உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சீமானிடம் நடத்தப்பட்ட விசாரணை முடிவடைந்தது

சீமானிடம் நடத்தப்பட்ட விசாரணை முடிவடைந்தது

சென்னை: நடிகை விஜயலட்சுமியை திருமணம் செய்வதாக கூறி மோசடி செய்தது மற்றும் பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வழக்கில், சீமானிடம் விசாரணை நடத்தி, போலீசார் வாக்குமூலம் பெற்றனர்.கர்நாடக மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்த நடிகை விஜயலட்சமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில், திருமண மோசடி மற்றும் பாலியல் வன்கொடுமை, நகை, பணம் பறிப்பு தொடர்பாக, 2011ல் புகார் அளித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=92z4pezs&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

ரத்து செய்ய மறுப்பு

இது தொடர்பாக சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில், 'சம்மன்' அனுப்பி, 2023ல், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமானிடம் விசாரித்து வாக்குமூலம் பெற்றனர். பின், விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்று விட்டார்.அதையடுத்து, தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என, சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், 'பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு என்பதால், இதை சாதாரண வழக்காக எடுத்துக் கொள்ள முடியாது' என கூறி, வழக்கை ரத்து செய்ய மறுத்து விட்டது.மேலும், இவ்வழக்கு தொடர்பாக விசாரணை முடித்து, 12 வாரங்களுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, போலீசுக்கும் உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து, போலீசார், சீமானுக்கு இரண்டு முறை சம்மன் வழங்கினர். கட்சி நிகழ்ச்சிக்காக தர்மபுரி சென்று இருந்த சீமான், நேற்று மாலை, 6:00 மணியளவில் சென்னை திரும்பினார். விசாரணைக்கு ஆஜராக தயாராக இருந்தார். ஆனால் போலீசார், இரவு 8:00 மணிக்கு வருமாறு கூறி விட்டனர்.இதனால், வடபழனியில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்ற சீமான், தன் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினார்.அதன் பின், அங்கிருந்து வளசரவாக்கம் காவல் நிலையம் நோக்கி புறப்பட்டார். அதற்குள், வளசரவாக்கம் காவல் நிலையத்தை சுற்றி, நாம் தமிழர் கட்சியினர் ஆயிரக்கணக்கானோர் திரண்டு விட்டனர். இவர்களை சமாளிக்க முடியாமல் போலீசார் திணறினர்.வளசரவாக்கம் காவல் நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்தன. ஸ்ரீதேவி குப்பம் சாலை மூடப்பட்டது. மூன்று இடங்களில் இரும்பு தடுப்புகள் அமைத்து, விசாரணைக்கு பின்னரே, அந்த வழியாக பொது மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

தள்ளுமுள்ளு

சீமான் கைது செய்ய இருப்பதாக தகவல் பரவியதால், அவரது கட்சியினர் மத்தியில் பதற்றம் காணப்பட்டது. பின், இரவு 9:00 மணிக்கு மேல் சீமான் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.சீமான் வந்த வாகனம், வளசரவாக்கம் காவல் நிலையத்தை நெருங்கியதும், கட்சியினர் சூழ்ந்து கொண்டனர். அப்போது, போலீசாருக்கும் கட்சியினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.அதன்பின், இரவு 10:00 மணிக்கு காவல் நிலையத்தில் ஆஜரான சீமானிடம், கோயம்பேடு துணை கமிஷனர் அதிவீரபாண்டியன் மேற்பார்வையில் விசாரணை அதிகாரிகள், 52 கேள்விகளுக்கு பதில் பெறும் வகையில் வாக்குமூலம் பதிவு செய்தனர்.அதை வீடியோ பதிவும் செய்தனர். நள்ளிரவு வரை விசாரணை நீடித்ததுபோலீஸ் ஸ்டேஷன் செல்லும் சாலை முழுவதும் சி,சி,டிவி,இக்கள், ட்ரோன் கேமிராக்கள் மூலம் அங்குள்ள சூழலை போலீசார் கண்காணித்தனர்.சீமானிடம் நடைபெறற் விசாரணையை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் ஏற்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீமான் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

விசாரணை முடிவடைந்த நிலையில் சீமான் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். விசாரணையின் போது இதுவரை கேட்கப்பட்டிருந்த பழைய கேள்விகளே கேட்கப்பட்டதாக தெரிவித்தார்.ஈவேரா கொள்கைகளுக்கு எதிராக பேசுவதால் என்னை கைது செய்ய தி.க.,விடம் இருந்து தமிழக அரசுக்கு அழுத்தம் சென்றுள்ளது. . கஷ்டத்தில் இருந்த போது நடிகையால் எனக்கு எப்படி ரூ 60 லட்சம் தர முடியும். நடிகையுடன் ஏற்பட்ட உறவு திருமணம் என்ற நிலைக்கு வரவில்லை. நடிகையுடன் 6 அல்லது 7 மாதங்கள் தான் பழக்கம் இருந்தது. நடிகை என்னை காதலித்திருந்தால் முச்சந்திக்கு வந்திருக்க மாட்டார். பாலியல் குற்றம் என்ன இருக்கிறது. விரும்பி உறவு வைத்து கொண்ட நடிகை பின்னர் பிரிந்து சென்று விட்டார்.மாண்புமிகு ஸ்டாலின் அப்பாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு சீமான் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

