தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
கடலூர்: கனமழை எச்சரிக்கை காரணமாக , திருவள்ளூர், தஞ்சாவூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், விழுப்புரம் மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று(நவ.,27) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.சென்னை, செங்கல்பட்டில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை(நவ.27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rut3ktkd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும், நாளை அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. பள்ளிகள், கல்லூரிகள்இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர்தஞ்சாவூர்,நாகை,கடலூர்,மயிலாடுதுறை,திருவாரூர், விழுப்புரம் ஆகிய ஏழு மாவட்டங்களில் இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.பள்ளிகள் மட்டும்சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்படுவதாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்து உள்ளனர்.கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்காலிலும் நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்து உள்ளார்.தேர்வு ஒத்திவைப்புகனமழை எச்சரிக்கை காரணமாக, திருச்சி பாரதிதாசன் பல்கலையின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.அண்ணாமலை பல்கலைகடலூர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் இன்று நடக்கவிருந்த இரண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.