இனி 5ம் தேதிகளில் சி.இ.ஓ.,க்களுடன் செயலர் ஆய்வு
சென்னை: இனி ஒவ்வொரு மாதமும் 5ம் தேதி, முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்த, பள்ளிக்கல்வி துறை செயலர் முடிவு செய்துள்ளார். இதுகுறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'பள்ளிக்கல்வி துறை செயலர் தலைமையில் ஒவ்வொரு மாதமும் 5ம் தேதி, கல்விசார் ஆய்வு கூட்டம் நடத்தப்படும். 'அதில் விவாதிக்கப்படும் விஷயங்கள் குறித்து, மாதத்தின் கடைசி வாரத்தில் தெரிவிக்கப்படும். அதன்படி, டிச., 5ல் ஆன்லைன் வாயிலாக கூட்டம் நடத்தப்படும்' என கூறப்பட்டுள்ளது.