V.Mohan
மார் 01, 2025 16:58

சீமானாவது திரை துறையில் இருந்தார். அதனால் நடிகை தொடர்பு. அவர் விரும்பி உறவு கொண்டுவிட்டு, புகாரும் கொடுத்து பின்னர் வாபஸ் வாங்கிவிட்டார். நீதிமன்றத்துக்கு என்ன ஆச்சு? ஏன் வாபஸ் வாங்கிய புகாருக்கு விசாரணைபண்ணி சர்க்கார் பணத்தை வீணாக்குறாங்க?.ஐயா வாத்திமார்கள் ஸ்கூலுக்கு படிக்க வர பொண்ணுங்களை பாலியல் வன் கொடுமை செய்றாங்க, இப்படிட்ட்ட வாத்திகளை ஏன் வேலைக்கு வச்சிறுக்கீங்கன்னு கல்வி அமைச்சக மேலதிகாரியை ""விசாரணை"" பண்ண ""உத்தரவு""போடுங்க நீதியரசரே அரசியல், சினிமா சமாசாரங்களை சற்று நிதானமாக சிவில் வழக்குகளை இழுத்தடிப்பது போல இழுங்க. படிக்கும் குழந்தைகளை முதலில் காப்பாத்துங்க


Minimole P C
மார் 01, 2025 07:43

The complaint was lodged during 2011. Now only enquiry. Just for enquiry so much police force and traffic jam and so much harships to common man. Considering all the facts, the enquiry could have done a common place with video every thing and the matter could have completed without wasting police energy etc. Just to scar Seeman, the incident would have utalised and a deal would have arrived that not to speak of EVR.


karupanasamy
மார் 01, 2025 07:10

அப்பாவை சந்திப்பிப்பதற்குமுன் நல்ல பல்மருத்துவரை பார்த்து வாயை எந்த கிருமியும் இல்லாதவாறு நன்றாக சுத்தம் செய்துகொள்ளவும். சந்ததிப்பின்போது வாயிலுள்ளகிருமிதொற்று ஏற்படக்கூடாதல்லவா இதற்குமேல் உங்கள்வாயாச்சு அவராச்சு


Bye Pass
மார் 01, 2025 06:18

பேரறிஞர் முதல் முத்தமிழ் வித்தகர் வரை சபல பேர்வழிகள் தான்


Bye Pass
மார் 01, 2025 04:50

அந்த சாரையும் விசாரணைக்கு உட்படுத்துவார்களா ?


நிக்கோல்தாம்சன்
மார் 01, 2025 04:06

அரசை தவறான திசையில் நடத்துவதை காண முடிகிறது , 2026 ஆண்டு இதற்கான தீர்வு மக்கள் கைகளில் தான்


தாமரை மலர்கிறது
மார் 01, 2025 02:48

சீமானுக்கு அரணாக மத்திய அரசும் கோர்ட்டும் இருக்கிறது. தம்பிகள் அஞ்சிப்பதற தேவை இல்லை. நடிகை விஜயலக்ஷ்மி விரும்பி தான் சீமானுடன் உறவுவைத்து கொண்டு வாழ்ந்தார். ஏழுமுறை கருக்கலைப்புக்கு செய்ததும் அவரே. இதற்கு சீமான் எப்படி குற்றவாளி ஆகமுடியும்? ஸ்டாலின் அரசு அரசியல் பழிவாங்கலில் ஈடுபடுகிறது.


மதிவதனன்
மார் 01, 2025 02:08

அவனே பேட்டியில் நான் என்ன கன்னி கழியாத பெண்ணையே தொட்டேன் என்று சொல்லுகிறான் எவ்வளவு கே வலமானவன் இவன் அரசியல் தலைவன் வெட்கம்


Bye Pass
பிப் 28, 2025 23:37

காவல் துறை தீயா வேல செய்யறாங்க ..


தத்வமசி
பிப் 28, 2025 23:31

இதே அம்மையார் ஜெயலலிதாவாக இருக்க வேண்டும். தும்பிகள் எல்லோரையும் தட்டி தூக்கியிருப்பார். சிதறி ஓடி இருப்பார்கள். வீடியோ எடுத்தார்களாம், டுரோன் மூலம் கண்காணித்தார்களாம். யாருங்க இவர்கள் ? இந்தக் கட்சியினரால் இன்னும் ஒரு கவுசிலர் பதவி கூட வெல்வதற்கு இயலவில்லை. இவ்வளவு அலப்பறை செய்கிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை