வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இவர்களுக்கு வாரி வாரி கொடுத்ததெல்லாம் கொடுப்பதெல்லாம் போதாதா? வேண்டும் என்றால் இவர்களே அமைத்து கொள்ள வேண்டியதுதானே?
சென்னை:ஓய்வுபெற்ற ஆசிரியர், அலுவலர்களுக்காக, 'மூத்தோர் நல வாரியம்' அமைக்க வேண்டும் என்பது உட்பட, 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு ஓய்வுபெற்ற கல்லுாரி ஆசிரியர் கழகம் சார்பில், சென்னை, எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகே, நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு, அதன் துணை தலைவர் மாது தலைமை வகித்தார். இதில், 'பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி.,யின் 5வது ஊதிய திருத்த அடிப்படையில், 14,940 ரூபாய் உயர் துவக்க ஊதியத்தை, தகுதிஉள்ள அனைத்து கல்லுாரி ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும். 'பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும். ஓய்வுபெற்று, 70 வயது அடைந்தவர்களுக்கு 10 சதவீதமும், 75 வயதை அடைந்தவர்களுக்கு, 15 சதவீதமும் ஓய்வூதிய தொகை வழங்க வேண்டும். 'மூத்த ஆசிரியர்கள், அலுவலர்கள் நலனுக்காக, ஒரு மூத்தோர் நல வாரியத்தை, தமிழக அரசு அமைக்க வேண்டும்' என்பது உட்பட, 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதுகுறித்து, சங்கத்தின் துணை தலைவர் மாது கூறியதாவது: கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறோம்; எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனியும் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை எனில், அடுத்த கட்டமாக மறியல், உண்ணாவிரத போராட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இவர்களுக்கு வாரி வாரி கொடுத்ததெல்லாம் கொடுப்பதெல்லாம் போதாதா? வேண்டும் என்றால் இவர்களே அமைத்து கொள்ள வேண்டியதுதானே?