உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடல் சீற்றம் அதிகரிப்பு; நீர்வழித்தடங்கள் கண்காணிப்பு

கடல் சீற்றம் அதிகரிப்பு; நீர்வழித்தடங்கள் கண்காணிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கடல் சீற்றம் காரணமாக, சென்னையின் பிரதான ஆறு மற்றும் கால்வாய்கள் உள்ளிட்ட நீர்வழித்தடங்களை கண்காணிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lnc5jvhj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடல் சீற்றம் காரணமாக, சென்னையின் பிரதான ஆறு மற்றும் கால்வாய்களின் முகத்துவாரங்களில், மணல் மற்றும் திட கழிவுகளால் அடைப்பு ஏற்படுகிறது. இதனால், வெள்ளநீர் வெளியேறுவதில் தாமதம் ஏற்பட்டால், சென்னை நகரில் சேதம் அதிகரிக்கும். இதன் தாக்கம் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் ஏற்படும். வங்க கடலில் புயல் உருவாகியுள்ள நிலையில், வெள்ளநீரை வெளியேற்றுவதற்கு வசதியாக, முகத்துவாரங்களில் தொடர்ந்து துார்வாரும் பணிகளை மேற்கொள்ள நீர்வளத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக பொக்லைன் வாகனங்கள் அங்கு தயாராக நிறுத்தப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை நீர்வளத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

MARI KUMAR
நவ 30, 2024 18:59

கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் நீர் வழி தடங்களை கண்காணிப்பது போல், கடற்கரையில் மக்கள் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்


சமீபத்திய செய்தி