உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 10 நாள் கெடு விதித்த செங்கோட்டையன் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கம்!

10 நாள் கெடு விதித்த செங்கோட்டையன் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கம்!

சென்னை: அதிமுகவை ஒன்றிணைக்க அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ்க்கு கெடு விதித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.அதிமுகவில் பிரிந்து கிடக்கும் அணிகளை ஒன்றிணைக்க வேண்டும் என்று அக்கட்சியில் இருந்து அவ்வப்போது கலகக்குரல்கள் எழுவது வழக்கம். அதில் லேட்டஸ்ட்டாக குரல் எழுப்பியர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=u902nabi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவ்வவ்போது சட்டசபையிலும், கட்சியின் நிகழ்ச்கிகளிலும் பட்டும் படாமல் நடந்து கொண்டிருந்த செங்கோட்டையன், அதிமுகவில் பிரிந்து இருந்த அணிகளை ஒன்றிணைக்க வேண்டும் என்று குரல் எழுப்ப ஆரம்பித்தார்.நேற்று நிருபர்களை சந்தித்த அவர், அணிகளை ஒன்றிணைக்க அதிமுகவின் பொதுச் செயலாளர் இபிஎஸ்க்கு 10 நாட்கள் கெடு விதிப்பதாக நேரடியாகவே அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். இந் நிலையில் அதிமுகவில் உள்ள கட்சி பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளர் இபிஎஸ் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கட்சியின் அமைப்புச் செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் உள்பட கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. செங்கோட்டையன் ஆதரவாளர்கள் சிலரது கட்சிப்பொறுப்புகளும் பறிக்கப்பட்டுள்ளன.அவர்களின் விவரம் வருமாறு: கே. ஏ. சுப்ரமணியன் - நம்பியூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி - நம்பியூர் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் குறிஞ்சிநாதன் - கோபிசெட்டிபாளையம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர்தேவராஜ் -அந்தியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் - அத்தாணி பேரூராட்சி கழக செயலாளர் வேலு - அத்தாணி பேரூராட்சி கழக துணைச் செயலாளர் மோகன்குமார் - ஐடி பிரிவு துணை செயலாளர், ஈரோடு திண்டுக்கல்லில் இபிஎஸ் தங்கியிருக்கும் தனியார் ஹோட்டலில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, தங்கமணி, விஜயபாஸ்கர், நத்தம் விசுவநாதன், சீனிவாசன், காமராஜ் ஆகியோர் இன்று காலை முதல் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை முடிவில், செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வேதனை இல்லை; மகிழ்ச்சி: செங்கோட்டையன் கட்சியின் பொறுப்புகளில் இருந்து நீக்கியதால் வேதனை இல்லை; மகிழ்ச்சியே. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்; தர்மம் தழைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் கருத்து கூறினேன். என்னிடம் விளக்கம் கேட்காமலேயே நடவடிக்கை எடுத்துள்ளனர். விளக்கம் கேட்டிருக்க வேண்டும் என் நலன் கருதி பேசவில்லை. கட்சியின் நலன் கருதித்தான் பேசினேன். அதிமுகவை ஒருங்கிணைக்கும் எனது பணி தொடரும். கட்சிப்பதவியை பறிப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை. இதற்கெல்லாம் காலம் பதில் சொல்லும்.: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 44 )

pakalavan
செப் 06, 2025 23:52

உள்ளதும போச்சி லொள்ளக்கன்னா்


N PALANISAMY
செப் 06, 2025 20:03

இதுதான் ஜெயா ஸ்டைல்.... வாழ்த்துக்கள் பழனி.... எ-2 அதாங்க வேலைக்காரி - வேலைக்காரியாகவே இருக்கட்டும்... இப்போது அமலாக்கத்துறை அதாங்க ஈ டி புதியவழக்கு போட்டிருக்கிறது.... பரப்பனஅக்ரஹார சிறை அதாவது பழக்கப்பட்ட இடம் கூட ரெடி... அப்புறமென்ன சர்வண்ட் ரெடியாகட்டும்....


கனோஜ் ஆங்ரே
செப் 06, 2025 16:53

“நண்டு கொழுப்பெடுத்தா.... வலையில் தங்காது”...ன்னு கிராமப் பழமொழி உண்டு...? அதுபோல... யானை என்று தன்னை நினைத்துக் கொண்டது, தன் தலைல தானே மண்ணை வாரி போட்டுக்குது...?


Vasan
செப் 06, 2025 15:07

வாழ்க ஸ்டாலின். வாழ்க உதயநிதி. வாழ்க இன்பநிதி. வளர்க தி.மு.க. வளர்க தமிழ் நாடு. வளர்க தமிழ் நாட்டு மக்கள்.


Durai Kuppusami
செப் 06, 2025 14:23

நீக்கியது நூறு சதவிகிதம் சரி இதுக்கு எல்லாம் காலம் நடத்தக்கூடாது.இவன் யார் அவருக்கு 10 நாட்கள் கெடு வைக்க.கட்சியில் குழப்பம் உண்டு பண்ண அனுப்பப்பட கைக்கூலி.பதவி மட்டுமே பறிக்கப்பட்டது ரொம்பவும் சரியானது


GMM
செப் 06, 2025 14:20

திமுக தன்னை மீறாத கட்சியுடன் கூட்டணி அமைத்து சிறுபான்மை மக்களுக்கு சட்டம் மீறி, சலுகை கொடுத்து வாக்கு வங்கி தக்க வைத்து வருகிறது. வாக்கு வங்கி உள்ள தென் மாவட்ட முக்குலத்தோர், வட மாவட்ட வன்னியர் மற்றும் சிறுத்தை தலித் சமூக ஊழல் முக்கியஸ்தர்கள் திமுகவிடம் அடங்கியும் பிற கூட்டணி கட்சிகளிடம் அரசியல் ஆதிக்கம் செலுத்த விரும்புகின்றனர். விசாரணை அமைப்புகள் மூலம் விடை கண்டால், பல சமூக மக்கள் ஒன்றுபட்டு திமுக எதிர் அணியை வெற்றி பெற செய்வர். மீண்டும் அண்ணாமலையை ஏற்கும் நேரம். எடப்பாடி முதல்வர் வேட்பாளர் என்ற அறிவிப்பை நீக்கும் நேரம்.


Tamilan
செப் 06, 2025 14:16

கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நாயடி சண்டை முற்றிவிட்டது . எம்ஜிஆர் ஜெயலலிதாவின் ஆன்மாவால் கூட இனி அதிமுகவை காப்பாற்றமுடியாது


Tamilan
செப் 06, 2025 14:05

அதிமுகவுக்கும் கூட்டணியில் உள்ள இந்துமதவாதிகளுக்கும் தான் இழப்பு


T.sthivinayagam
செப் 06, 2025 13:54

இனி இவரை திமுகாவின் பி டீம் விஜயின் சி டீம் தினகரன் டீ டீம் என்று பேச ஆரம்பித்து விடுவார்கள்


Haja Kuthubdeen
செப் 06, 2025 13:51

இங்கே எடப்பாடிக்கு எதிரா கூவுபவர்கள் புரட்சிதலைவர் ..அம்மா மீது பற்று இல்லாத கும்பல்.இரட்டை இலைக்கு எதிராக வாக்களித்தவர்கள்.இந்த சிலருக்காக எடப்பாடி அடிபணிய தேவை இல்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை