வாசகர்கள் கருத்துகள் ( 4 )
அரசு பள்ளிகளின் தரத்தைப்பற்றி எந்த அரசும் பேசுவதிலை என்பது வேதனை. அதை தரம் உயர்த்த எந்த நடவடிக்கையும் போதுமானதாக இல்லை. வகுப்பறையில் மாணவர்கள் அமர தரமான டெஸ்குகள், குடிநீர், கழிவறை, விளையாட்டு மைதானம், தகுதியான ஆசிரியர்கள் மற்றும் தங்கள் கட்சி கொள்கைகளையும் தலைவர்களையும் துதிபாடாத நல்ல பாடத்திட்டம் இவைகள் இருந்தால் மக்கள் நிச்சயம் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பார்கள். இவற்றை முதலில் சரிசெய்யவேண்டியது அரசின் கடமை
என்ன ஒரு முட்டாள்தனம், பத்து மாணவர்கள் போதும் என்றால், குறைந்தது இரண்டு ஆசிரியர்கள், சத்துணவு மற்றும் இதர செலவுகளை சேர்த்து கணக்கிட்டால் ஆண்டுக்கு குறைந்தது நாற்பது லட்சம் செலவு ஏற்படும், ஆக ஒரு மாணவனுக்கு அரசு செலவிடும் டியூசன் பீஸ் நான்கு லட்சம் ரூபாய், இது தனியார் பள்ளியை விட பல மடங்கு அதிகம்..
அழுது வடிந்து பயனில்லை பள்ளிக்கூடங்கள் தரமாக நடந்தால் நிச்சயமாக மாணவர்கள் தானாக வருவார்கள் நம்மை திருத்திக் கொள்ளாமல் மாணவர்கள் வரவில்லை என்று வருத்தப்பட்டு பயன் என்ன தனியார் பள்ளிக்கு செல்லாமல் இருக்கிறார்கள் தனியார் பள்ளிகளுக்கு ஆகும் செலவைவிட அரசு பள்ளிகளுக்கு செலவு அதிகமாகின்றது தனியார் பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தை விட அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள் அதிக சம்பளம் பெறுகிறார்கள் தனியார் பள்ளிகளுக்கு இருக்கும் வழிகாட்டிகளை விட அரசு பள்ளிகளுக்கு ஏராளமான அதிகாரிகள் வழிகாட்டிகளாக இருக்கிறார்கள் இருந்தாலும் தரம் இல்லை என்பது தானே மக்களின் தீர்ப்பு அதை ஏன் புரிந்து கொள்ள தயார் இல்லை சிந்தனையில் நேர்மை இல்லையோ ஒரு வேலை
பத்து மாணவர்களுக்கு பத்து வாத்தியாரை வைத்து நடத்தினால், நாடு நாசமாகும். அதற்கு பதில், மாணவர்களை வேறொரு பள்ளிக்கு அனுப்புங்கள்.