உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மரங்களுக்கு முத்தம் கொடுத்து மாநாட்டை அறிவித்தார் சீமான்

மரங்களுக்கு முத்தம் கொடுத்து மாநாட்டை அறிவித்தார் சீமான்

சென்னை: திருத்தணியில் மரங்களின் மாநாட்டுக்கான இடத்தை பார்வையிட சென்ற போது மரங்களை கட்டிப்பிடித்து சீமான் முத்தம் கொடுத்தார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அண்மைக் காலமாக நூதன முறையில் ஆர்ப்பாட்டங்களை கையில் எடுத்து நடத்தி வருகிறார். பனையேறும் தொழிலாளர்களுக்காக, கள் மீதான தடையை நீக்க கோரி பனை மரத்தில் ஏறி, கள் இறக்கும் போராட்டத்தை நடத்தினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=a5j5i15a&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பின்னர் மேய்ச்சல் நிலத்தை ஆக்கிரமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாடு மேய்க்கும் போராட்டம் நடத்தினார். அந்த வகையில் அவர் வரும், ஆகஸ்ட் 30ம் தேதி 'மரங்களோடு பேசுவோம்; மரங்களுக்காகப் பேசுவோம்!' என்ற தலைப்பில் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே அருங்குளம் கிராமத்தில், போராட்டம் நடத்த இருக்கிறார். மரங்களின் மாநாடு என்ற பெயரில் நடக்க உள்ள அந்த நிகழ்ச்சிக்கான இடத்தைஇன்று நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது மரங்களுடன் சீமான் போட்டோ எடுத்துக் கொண்டார். மரங்களுக்கு முத்தம் கொடுத்தார். அந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் சீமான் பதிவிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

உலக உயிர்களின் மூச்சு

பின்னர் நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: மனிதர்கள் இல்லாமல் மரங்கள் வாழ்ந்து விடும். ஆனால் மரங்கள் இல்லாமல் மனிதர்கள் வாழ முடியாது. எந்த உயிரினமும் வாழ முடியாது. உலக உயிர்களின் மூச்சி மரங்கள். இதனை நாம் ஆக்சிஜன் என்று சொல்கிறோம்.

விளம்பரத்தில் வளர்க்கும்

பிள்ளைகளுக்கு இயற்கையை நேசிக்க கற்றுக் கொடுக்க வேண்டும். மரங்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு இவ்வளவு இருக்கிறதா என்பதற்காக மாநாட்டை நடத்துகிறோம். இந்த அரசு பதாகைகளில் தான் மரம் வளர்க்கும். விளம்பரத்தில் வளர்க்கும்.மண்ணில் வளர்க்காது.1.5 கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள் என்கிறார்கள்.ஒவ்வொரு தலைவர் பிறந்தநாளுக்கும் வருடத்திற்கு 1.5 கோடி மரம் வைத்திருந்தால் இப்பொழுது எவ்வளவு இருக்கும். ஆனால் வைக்கவில்லை. நடிகர் இருக்கிறார். தனது பிறந்தநாள் அன்று ஒவ்வொரு ரசிகரும் மரம் நடுங்கள் என்றால் எவ்வளவு மரங்கள் வளர்ந்திருக்கும்.பருவநிலை மாறிவிட்டது என்று சொல்கிறார்கள். பருவநிலை மாறிவிட்டதா அல்லது நீ மாற்றினாயா இதுதான் கேள்வி. வணங்குவதற்கு லட்சம் சாமி இருக்கிறது. ஆனால் வாழ்வதற்கு ஒரு பூமி தான் இருக்கிறது. வெயில் அடித்தால் நீங்கள் குடை பிடிக்கிறீர்கள். புவி வெப்பமடைதல் என்ன செய்ய வேண்டும். அதற்கு குடை பிடிக்க வேண்டும்.

குடை பிடிக்கணும்!

என்ன குடை பிடிக்க வேண்டும் பச்சைக் குடை பிடிக்க வேண்டும் அதுதான் மர குடை. வளர்ப்பதில் என்ன கஷ்டம். பத்தாண்டு பசுமை திட்டம். பல கோடி பனைத்திட்டம் என்று அறிவித்து விடுகிறேன். ஐந்து ஆண்டுகள் ஆட்சியை கொடுங்கள் நான் பூமியை பச்சை போர்வையால் போர்த்தி விடுகிறேன். இவ்வாறு சீமான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

அசோகா
ஆக 21, 2025 07:42

அமாவாசை வந்தா அண்ணோட‌ உக்கிரம் அதிகமாயிடும்


Matt P
ஆக 21, 2025 00:46

மரத்துக்கடியில் ஒண்ணுக்கு அடிக்கும்போது அடிப்பானுக. முத்தம் கொடுக்கும்போது முத்தம் தூக்கம்போது வரும்போது அங்கேயே தூக்கம். மரத்தை வைச்சும் அரசியல் ஆரம்பிச்சாச்சு. மரங்களை வெட்டி நடு சஆலையில் போட்டு போக்குவரத்துக்கு இடைஞ்சல் செஞ்சானுக. ..இந்து மதத்தில் மரங்களை இறைவனாக மதிப்பது காலா காலமாக இருந்து கொண்டு தான் இருக்கிறது. முத்தம் கொடுத்து தான் அன்பை காட்ட வேண்டும் என்று இல்லை.


தாமரை மலர்கிறது
ஆக 20, 2025 23:29

கதை சொல்லி உலகிலேயே அதிகம் சம்பாரித்தவர் ஹேரி பாட்டர் கதையெழுதியவர். அதை தாண்டி அதிகளவு பணம் சம்பாரித்தவர் நமது நொண்ணன் தான்.


sankar
ஆக 20, 2025 22:58

கடந்த பத்து வருசமா மரம் நட்டு இருந்தா தமிழ் நாடு பசுமை ஆயிருக்கும் . தம்பிங்க எங்க போனாங்க அண்ணன் எங்கே போனாரு .முதலில் திமுக குடை பிடிப்பதை நிறுத்துங்க அப்புறம்மா குடை அமைக்கலாம்


S7-fishing channel d
ஆக 20, 2025 22:43

இவருக்கு வேற மரமே கிடைக்கல போல. இவர் கண்ணுக்கு செம்மரம் மட்டும் தான் தெரியும் போல


Kavi Priyan Adelaide
ஆக 20, 2025 20:20

பிறந்ததுல இருந்தே இப்படித்தானாம்…! மூளை வளர்ச்சி கொஞ்சம் கம்மியாம்.. பாவம்…!


முதல் தமிழன்
ஆக 20, 2025 20:18

மன நல வைத்தியம் தேவை. மக்களுக்கு இவர் செய்வது அப்படிதான் தோன்றும். யதார்த்த அரசியல் மட்டுமே இங்கு வெல்லும். மற்றவை சும்மா தமாஷாக மட்டும் பார்க்கப்படும்.


M Ramachandran
ஆக 20, 2025 19:58

மரங்களை செமை படுத்தும் முயற்சி என்று உதயத்தில் ஒரு கட்சி அறிவிக்கக்கூடும்.


SUBBU,MADURAI
ஆக 20, 2025 20:25

நம் அண்ணன் சீமானின் இந்த முத்தக் காட்சியை பார்த்ததும் பெங்களூரில் இருக்கும் விஜயலெஷ்மி மனதுக்குள்ளேயே சிரித்துக் கொள்வார்...


திகழ்ஓவியன்
ஆக 20, 2025 19:19

கிடைத்தால் வெற்றி தோற்றால் பயிற்சி தொடரும் .இது தான் நாம் டம்பளர்


Govind
ஆக 20, 2025 19:17

இதேபோல் நாய்களைக் காக்க முத்தம் கொடுத்து போராட வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை