உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூரை பெயர்ந்து விழுந்தபோது குழந்தைகள் இல்லை; கடவுளுக்கு நன்றி!

கூரை பெயர்ந்து விழுந்தபோது குழந்தைகள் இல்லை; கடவுளுக்கு நன்றி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் புதியதாக திறக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ளது முன்னூர் மங்கலம் என்ற கிராமம். இந்த கிராமத்தில் ரூ.15 லட்சம் செலவில் அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டது. கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு முன் திறந்து வைக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடம் தற்போது பயன்பாட்டில் இருக்கிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=uzzzdfln&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், இன்று அந்த அங்கன்வாடி கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. வழக்கமாக அங்கு குழந்தைகள் இருக்கும் சூழலில், இந்த அசாதாரணமான சம்பவத்தின் போது அந்த அறையில் பள்ளிக்குழந்தைகள் யாரும் இல்லை. இதனால் நல்வாய்ப்பாக குழந்தைகள் காயமின்றி தப்பினர். இதுகுறித்து தகவலறிந்த பெற்றோர் கடும் அதிருப்தி தெரிவித்து உள்ளனர். அவர்கள் கூறியதாவது: கட்டிடம் கட்டி, 3 மாதங்கள் கூட முழுமை பெறவில்லை. அதற்குள்ளாக புதிய கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்துள்ளது. கட்டிடத்தின் உறுதித்தன்மை மீது கேள்விக்குறி எழுந்துள்ளது.எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், கல்வித்துறையினர் உரிய விசாரணை நடத்தி ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கன்வாடி கட்டிடத்தின் உறுதித்தன்மையை சோதனை செய்த பின்னரே குழந்தைகளை அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

MUTHU
நவ 12, 2024 18:09

கூடவே உடன்பிறப்புகளின் மைண்ட் வாய்ஸ். கடவுளுக்கு நன்றி. ஹைய்யா இன்னும் சில மாதங்களில் பள்ளியினை இடித்துவிட்டு வேறு கட்டிடம் கட்ட நமக்கு ஒப்பந்தம் கிடைக்கும்.


MUTHU
நவ 12, 2024 18:01

கடவுளுக்கு நன்றி. உடன்பிறப்புகள் கூட மைன்ட் வாய்ஸ். ஹைய்யா இன்னும் சில மாதங்களில் பள்ளியினை இடித்துவிட்டு வேறு கட்டிடம் கட்ட நமக்கு ஒப்பந்தம் கிடைக்கும்.


MUTHU
நவ 12, 2024 18:01

கடவுளுக்கு நன்றி. உடன்பிறப்புகள் கூட மைன்ட் வாய்ஸ். ஹைய்யா இன்னும் சில மாதங்களில் பள்ளியினை இடித்துவிட்டு வேறு கட்டிடம் கட்ட நமக்கு ஒப்பந்தம் கிடைக்கும்.


MUTHU
நவ 12, 2024 18:02

கூடவே உடன்பிறப்புகளும் மைண்ட் வாய்ஸ். கடவுளுக்கு நன்றி. ஹைய்யா இன்னும் சில மாதங்களில் பள்ளியினை இடித்துவிட்டு வேறு கட்டிடம் கட்ட நமக்கு ஒப்பந்தம் கிடைக்கும்.


Bhaskaran
நவ 12, 2024 09:46

இந்த கட்டிடத்தை கட்டிய பொறியாளருக்கு அண்ணா விருது நிச்சயம்


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 12, 2024 08:34

சென்னையில் பழமையான மருத்துவக்கல்லூரியின் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததற்கு முட்டுக்கொடுத்த திரு. வைகுண்டேஸ்வரன் என்ற போலிப்பெயர் கொண்ட உடன் பிறப்பு, திருவண்ணாமலி கட்டிட நிகழ்வுக்கு முட்டுக்கொடுக்க எங்கிருந்தாலும் உடனடியாக மேடைக்கு வரவும்


Anonymous
நவ 12, 2024 10:33

அருமையாக அழைப்பு விடுத்தீர்கள்


R.MURALIKRISHNAN
நவ 11, 2024 23:02

வரும் தேர்தலில் திமுகவை தமிழ்நாட்டை விட்டு விரட்டியடிப்போம்


sundaran manogaran
நவ 11, 2024 22:47

என்ன இடிந்து விழுந்தாலும் 200ரூபாய்தரும் தி.மு.க வுக்கு தான்... பெரியார் இல்லை யென்றால் எனக்கு சுயமரியாதை என்பது என்ன என்று தெரியாமல் போயிருக்கும்.... சுயமரியாதைக்கு விலை ரூ200என்றும் தெரியாமல் போயிருக்கும்.


sundaran manogaran
நவ 11, 2024 22:41

திராவிட மாடல் ஆட்சியில் இதெல்லாம் நடக்கும் ஆனால் கடவுள் தான் காப்பாற்றினார் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.


Oru Indiyan
நவ 11, 2024 22:24

நாம் என்ன திட்டினாலும், வால் நிமிராது...


சமீபத்திய செய்தி