உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அப்பா என்ற சொல்லுக்கு மாண்பு உள்ளது; சீமான் பதில்

அப்பா என்ற சொல்லுக்கு மாண்பு உள்ளது; சீமான் பதில்

விக்கிரவாண்டி: 'அப்பா என்ற சொல்லுக்கு மாண்பு உள்ளது. பெரிய புனிதம் உள்ளது' என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளித்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=41olwg2b&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0முன்னாள் பிரதமர் ராஜிவ் குறித்து அவதூறாகப் பேசியதாக, தொடரப்பட்ட வழக்கில் விக்கிரவாண்டி கோர்ட்டில் சீமான் ஆஜரானார். பின்னர், நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் நிதியைத் தருவோம் என்பது கொடுங்கோண்மை. உரிய நிதியைத் தராவிட்டால் வரி செலுத்த முடியாது என்பதை வலியுறுத்தி தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதை தி.மு.க., அரசு செய்யாது. தி.மு.க., கோழைகளின் கூடாரம். நன்றாக பேசும், சண்டை செய்யாது. தாய்மொழிக் கல்விக் கொள்கையே இந்தியாவில் வாழும் அனைத்து தேசிய இனங்களுக்குமானத் தேவையும், உரிமையும் ஆகும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுங்கள். எங்களுக்கான கல்வியை நாங்கள் கொடுத்துக் கொள்கிறோம். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரை ஏன் சுட்டுக் கொன்றீர்கள்? அவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலம் என்ன ? இவ்வாறு அவர் கூறினார்.

பெரிய புனிதம்

அப்பா என்று அழைக்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளாரே? என நிருபர்கள் எழுப்பி கேள்விக்கு, 'அப்பா என்றால் இப்படி பண்ணிட்டீங்களே அப்பா என்று சொல்லி இருப்பார்கள். அவரையும், அவரது கட்சிக்காரர்களையும் தவிர வேறு யாராவது ஒருவரை நல்லாட்சி நடக்கிறது என்று சொல்ல சொல்லுங்கள்.பள்ளிக்கரணை ஏரியை ஆக்கிரமித்து அரசு குப்பை மேடாக்கி உள்ளது. அரசு ஆக்கிரமித்தால் சட்டம், அப்பாவி மக்கள் ஆக்கிரமித்தால் குற்றம். அப்பா என்ற சொல்லை தனக்கு குறியீடாக ஆக்க வேண்டும் என நினைக்கிறார். அப்பா என்ற சொல்லுக்கு மாண்பு உள்ளது. பெரிய புனிதம் உள்ளது. எல்லா பிள்ளைகளையும் நன்றாக படிக்க வைக்க வேண்டும். நன்றாக குடிக்க வைக்க கூடாது. இவ்வாறு சீமான் பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

நரேந்திர பாரதி
பிப் 19, 2025 04:00

அப்பா... திராவிடியப்பா... ஓங்கோலப்பா... டோப்பாப்பா... சாராயப்பா... கஞ்சாப்பா... பதநீரப்பா... டாஸ்மாக்கப்பா... அப்பப்பா... தலை சுத்துதப்பா...


தாமரை மலர்கிறது
பிப் 18, 2025 20:20

நேற்று மும்மொழியை ஆதரித்து சீமான் பேசினார். இன்று அதே நாக்கு புரட்டி பேசுகிறது. புரட்டு மன்னன் ஆமைக்கறி சைமன் என்பது உலகம் அறிந்த உண்மை.


V.Mohan
பிப் 18, 2025 19:31

பெயரிலே பொய் புரட்டு வைத்து ஆன்மீகவாதிகளையும் அவரகளுக்கு உதவுபவர்களையூம் சாக்கடைத்தனமாக வமரிசிக்கும் எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரங்களுக்கு மக்களுக்கு நல்லது செய்யும் எண்ணமே வராது. எதிர்மறையாக பாஜகவையும் பிரதமரையும் விமரிசிப்பது, எந்தவித சரியான கருத்தும் சொல்லாது விடியல்கள் செய்வது எல்லாம் சரி என்று அடிமட்டத்தனமாக ஒத்து ஊதுவது.. ?


T.sthivinayagam
பிப் 18, 2025 19:27

கட்சி தலைவர் என்றால் ஒரு மதிப்பு இருந்தது .இப்ப அதை எல்லாம் சிலரிடம் ஏதிர்பார்பது கஷ்டம்.


என்றும் இந்தியன்
பிப் 18, 2025 17:54

அப்பா என்று அழைக்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளாரே? நான் கிழவன் இல்லை அதாவது தாத்தா இல்லை சிறுகுழந்தைகள் அப்பா அதாவது எனக்கு வெறும் 36 வயது தான் ஆகிறது என்று நான் காட்டிக்கொள்ளவேண்டும் என்று அப்படி அழைக்க சொல்லியிருப்பார்


P. SRINIVASAN
பிப் 18, 2025 17:22

நீயல்லாம் ஒரு ஆளு.. உனக்கு என்ன தகுதி இருக்குன்னு பேசற? நீ ஒரு அரசியல் வேபாரி


P. SRINIVASAN
பிப் 18, 2025 17:17

நீ யாரை பாத்தாலும் எங்க அப்பா, தாத்தா, மாமா சொல்றது உனக்கு சரி என்றல், அவருக்கும் பொருந்தும்.


ஓங்கோல்நைனா
பிப் 18, 2025 17:15

நைனா ந்நு செல்லமா கூப்பிடலாமே. எல்லோருக்கும் இணக்கமான வார்த்தை.


rama adhavan
பிப் 18, 2025 17:09

அப்பா அலங்காரச் சொல் அல்ல. உறவின் முதல் சொல்.


VSMani
பிப் 18, 2025 17:09

ஜே அம்மா ஸ்டாலின் அப்பா. விடுங்கப்பா இந்த சின்ன விசயத்தை