உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருத்துவப் பணியாளர் நியமனம் செய்ய புதிய தேர்வு வாரியம்

மருத்துவப் பணியாளர் நியமனம் செய்ய புதிய தேர்வு வாரியம்

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள டாக்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டியதன் அவசியம் குறித்து, மார்க்சிஸ்ட் உறுப்பினர் அண்ணாதுரை, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் முத்துக்குமரன் உள்ளிட்ட உறுப்பினர்கள், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினர்.

இதற்கு பதிலளித்தார் சுகாதார அமைச்சர் விஜய்: அரசு மருத்துவமனைகளில், 15 ஆயிரத்து 689 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவை, படிப்படியாக நிரப்பப்படும். முதற்கட்டமாக, சிறப்பு டாக்டர்கள், 380 பேரும், டாக்டர்கள், 479 பேரும், 164 நர்சுகளும், விரைவில் நியமிக்கப்படுவர். சுகாதாரத் துறைக்கு தேவைப்படும் பணியாளர்களை நியமனம் செய்யும் வகையில், 'மருத்துவ பணியாளர் நல வாரியம்' என்ற அமைப்பு, விரைவில் ஏற்படுத்தப்படும். தனியார் நர்சிங் கல்லூரிகளில் படித்தவர்களை, அரசு மருத்துவமனைகளில் பணி நியமனம் செய்ய, கோர்ட் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை