உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்; சீமான் வலியுறுத்தல்

தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்; சீமான் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; தமிழக உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் பொய்ப் பரப்புரையால் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ள தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை; தமிழக அரசின் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு என்ற பெயரில் தர்பூசணி குறித்த தவறான தகவல்களைப் பரப்பியதால், விற்பனை குறைந்து தர்பூசணி விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது.ஒரு சில விஷமிகள் தர்பூசணியில் செயற்கை இரசாயனம் கலக்கின்றனர் என்ற புகாரில், ஒட்டுமொத்த தர்பூசணி விவசாயிகளும் பாதிக்கப்படும் வகையில் பொய்யான தகவல்களைப் பரப்பிய தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல் வன்மையான கண்டனத்துக்குரியது.கோடைக்காலத்தில் மட்டுமே நடைபெறும் பெருமளவு விற்பனையை நம்பியே நுங்கு, இளநீர், பதநீர், வெள்ளரி, தர்பூசணி உள்ளிட்ட தாகம் தணிக்கும் இயற்கை பானங்களையும், பழங்களையும் உள்நாட்டு ஏழை விவசாயிகள் விளைவிக்கின்றனர்.நம் நாட்டில் உடலுக்கு கேடு விளைவிக்கும், விலை அதிகமான பன்னாட்டு பெருநிறுவனங்கள் தயாரிக்கும் செயற்கை குளிர்பானங்கள் குளிரூட்டபட்ட கண்ணாடி அறையில் பளப்பளப்பாகப் பாதுகாப்பாக இருக்கிறது. ஆனால், நம் நாட்டு விவசாயிகள் வெயிலிலும், மழையிலும் வெம்பாடுபட்டு விளைவிக்கும் இளநீர், நுங்கு, தர்பூசணி, வெள்ளரி போன்றவை இன்றளவும் தெருவோரத்தில் கிடக்கிறது என்பதுதான் வேதனை நிறைந்த உண்மை.தற்போதுதான் மக்களுக்கு மெல்ல மெல்ல விழிப்புணர்வு ஏற்பட்டு, இயற்கை உணவுகள் மீதான ஆர்வமும், அக்கறையும் அதிகரித்து வருகிறது. உடலுக்கு எவ்வித தீங்கும் விளைவிக்காது, நலம்தரும் சத்துகள் நிறைந்த இயற்கை பானங்களையும், பழங்களையும் அதிகளவில் விற்பனையாக ஊக்கப்படுத்தி விளம்பரம் செய்ய வேண்டியது ஒரு நல்ல அரசின் தலையாயக் கடமையாகும்.ஆனால், அதற்கு நேர்மாறாக இயற்கையாக விளைவிக்கப்படும் பழங்களில் செயற்கை ரசாயனங்கள் கலக்கப்படுவதாக அரசு அதிகாரிகளே வதந்தியைப் பரப்பி, மக்களிடம் பெரும் பீதியை ஏற்படுத்தி, தர்பூசணி விளைவித்த விவசாயிகளுக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்தியருப்பது சிறிதும் அறமற்ற கொடுஞ் செயலாகும்.தவறு செய்பவர்களைக் கண்டறிந்து தண்டிப்பதை விடுத்து தமிழக தர்பூசணி விவசாயிகள் அனைவரையும் அரசு தண்டித்திருப்பது எவ்வகையில் நியாயமாகும்? அரசு அதிகாரிகளின் இத்தகைய அவதூறு பரப்புரைகளுக்குப் பின்னால் பன்னாட்டு செயற்கை குளிர்பான நிறுவனங்களின் திட்டமிட்ட சதி இருப்பதாக தமிழக விவசாயிகள் சந்தேகிப்பது மிக மிக நியாயமானதாகும்.ஆகவே, தமிழக உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளின் பொய்ப் பரப்புரையால் தர்பூசணி விற்பனை பெருமளவு குறைந்து பெரும் நட்டத்திற்கு ஆளாகியுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

எவர்கிங்
ஏப் 06, 2025 04:43

கக்கூஸ் வாயன் கூவ ஆரம்பிச்சிட்டான்


Sivaprakasam Chinnayan
ஏப் 05, 2025 21:28

கலப்படத்துக்கு எல்லாம் நஷ்ட ஈடு வழங்க முடியாது.வாழைப்பழம் கொய்யாப்பழம் மாம்பழம் எந்த பழத்தை எடுத்தாலும் கல் வைத்து தான் பழுக்க வைக்கிறார்கள்.


Sivaprakasam Chinnayan
ஏப் 05, 2025 21:26

நீங்கள் யாராவது தர்பூசணி வாங்கி அறுத்து பார்த்தீர்களா நான் பார்த்தேன் கையெல்லாம் குங்குமம் போல் கரை யாக உள்ளது இது எப்படி? வாழைப்பழம் மாம்பழம் கொய்யாப்பழம் என எல்லா பழமும் கெமிக்கலில் பழுக்க வைத்தது தான்.


Mecca Shivan
ஏப் 05, 2025 20:17

கடந்த சில வருடங்களாகவே இந்த கலப்படம் நடைபெறுகிறது.. சுகரத்துறையும் நடவடிக்கை எடுத்துவருகிறது. அப்போதெல்லாம் வாய் திறக்காத திரைக்கதை சைமன் இப்போது மட்டும் தேர்தல் வருகிறது என்று யோசித்து இந்த நாடகத்தை முன் வைக்கிறார்


vivek
ஏப் 05, 2025 17:04

மழையில் நனைந்த நெல் முட்டைக்கு கிடைக்குமா?


rama adhavan
ஏப் 05, 2025 16:35

விவசாயிகளுக்கு பல கோடி நட்டம் விளைவித்த அந்த உணவு துறை அதிகாரியை உடன் பதவி நீக்கம் செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு நட்டயீடு வேண்டும். அவர்களோ, பாமக, நாத கட்சியோ நீதிமன்றம் செல்லலாமே?


g.kumaresan
ஏப் 05, 2025 16:22

பழத்தில் ஊசி போட முடியாது .எதனை பழத்திற்கு ஊசி போட முடியும்


naranam
ஏப் 05, 2025 15:48

அதிகப் பிரசங்கி


rama adhavan
ஏப் 05, 2025 16:30

அவர் சொல்வது உண்மை. அதிகப்ரசங்கி நீ தான்.


Kanda kumar
ஏப் 05, 2025 15:24

டாஸ்மாக் விடவா மக்களுக்கு கேடு தருகிற விஷயங்கள் இருக்க போகின்றன.


sundarsvpr
ஏப் 05, 2025 14:40

பொதுவாக விவசாயிகள் நிலத்தில் நல்ல விளைச்சல் இருந்தும் நல்ல விளைச்சல் என்று கூறுவதில்லை. ரசாயன உரங்களால் நல்ல விளைச்சல் காண்கிறோம். ஆனால் நாட்டு உரங்களால் பெறப்பட்ட விளைச்சல் குறைவு. ஆனால் ருசியானது. உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. ரேஷன் கடையில் வாங்கப்பட்ட அரிசி சாதம் தண்ணீர் கொட்டி மறுநாள் ஏன் சாப்பிட நன்றாக இல்லை? காரணம் ரசாயன உரத்தால் விளைந்தவைகள் பழைய அமுது தற்காலத்தில் இல்லை என்பது வேதனைக்கு உரியது. சீமான் அவர்கள் அதிகாரிகள் குற்றம் சுமத்துவது சரியாய் இருக்காது. அவர்கள் நெருக்கப்படுகிறார்கள். அவர்களை சுட்டிக்காட்ட அரசியல்வாதிகள் தயாராக இல்லை. மக்களுக்கும் ஆர்வம் இல்லை. இந்த வேதனை யுகம் முடியும்வரை தொடரும். இது விளையாட்டு பூமி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை