கிறது. சில நேரங்களில் செயல்படாமல் நின்று விடுகின்றன. எங்களின் பொறுமையை மிகவும் சோதிக்கின்றன. இதனால், அவற்றை பயன்படுத்தாமல், எங்கள் மொபைல் போனை பயன்படுத்து கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

ManiMurugan Murugan
ஆக 31, 2025 00:31

ManiMurugan Murugan அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கட்சி கூட்டணி எந்த ஒரு திட்டம் கொண்டு வந்தாலும் அவர்கள் குடும்ப ஆதாயம் மட்டும் தான் தலைக்கவசம் குடும்பக் கம்பெனி லாபம் வந்தவுடன் சட்டம் நீக்கம் அடுத்து ்இன்வெட்டர் குடும்ப கரி மற்றும் இன்வெட்டர் அதுவும் போபால் உற்பத்தி லாபம் அவ்வளவு தான் இப்போது கைகணினி லாபம் அவ்வளவு தான்


JaiRam
ஆக 30, 2025 14:30

வெட்டி செலவு கிடையாது ஊழல் 5 ஆயிரம் கூட மதிப்பு பெறாதவற்றை பத்து ஆயிரத்துக்கு மேல் டெண்டர் விட்டு லஞ்சம் வாங்கி கொண்டு ஊழல் அடுத்து வரும் தேர்தலில் இந்த ஆசிரியர்கள் திருட்டு கூட்டத்திக்கே ஒட்டு போடுவார்கள்


Chandru
ஆக 30, 2025 09:28

Worst government on this planet earth. I m 63 years of age and has not seen a horrible , inefficient Government like this.


HoneyBee
ஆக 30, 2025 08:50

அடுத்து வரும் தேர்தலில் ₹200 குவார்ட்டர் பிரியாணிக்கு ஆசை பட்டு ஓட்டு போட்டு மறுபடியும் செத்து மடியுங்க அரசு ஊழியர்களே


VENKATASUBRAMANIAN
ஆக 30, 2025 08:13

இதுதான் திராவிட மாடல். நெட்வொர்க் ஸ்பீடு சரி செய்ய வேண்டும். இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் இருக்கிறார்கள் அதிகாரிகள்.


Arul. K
ஆக 30, 2025 12:14

எந்திரம் பழுதான விமானத்தில் எவ்வளவு உயர்தரமான பெட்ரோல் நிரப்பினாலு பறக்காது.


Gopal
ஆக 30, 2025 08:10

வெறும் வாய் பேச்சு. வெட்டி பசங்க. ஒன்னும் உருப்படியா பண்ண தெரியாது. எல்லாத்திலயும் ஊழல்.


ManiK
ஆக 30, 2025 07:28

திமுக அரசின் சாதனை திட்டம் எண்-420. மக்கள் பணத்தை வெட்டியாக செலவு செய்வதில் மேலும் ஒரு சாதனை.


Thiagaraja boopathi.s
ஆக 30, 2025 07:25

மீண்டும் திமுக விற்கு வோட்டு போடுங்க எல்லாம் சரியாகி விடும்


raja
ஆக 30, 2025 08:18

இதாண் திராவிட திருட்டு மாடல் ஆட்சி.....


முக்கிய வீடியோ