உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சீமான் வருகையால் வளசரவாக்கம் ஸ்டேஷனில் பாதுகாப்பு அதிகரிப்பு

சீமான் வருகையால் வளசரவாக்கம் ஸ்டேஷனில் பாதுகாப்பு அதிகரிப்பு

சென்னை: சென்னை வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் பிப்.,28 இரவு சீமான் ஆஜராக வந்த நிலையில், தொண்டர்கள் அதிக எண்ணிக்கையில் திரண்டனர். இதனால் நுாற்றுக்கணக்கான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.கடந்த, 2011, ஜூன் மாதம், சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, திருமண ஆசை காட்டி, பாலியல் வன்கொடுமை செய்ததாக, விஜயலட்சுமி புகார் அளித்தார். இந்த விவகாரத்தில், 12 வாரங்களுக்குள் போலீசார் இறுதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5j11iijo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதனால், வளசரவாக்கம் போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த வழக்கு விசாரணை தொடர்பாக, பிப்., 27, காலை, 11:00 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என, சீமானுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர்; நேற்று ஆஜராகவில்லை. சீமானின் வழக்கறிஞர் சங்கர் ஆஜராகி விளக்கம் அளித்தார்.விசாரணைக்கு ஆஜராகாததால், வளசரவாக்கம் போலீசார், சென்னை நீலாங்கரையில் உள்ள, சீமான் வீட்டின் கதவில் மீண்டும், சம்மன் ஒட்டினர். இன்று காலை, 11:00 மணிக்கு, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது. சீமான் வீட்டில் போலீசார் ஒட்டிய, 'சம்மன்' கிழிக்கப்பட்ட விவகாரத்தில், வீட்டு பணியாளர், முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டனர்.இன்று விசாரணைக்கு ஆஜர் ஆக மாட்டேன் என சீமான் நேற்று நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார். அவர் தமிழக அரசு குறித்து கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். சென்னை ஐகோர்ட்பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக சீமான் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில் நடிகை பாலியல் புகாரில் இன்று காலை 11 மணிக்கு ஆஜராக சீமானுக்கு போலீசார் சம்மன் வழங்கி இருந்த நிலையில் சென்னை வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் இரவு ஆஜரானார். இதையொட்டி ஸ்டேஷன் முன் தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டனர். அசம்பாவிதம் தவிர்க்க, நுாற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

SAMIRAJAN PRABHAKARAN
பிப் 28, 2025 16:38

சீமான் திருமணம் விமர்சையாக பல்லாயிரம் பேர் முன்னிலையில் நடந்த போது இந்த விஜய லட்சுமி எங்கே போயிருந்தாள் தடுத்து நிறுத்த வேண்டியது தானே


ram
பிப் 28, 2025 14:14

சுபவீ சொன்ன மாதிரி திருமணத்திற்கு முன் கடந்த உறவு, itheilenna தவறு இருக்குது. அந்த சார் யாருனு சொல்லவில்லையெ இந்த திருட்டு திமுக ஆட்கள்.


Velan Iyengaar
பிப் 28, 2025 14:13

எத்துணை திமிர் இருந்தா ... நான் என்ன நேற்று வயசுக்கு வந்த பெண்ணை சோளக்காட்டுக்கு தூக்கிக்கொண்டு போய் கற்பழித்தேனா என்று கேட்பான் இந்த ஈனப்பயல் ?? அதுவும் கட்சி மகளிர் அணி பெண்களை ஊற்றி நிற்கவைத்துக்கொண்டு ஒருவன் பேசும் பேச்சா இது ?? யார் கொடுக்கும் தைரியம் ?? புழுகுமூட்டை என்பது தெரியும் ...ஆனால் இவ்வளவு கேடுகெட்டவனா ??


Ramanujadasan
பிப் 28, 2025 14:41

உமக்கு எல்லா விதத்திலும் போட்டியாக சீமான் வந்து விட்டாரே என்ற பொறாமை போலும் . இரண்டும் ஒரே கழிவு தான்


sridhar
பிப் 28, 2025 12:43

திருமணம் ஆன ஆண் பெண் கூட பிரிகிறார்கள், வெறும் காதலில் இருந்த இருவர் பிரிவது அவ்வளவு கொடூர குற்றமா . பொருளாதார ரீதியில் cheating பண்ணினால் நடவடிக்கை எடுக்கலாம் , மற்றபடி பிரிவது தவறா.


kantharvan
பிப் 28, 2025 16:08

என்னா? ஏன்னா? ஒரு அளவுக்கு மேலே முட்டு கொடுக்க முயற்சிக்காதீர்??


