உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருந்து கடையில் தாய்ப்பால் விற்பனை: கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்

மருந்து கடையில் தாய்ப்பால் விற்பனை: கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வர்த்தக ரீதியில் தாய்ப்பால் விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், சென்னை மாதவரத்தில் மருந்து கடை ஒன்றில் பிளாஸ்டிக் பாட்டில்களில் தாய்ப்பாலை சட்டவிரோதமாக விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து உணவுத்துறை அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தனர்.தாய்ப்பால் சுரக்காத தாய்மார்களுக்கு உதவும் வகையில், அரசு சார்பில் தாய்ப்பால் வங்கிகள் நடத்தப்படுகின்றன. இவை பெரும்பாலும் அரசு மருத்துவமனைகளிலேயே அமைந்திருக்கும். இந்நிலையில் ஆன்லைன் வாயிலாகவும், தனியார் அமைப்புகள் மூலமாகவும், தாய்ப்பால் விற்பனை நடந்து வருகிறது. இது விதிமீறல் என, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர அமைப்பு கூறியுள்ளது. எனவே, வர்த்தக ரீதியில், தாய்ப்பால் விற்பனை செய்யப்படுவதற்கு, மத்திய அரசு தடை விதித்துள்ளது. கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.இந்த நிலையில், சென்னை மாதவரத்தில் சட்டவிரோதமாக தாய்ப்பால்கள் பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யப்படுவதாக உணவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, உணவுத்துறை மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், கே.கே.ஆர் கார்டன் பகுதியில் செம்பியன் முத்தையா என்பவரின் கடையில், 50க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் தாய்ப்பால்கள் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடித்தனர். இதனையடுத்து, அனைத்து பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள், நடத்திய விசாரணையில், புரதச்சத்து மருந்தகள் விற்பனை செய்ய மட்டுமே கடைக்கு உரிமம் தரப்பட்டுள்ள நிலையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Raj S
மே 31, 2024 18:26

திருட்டு திராவிட மாடல் ஆட்சில தடை செய்யப்பட்டதை செய்யறது ஒன்னும் புதுசு இல்லையே... கஞ்சா, கள்ள சாராயம்... இப்போ இது... எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாது...


தத்வமசி
மே 31, 2024 14:58

திருமணத்திற்கு முன் கண்ட கண்ட உணவை பெண்கள் சாப்பிடக் கூடாது என்பது இதற்காகத் தான். வாய்க்கு ருசியாக இருக்க விற்பதில் எது ருசி அதிகம் என்று தேடக்கூடாது. திருமணமாகி கர்ப்பகாலத்தில் நல்ல சத்தான உணவை சாப்பிட வேண்டும். நல்ல எண்ணங்கள் வேண்டும். அதனால் தான் மாதாமாதம் ஏதாவது ஒரு விசேஷம் செய்து வைக்கிறார்கள். நல்ல ஊட்டசத்து வேண்டும். ஆனால் நடப்பது எல்லாம் தலைகீழ். இப்போது தாய்ப்பால் வரை சென்று விட்டது. அதே நேரம் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் தர மாட்டேன் என்று கூறுபவர்களின் எண்ணிக்கை கூடி வருவதாக தகவல். இளமை கரைந்து விடுமாம். அடுத்தவருக்கு குழந்தை பெற்றுத் தருவது, தாய்ப்பால் விற்பது.. மனித இனத்தை எங்கோ கொண்டு செல்கிறது. விற்றவர்கள் என்ன ஆனார்கள் ?


RAMAKRISHNAN NATESAN
மே 31, 2024 14:39

டிடிஎஃப் வாசன் க்கு ஒரு சட்டம் ...... யூ ட்யூபர் இர்ஃபான் க்கு ஒரு சட்டமாம் .....


RAMAKRISHNAN NATESAN
மே 31, 2024 14:36

சட்டமீறல், விதிமீறல் இவற்றில் முன்னணியில் உள்ளது தமிழ்நாடு ....


Lion Drsekar
மே 31, 2024 14:06

இதே ஒன்று உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவுப்பொருட்களின் கலக்கப்படும் வண்ணநிறங்களையும், கலப்பட எண்ணை , இவைகளையும் தடுக்க ஆவன செய்யவேண்டும், இவைகள்தான் புற்றுநோய்க்கு ஒரு காரணம் . விவசாயப்பொருட்களின் மீதும் ஒவ்வொரு இலைகளிலும் தெளிக்கப்படும் தெளிப்பார்கள் , பாதுகாப்பான்கள் என்ற பெயரில் தெளிக்கப்படும் கொடிய நச்சுடைய மருந்துகளின் தரத்தையும் சோதித்து , மனித உடலுக்கு ஊறுவிளைவிக்காத அளவுக்கு பாதுகாப்பதால் பிறப்பவர்கள் அனைவருமே ஆரோகிக்கமான உணவை , காய்கனிகளை உண்டு நீடூடி எந்த ஒரு வியாதியும் இல்லாமல் வாழலாம் . இன்றைக்கு மருத்துவமனைகள் மிக மிக அதிக அளவில் வானளாவிய கட்டிடங்களாக வளர்வதற்கு கலப்பட உணவே காரணம் . யாருமே தடுக்கவும் முன்வருவதில்லை, தடுக்க முன்வருபவர்கள் என்ன சொன்னாலும் பயனாளிகளுக்கு காது கொடுத்து கேட்பதில்லை . இதுதான் மிக மிக வருத்தம் அளிக்கிறது . வந்தே மாதரம்


Anantharaman Srinivasan
மே 31, 2024 12:38

நாட்டில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். சட்டத்துக்கு யாரும் பயப்படுவது கிடையாது. 17 வயது சிறுவன் புனேவில் கார் ஒட்டிய விவகாரம் மற்றும் அதை சார்ந்த சம்பவங்கள் ஒரு உதாரணம்.


மேலும் செய்திகள்