உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இரண்டாவது வரிசையில் பன்னீர்செல்வத்திற்கு சீட்

இரண்டாவது வரிசையில் பன்னீர்செல்வத்திற்கு சீட்

சென்னை:முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு, சட்டசபையில் இரண்டாவது வரிசையில், இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அ.தி.மு.க.,வில் இருந்தபோது, எதிர்க்கட்சி துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி அருகே, அவருக்கு இருக்கை தரப்பட்டது.கட்சியிலிருந்து அவர் நீக்கப்பட்ட பின், எதிர்க்கட்சி துணைத் தலைவராக உதயகுமாரை, அ.தி.மு.க., தேர்வு செய்தது. அவருக்கு முன்வரிசையில், பழனிசாமிக்கு அருகே இருக்கை ஒதுக்கும்படி வலியுறுத்தி வந்தது.நீண்ட இழுபறிக்கு பின், இருக்கைகளில் மாற்றம் செய்யப்பட்டது. பழனிசாமி இருக்கை அருகே உதயகுமாருக்கு, இருக்கை தரப்பட்டுள்ளது. பன்னீர்செல்வத்திற்கு, இரண்டாவது வரிசையில், ஏற்கனவே முன்னாள் சபாநாயகர் தனபால் அமர்ந்திருந்த இருக்கை ஒதுக்கப்பட்டது. பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ., மனோஜ் பாண்டியனுக்கு, ஏற்கனவே உதயகுமார் இருந்த, நான்காவது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. பன்னீர்செல்வம் நேற்று சட்டசபைக்கு வரவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