Ramanujadasan
பிப் 28, 2025 12:25

போலி பெயரில் உலாவி கொண்டு , தேசதுரோக சக்திகளின் ஆதரவாளராக , எரநூறு ரூபாய் கூலிக்காரனாக திரியும் உமக்கே பேண்டும் சட்டையும் தேவைப்படுகிறதே ? உம்மை விட சீமான் சில மடங்கு மேல்


Velan Iyengaar
பிப் 28, 2025 14:16

சங்கிக்கி ஒரு டஜன் ஜெலுசில் பார்சல்


Madras Madra
பிப் 28, 2025 12:14

சீமான் சிறையில் அடைக்கப்பட்டு தியாகி ஆவார் அதிக ஒட்டு பெறுவார்


Velan Iyengaar
பிப் 28, 2025 12:39

சிறை செல்வது ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்த குற்றத்துக்காக... வெளியே தெரிந்தது இந்த ஒரு பெண்மணி மட்டும் ...வெளியே தெரியாத பெண்மணிகள் லிஸ்டும் இருக்கு .....இனியும் அதிக வோட்டு பெறுவார் என்பது தமிழக மக்களை அவமதிக்கும் செயல் ...


raja
பிப் 28, 2025 13:32

இது தேவையா....


kantharvan
பிப் 28, 2025 16:11

அதெல்லாம் அந்தக்காலம் ?? இப்போயெல்லாம் சிறையிலேயே பிதுக்கி விடுவார்கள்?? வெளியே வரும்போது பயனற்ற சாமனாகிவிடுவார்?? கயல்விழி அண்ணியின் முகத்தில் அந்த கவலையை காண முடிகிறது??


ponssasi
பிப் 28, 2025 12:07

சீமானுக்கு காட்டப்படும் அணுகுமுறை, பாலியல் வழக்கில் சிக்கிய முன்னாள் காவல்துறை மற்றும் இந்நாள் காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கும் காட்டப்படவேண்டும். முன்னாள் டிஜிபி / sp மீதும் காவல்துறை உயர் பெண் அதிகாரிகளே புகார் கொடுத்ததும் அவர்களை கைது செய்யவோ சம்மன் அனுப்பியோ ஏன் விசாரிக்கவில்லை. சினிமா நடிகைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்களுக்கு இல்லையா? நீதிமன்றத்தால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட டிஜிபி எங்கே? அவர்வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் எங்கே? சீமான் குற்றவாளிதான் ஆனாலும் காவல்துறை அந்த பாலியல் குற்றத்துக்குத்தான் அவரை விசாரிக்க போகிறதா? அவர்களின் நடவடிக்கை சந்தேகமாக உள்ளது.


madhes
பிப் 28, 2025 11:47

சீமான் ஒரு பித்தலாட்டக்காரன், கிறுக்கன், அருவருப்பை பேசறவன், பைத்தியம் என்று மக்களுக்கு புரியும், காமக்கொடூரன் என்பது இனிமேலு தெரிஞ்சுடும்,


Ramanujadasan
பிப் 28, 2025 12:31

இப்படி விவரிப்பதை விட்டு விட்டு அவர் ஒரு திமுக காரன் என்று சொன்னால் போதுமே? நீங்கள் சொன்ன குணங்களை உடையவர் அவர் என மக்கள் தாமே புரிந்து கொள்வார்களே ?


Velan Iyengaar
பிப் 28, 2025 14:42

சைமன் உலகமகா பணக்கார தேர்தல்பத்திர மெகா ஊழல் bj கட்சியின் பி டீம் என்பது ஊர் அறிந்த ரகசியம் ..... ராமானுஜதாஸர் மல்லாக்க படுத்துக்கொண்டு எச்சில் துப்புகிறார் ...


Ganapathy
பிப் 28, 2025 11:40

இவனா தலைவன்? இவன் கட்டாயம் செஞ்சுருப்பான் அதான் போலீசு தொரத்துது. இல்லேன்னு மொரண்டு புடிச்சா சம்பாதிக்க கட்சியே இருக்காதே. இப்படி வீம்பு பேசித்தான் இவனை கனடா மலேசியா உட்பட பல நாடுகள் விரட்டி விட்டானுங்க. இவன் தன்னோட கராத்தே வீடியோவை ரிலீசு செஞ்சா கோர்ட்கள் போலீசு மகளீர் ஆணையம் எல்லாம் அதக் கண்டு பயந்துருமா?.


R.PERUMALRAJA
பிப் 28, 2025 11:12

நீதிமன்றத்தில் ஆஜாரானதற்கு 2% வாக்குகள் கூடுதலாக பெறப்போகிறார் சீமான்


kantharvan
பிப் 28, 2025 16:12

வாய்ப்பு இல்ல ராஜா?? வாய்ப்பு இல்ல ??


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை