உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாணவனுக்கு பாலியல் தொல்லை;பள்ளி வார்டன் கைது

மாணவனுக்கு பாலியல் தொல்லை;பள்ளி வார்டன் கைது

ஊட்டி:ஊட்டியில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 10 வயது பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வார்டன் கைது செய்யப்பட்டார்.நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பிரபல தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் உள்ள விடுதியில் குன்னூரை சேர்ந்த ஆலன் மாக்ஸ்வெல் சிக்யூரா, 57, என்பவர் வார்டனாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், ஒரு தம்பதியின், 10 வயது மகன் பள்ளியில் 5 ம் வகுப்பு படித்து வருகிறான். அந்த மாணவனுக்கு வார்டன் கடந்த சில நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவன் எதிர்ப்பு தெரிவித்தும் அவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அவருடைய தொந்தரவு அதிகமாக இருந்ததால் பயந்துபோன மாணவன் இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளான். மேலும், மாணவன் பள்ளிக்கு செல்ல பயந்துள்ளார். மேலும், உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். டவுன் டி.எஸ்.பி., யசோதா உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் அல்லிராணி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து வார்டனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை