உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஞ்ஞானியான மா.கம்யூ., தலைவர்

விஞ்ஞானியான மா.கம்யூ., தலைவர்

பல்லடம்:தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில ஊடக பிரிவு செயலர் ஈஸ்வரன் அளித்த பேட்டி: கள்ளுக்கு ஆதரவாக பேசாவிட்டாலும் பரவாயில்லை; ஆனால், ஆரோக்கியமற்ற பானம் என சில அரசியல் கட்சி தலைவர்கள் புரிதல் இல்லாமல் பேசி வருகின்றனர். மதுக்கடைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கேள்வி கேட்க துப்பில்லாத சில அரசியல் கட்சி தலைவர்கள், கள் குறித்து மட்டும் தவறான கருத்துகள் கூறுவது ஏன்? மா.கம்யூ., கட்சியின் மாநில செயலர் சண்முகம், 'கள் உணவுப் பொருள் என கூறுவோர், மூன்று வேளையும் அதையே குடிக்க முடியுமா' என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஒரு கட்சியின் மாநிலச் செயலராக உள்ள சண்முகம், எப்போது உலகப் புகழ்பெற்ற உணவுப்பொருள் ஆராய்ச்சி நிபுணராக மாறினார் என தெரியவில்லை.கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை வெளியிட்டுள்ள 'வேதியியல் விஞ்ஞானி' சண்முகம், கள், உணவுப் பொருள் அல்ல என்பதை முதலில் நிரூபிக்கட்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