உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆட்சியைப் பிடிக்க திரை மாயை போதாது : திருமா

ஆட்சியைப் பிடிக்க திரை மாயை போதாது : திருமா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''இன்றைக்கு ஒவ்வொருத்தனும் தானே ஹீரோ என்ற நிலைக்கு உயர்ந்து விட்டான். 1977ம் ஆண்டு காலம் வேறு, 2026ம் ஆண்டு காலம் வேறு'' என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.இது குறித்து திருமாவளவன் கூறியதாவது: இன்றைய தலைமுறையினர் அரசியல் வாதிகளை விடவும் அரசியல் விழிப்புணர்வு பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். 40 ஆண்டுகள், 50 ஆண்டுகள் அரசியல் களத்தில் பணியாற்றுக்கூடியவர்களின் போக்குகளை, துணிந்து விமர்சிக்கும் கூடிய அளவுக்கு அரசியல் ஈடுபாடு, அரசியல் விழிப்புணர்வு தமிழகத்தில் கூடுதலாக இருக்கிறது. வளர்ந்து இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.

இயல்பான ஒன்று தான்

எனவே திரை மாயை ஆட்சியை பிடிக்க போதாது. தமிழக மக்கள் அப்படி ஏமாற மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். லட்சக்கணக்கில் மக்கள் திரள்வது என்பது, திரைப்படத்தில் புகழ்பெற்ற, செல்வாக்கு பெற்ற கதாநாயகர்களுக்கு இயல்பான ஒன்று தான். ஆந்திராவில் பவன் கல்யாண் போல, தமிழகத்தில் விஜயகாந்த், விஜய் உட்பட பல தலைவர்களை தமிழகத்தில் பார்க்கிறோம். ஆனால் அவர்களால் கடைசி வரை தாக்குப்பிடித்து கொண்டு நிற்க முடிகிறதா என்ற கேள்வி எழுகிறது.

கருத்தியல் இல்லை

ரசிகர் பட்டாளம் வேறு, அரசியல் விழிப்புணர்வு பெற்ற களப்பணியாளர்கள் என்பது வேறு. சில லட்சம் பேர் அரசை கைப்பற்ற போதாது. ஒரு இடத்தில் 5 லட்சம் பேர், 10 லட்சம் பேர் திரண்டால் பிரமிப்பை உருவாக்கும். ஆனால் அது ஆட்சிக்கு பயன்படாது. அதை வைத்து நாம் ஆட்சி மாற்றமே நிகழ்ந்து விடும் என்று நாம் சொல்ல முடியாது. கட்சி தொடங்கி, இத்தனை ஆண்டுகள் கடந்த நிலையில் இரண்டு மாநில மாநாடுகளை நடத்தி இருக்கிறார்கள்.

வெற்று சவடால்கள்

ஒன்றாவது மாநாடு, இரண்டாவது மாநாடு என்று பெயர் சூட்ட முடிந்தது. ஆனால் மாநாட்டில் கருத்தியல் இல்லை. 3 மணி நேரமோ, 4 மணி நேரமோ நிகழ்ச்சி நடந்தது. வெறும் கூச்சல், வெற்று சவடால்கள் விஜய் மாநாடு என்று சொல்ல வேண்டிய நிலை இருக்கிறது. அதில் அதிகபட்சமாக, ஆட்சி கைப்பற்றுவோம் என்ற வேட்கை தெரிகிறது. எம்ஜிஆர் காலத்தில் மக்கள் இருந்த மாதிரி இப்பொழுது இல்லை. இன்றைக்கு இருக்கிறவர்கள் வந்து, ஒவ்வொருத்தவரும் ஹீரோ, ஒவ்வொருத்தவரும் பத்திரிகையாளர்.

மயக்கம் இருந்துச்சு

இன்றைக்கு மீடியா சொல்வதை நம்பி கொண்டு இருக்கும் மக்களாக இல்லை. ஒவ்வொருத்தவரும் மீடியா பர்சனாக மாறிவிட்டான். ஒரு காலத்தில் வெறும் ஹீரோ திரையில் இருந்து பார்த்தான், மயக்கம் இருந்துச்சு, இன்றைக்கு ஒவ்வொருத்தனும் தானே ஹீரோ என்ற நிலைக்கு உயர்ந்து விட்டான். 1977ம் ஆண்டு காலம் வேற, 2026ம் ஆண்டு காலம் வேறு. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

joe
ஆக 24, 2025 11:31

தமிழ் நாட்டை விட்டு வெளியிலே ஒடி உன்னால் பிழைக்க முடியுமா. தமிழன் என்ன உன்னைப்போல் பிக்காலியா


joe
ஆக 24, 2025 11:28

இவர் ஒரு அரசியல் .........


joe
ஆக 24, 2025 11:26

ஓரங்கட்டு .சும்மா கூவிக்கிணு .உன்னைப்போல் எத்தனை பேரை நாங்க பார்த்திருக்கிறோம் .


joe
ஆக 24, 2025 11:21

ஏண் நீயும் உன் கட்சிக்காரனுகளும் சாமியையும் சாமீ சிலைகளையும் அவமதித்து விட்டு இப்போ நல்லவன் மாதிரி கூவிக்கினு .ராஸ்க்கல் .ஏண்டா இப்படி கூவிக்கிணு .உன் யோக்கியதை தமிழ் நாட்டுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டனுமா


joe
ஆக 24, 2025 11:17

தேவுடா தேவுடா என்றால் நீயும் ஒரு தேவுடாதான் .புரிந்ததா


joe
ஆக 24, 2025 11:01

அட தேவுடா ஏண் கூவிக்கிட்டு ..ஒட்டு மொத்தமா வாயை திறக்காதே .


kamal 00
ஆக 24, 2025 05:31

இவன் வேற அப்பப்போ கூவிக்கிட்டு தூக்கிட்டு போங்க


sankar
ஆக 23, 2025 22:08

ஆமா ரெண்டு சீட்டு போதும்


skrisnagmailcom
ஆக 23, 2025 21:52

இவர் என்ன சொல்ல வர்றாரு 1977 காலத்து மக்கள் இல்லையெனில் அக்கால மக்கள் முட்டாள்களா? சரி செயலலிதா 1991–ல் எப்படி முதல்வரானார்


c.mohanraj raj
ஆக 23, 2025 21:39

ஆமாம் எல்லோர் காலிலும் விழ வேண்டும் கோடிக்கணக்கில் பெற வேண்டும் ஸ்கூல் கட்ட வேண்டும் ஆனால் அது என்னுடையது அல்ல என்று சொல்ல வேண்டும் என்ன பிழைப்படா இது...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை