உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / த.வெ.க., அறிவிப்பால் சீமான் கட்சி ஏமாற்றம்!

த.வெ.க., அறிவிப்பால் சீமான் கட்சி ஏமாற்றம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதோடு, எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை' என, தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.அதன் பொதுச்செயலர் ஆனந்த் அறிக்கை:த.வெ.க., தலைவர் தன் முதல் அறிக்கையிலேயே, '2026ல் நடக்க உள்ள சட்டசபை பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றுவது தான், தமிழக வெற்றிக் கழகத்தின் பிரதான இலக்கு. 'அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடக்கும் உள்ளாட்சி தேர்தல் உட்பட, எந்த தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை' என தெரிவித்துஇருந்தார்.தமிழகத்தில் ஆளும் அரசுகள், ஜனநாயக மரபுகளை பின்பற்றாமல், தங்களின் அதிகார பலத்துடன், பொதுத் தேர்தல்களை காட்டிலும், ஜனநாயகத்திற்கு எதிராக பல மடங்கு அரசியல் அவலங்களை அரங்கேற்றியே இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்று வருவது வழக்கம் என்பதையே, கடந்த கால வரலாறு நமக்கு உணர்த்துகிறது.அதன் அடிப்படையில், நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் போலவே, பிப்., 5ல் நடக்க உள்ள ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலையும், தமிழக வெற்றிக் கழகம் புறக்கணிக்கிறது. அத்துடன் எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதனால், ஈரோடு கிழக்கு தொகுதியில், தி.மு.க.,வுக்கு எதிராக களம் இறங்கியிருக்கும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமிக்கு, நடிகர் விஜய் ஆதரவளிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு பொய்யாகி இருக்கிறது.இதையடுத்து, நாம் தமிழர் கட்சியினர் ஏமாற்றம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Karthik
ஜன 18, 2025 20:53

அப்படி நடக்குமா??


Krishnamurthy Venkatesan
ஜன 18, 2025 14:42

மக்கள் சீமான் பக்கம் இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்தாலும், மக்கள் இந்த தேர்தலை பயன்படுத்தி ஆளும் கட்சிக்கு எதிராக பெருவாரியாக வாக்களித்து ஆளும் கட்சி வேட்பாளரை தோற்கடிக்க செய்ய வேண்டும். அப்போதுதான் அரசியல்வாதிகள் கொஞ்சமாவது பயப்படுவார்கள்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 18, 2025 09:28

புச்சா வந்த கச்சியோட முட்டு உனுக்கு தேவையா வாத்யாரே ????


Sampath Kumar
ஜன 18, 2025 09:14

இது ஏதிர் பார்த்தது தான் என்ன சீமாருக்கு பிடிமானம் இல்லை ஆவது போட்ட விளக்குமாறு போல அவரு ட்சி உள்ள ஆளுக பிரிந்து விட்டார்கள் அதுனால விஜய் சப்போர்ட் பண்ணுவாரு என்று எதிர் பார்த்தாரு அது நடக்கல நம்ம குரங்கார் குறிப்பிட்டது போல இருவரும் வேறு வரு சபை அதாவது குரங்கார் சொல்வது போல அய்யரும் அய்யங்காரும் வேறு சபை என்பது போல சரிதானே ரங்க மாமா


ராமகிருஷ்ணன்
ஜன 18, 2025 08:52

வெத்து வாயாலேயே அணைகட்டே கட்டும் சீமாண்டி மிக கேவலமாக தோல்வி அடைவான். மற்ற கட்சிகள் நேட்டோவுக்கு ஓட்டு போடுவார்கள்


ஆரூர் ரங்
ஜன 18, 2025 08:34

இருவரும் வெவ்வேறு சபை?.


Vijay
ஜன 18, 2025 08:33

டைரக்டா ஹீரோ தான். இந்த கதாநாயகன் பிரண்டு, அமெரிக்க மாப்பிள்ளை ரோல் எல்லாம் வந்து.


Kasimani Baskaran
ஜன 18, 2025 07:32

எங்களுக்கு ஓட்டுப்போடத விஜய் ரசிகர்கள் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டுப்போடக்கூடாது என்ற தீமக்காவின் நல்லெண்ண அடிப்படையில் இப்படி ஒரு ஏற்பாடு. அடுத்து இது போல ரஜினியையும் கட்சி ஆரம்பிக்கச்சொல்லி இதே தொழில் நுணுக்கத்தை மூலம் தீம்க்கா மற்றவர்களுக்கு கிடைக்கப்போகும் வாக்குகளை சிதறடித்து இன்புறலாம். மொத்தத்தில் தீம்க்கா நோட்டா கட்சியைக்கண்டு பயப்படுவது போல நடித்தாலும் சிறிய கட்சிகளை பார்த்து மரண பயத்தில் இருப்பது மட்டும் தெளிவாகத்தெரிகிறது. தீம்க்காவின் பயம் வாழ்க.


ramesh
ஜன 18, 2025 10:20

தாங்கள் எழுதிய கருத்தில் போலீஸ் ஸ்டேஷன் ரைட்டர் எழுதும் FIR ஐ மிஞ்சி விட்டர்கள்


Naga Subramanian
ஜன 18, 2025 07:26

தவெக திமுகவின் பி அணி என்பது உறுதி.


Barakat Ali
ஜன 18, 2025 07:21

அதாவது பொதுத்தேர்தலே விஜய் கட்சிக்கு இலக்காம் ..... ஒரு தொகுதியில் அராஜகம், முறைகேடு, தில்லுமுல்லு அத்தனையும் செஞ்சு செயிக்கிற கட்சி அதை பொதுத்தேர்தலிலும் கொஞ்சமாவது செய்ய முடியாதா ????


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை